பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, August 13, 2011


நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை 
பாதித்துள்ள கிறீஸ் பூதம்


நாட்டின் பல இடங்களிலும் கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சினை தலை விரித்தாடுகிறது.இதன் காரணமாக பல இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்துடன் அப்பாவிகள் சிலர் கொல்லப்பட்டும் பலர் தாக்கப்பட்டுமுள்ளனர். இச் சம்பவம் தினமும் தொடர் கதையாகிவருகிறது.
ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலர் கொள்ளை ,திருட்டு, வழிப்பறி மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

நடிகை ருக்மணி தேவியின் கல்லறையும்

மனித நாகரிகமற்ற அரசியல்வாதியும்



மறைந்த பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் பாடகியுமான ருக்மணி தேவியின் கல்லறை உட்பட சிலை இனந் தெரியாத நபர்களால் 12-8-2011 அன்று உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது.

Friday, August 5, 2011


வீரகேசரி பத்திரிகை 81 ஆவது அகவையில்


இலங்கையின் பிரபல தமிழ் தினசரி பத்திரிகையான வீரகேசரி பத்திரிகை 80 வருடங்களை பூர்த்தி செய்து இன்று 81 அகவையில் காலடி எடுத்து வைக்கிறது.
இப் பத்திரிகை 1930 ஆம் ஆண்டில் ஆரம்பமானது. இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அது அளப்பரிய சேவைகளை செய்துள்ளது. நடு நிலைமை தவறாது அது தரும் செய்திகளை யாவரும் பாராட்டுவர்.
நவீன கணனி மயமான பத்திரிகையாக அது மாறியுள்ளதுடன் இணையத் தினூடாகவும்  அது உலகெல்லாம் வளம் வருகிறது. வீரகேசரி நிறுவனம் மேலும் பல வெளியீடுகளையும் வெளியிடுகிறது.

Tuesday, August 2, 2011


வையகம் போற்றும் வான் மறை

இனிய திருக்குர்ஆனே!
இறை மறையே!
v   
நீ!
உலகின் இருளை
ஒழிக்க வந்த பேரொளி!
v   
ஆராய்பவர்களுக்கு
அட்சய பாத்திரம்!
v   
அறிவின் வேர்
வேருக்கு நீர்!
v   
அஞ்ஞானத்தின் பலி பீடம்
விஞ்ஞானத்தின் ஆய்வு கூடம்!
v   
ஆத்மீக சூரியன்
லௌகீக சந்திரன்!
v   

சாந்தி நபியின்
சமாதான தூது!
v   

Monday, August 1, 2011

​( நோன்பு தொடர்பாக நான் எழுதிய இக் கட்டுரை 1-8-2011 வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. )
புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்
"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.

புண்ணியம் மொழியும் கண்ணியமிகு மாதமான இம்மாதம் பாவக் கறையகற்றும் மாதமாகும். பதினொரு மாதமும் நாம் செய்த பாவங்களை கழுவி பரிசுத்தப்படுத்துவதற்காக இனிய நோன்பு வருடத்தில் ஒரு தடவை வருகிறது.

Thursday, July 28, 2011


படங்களின் மேல் கிளிக் செய்யுங்கள் பெரிதாகத் தெரியும்

Wednesday, July 27, 2011

படங்களின் மேல் கிளிக் செய்யுங்கள் பெரிதாகத் தெரியும்




Tuesday, July 12, 2011


கவிப் பேரரசு வைரமுத்து வாழ்கவே!

(இன்று வைரமுத்துவின் 58 ஆவது பிறந்த தினம்)

தமிழ் உலகின்

கவிப் பேரரசனே!

கவிதைகளுக்குள்ளும்

பாடல் வரிகளுக்குள்ளும்

வைரங்களையும்

முத்துக்களையும்

விதைத்து வைத்திருப்பவனே!

கவிதைகளை பாமரனின்

காலடிகளுக்கு கொண்டு சென்றவனே!

உனது

காதல் பாடல்களும்

கவிதை வரிகளும்

காதலர்களின்

தேசிய கீதமாக அல்லவா

ஒலித்துக்கொண்டிருக்கிறது.


உன் கவிதைகளில்

கொஞ்சும் சந்தம்!

நீ!

தமிழ் பேசும் மக்களின் சொந்தம்!

வாழ்க நீடூழி!!!

கவியாக்கம் -கலாநெஞ்சன் ஷாஜஹான்

Monday, July 11, 2011


கண்ணீர்

கண்கள்

வெளியேற்றும் கழிவு!

·

பெண்களின்

ஆயுதம்!

·

சிறுவர்களின்

பாதுகாப்புக் கவசம்.

சாதிக்கும் சக்தி!

·

மனச் சுமைகளை

குறைக்கும் மருந்து!

·

இதய வேதனையின்

இரத்தக் கசிவு!

·

போலி மனிதர்கள்

அணியும்

மூக்குக் கண்ணாடி!

·

விழி வானம்

துன்பத்திலும்

ஆனந்தத்திலும்

சிந்தும் மழை!

கவியாக்கம்கலாநெஞ்சன் ஷாஜஹான்

Sunday, July 10, 2011

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு வித்தை

இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும் இடையிலான சுவாரசியமான போட்டி ஒன்று அண்மையில் நடந்தது.
இது ஒரு வித்தியாசமான போட்டியாகும். விக்கற் தடிகளின் மேல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கிளாஸின் விளிம்பில் வைக்கப்பட்டுள்ள நாணயத்தை கண்ணாடி கிளாஸ் கீழே விழாமல் வீழ்த்த வேண்டும்.
இந்த போட்டியில் வெற்றி பெறப் போவது யார்? காணொளியில் பாருங்கள்.

Saturday, July 9, 2011


போராட்டம்

அன்பே!
சாதியைவென்ற
எமது காதல்
இந்த தேசத்தை போல
பெருமைக்குரியது என்றாய்.
உண்மை!
அதனால்தான்
நாம் இருவரும்
இன்னும் இணைந்து விடாமல்
எமது பெற்றோர்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கவியாக்கம்- கலாநெஞ்சன் ஷாஜஹான்

மனிதன்
ஒரு வனம்!

எல்லா மிருகங்களும்
வாழும் கூடு
அவன் மனம்!
குரங்கு போல் தாவும்
அவன் குணம்!
விலங்கு போல்
கூட்டம் கூட்டமாய் பிரியும்
அவன் இனம்!
சிங்கம் போல் வேட்டையாடுவான்
அது பணம்!
ஒரு நாள் இறப்பான்
அப்போது அவன் பிணம்!

கவியாக்கம்- கலாநெஞ்சன் ஷாஜஹான்