பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, August 18, 2012

சென்று வா இனிய ரமழானே!



புண்ணியம் பொழிந்த ரமழானே எமை(ப்)
   பிரிந்து நீயும் சென்றாயே
கண்ணியம் மிக்க நோன்பதனை - நீ
   கரங்களில் ஏந்தி வந்தாயே!
பண்ணிய பாவக் கறை யகற்றி - எமை(ப்)
   பக்குவப்படுத்திச் சென்றாயே
மண்ணகம் மீதில் அருள் சொரிந்து - பின்
   மறைந்தாய் ஏன் ரமழானே?

             --------------------    

Thursday, August 16, 2012

“ஏன் இந்த மௌனம்?”


லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
16-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( “ஏன் இந்தமௌனம்?” )

Wednesday, August 15, 2012

கல்வி மாணிப்பட்டம் (B.Ed)பெற்றபோது


3-4-2012 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது எனக்கு கல்வி மாணிப்பட்டம் (B.Ed) வழங்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை.




Friday, August 10, 2012

“மீண்டும் ஒரு தாஜ்மஹால்”


இலண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
9-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை ( “மீண்டும் ஒரு தாஜ்மஹால்”)

கவி சொல்பவர் - ஸைபா மலீக்


Thursday, August 9, 2012

ஹாரிபட்டரின் சாதனையை முறியடித்த பெண் எழுத்தாளரின் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவல்.


ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக

Monday, July 30, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 12-7-2012

இலண்டன் தமிழ் வானொலியில்“ வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில்

12-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை

கவி சொல்பவர் - ஸைபா மலீக்





இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான எனது கவிதை

 இலண்டன் தமிழ் வானொலியில்
வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்26-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை


கவி சொல்பவர் - ஸைபா மலீக்





Thursday, July 26, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் கலாநெஞ்சனின் கவிதை

இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும்
“வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.அவற்றை நீங்களும் கேட்கலாம்.மூன்று நிகழ்ச்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன.குரல் கொடுத்திருப்பவர் அறிவிப்பாளர் ஸைபா மலீக்


28-06-2012 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில் 




Friday, July 6, 2012

'இன்னும் உன் குரல் கேட்கிறது' - “நாளைய தீர்ப்புகள்” எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா


'இன்னும் உன் குரல் கேட்கிறது' (கவிதைத் தொகுதி) “நாளைய தீர்ப்புகள்” (சிறுதை தொகுதி) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Sunday, July 1, 2012

தொற்றல் அல்லாத நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம்


     - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

ஆரோக்கியம் ஒரு சிறந்த செல்வமாகும். எத்தனை கோடி பணம் இருந்தாலும் நோய் நொடிகளுடன் வாழ்ந்தால் எம்மிடமுள்ள செல்வத்தை கூட சரியாக அனுபவிக்க முடியாமல் போய் விடலாம்.

Saturday, June 30, 2012

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலைய அறநெறி பாடசாலை மாணவர்களது நடனம்


சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவும் புத்தக கண்காட்சியும் 30-6-2012 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் நடைபெற்றது.

Monday, June 25, 2012

அஷ்ரப் ஷிஹாப்தீனின் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்”- நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளரும், கவிஞரும் , பிரபல அறிவிப்பாளருமான அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்பு நூலான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 30.06.2012 சனிக்கிழமை பி.ப. 4.45க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Friday, June 22, 2012

நீர்கொழும்பில் மாட்டின் முகத் தோற்றத்தில் மீன்


நிர்கொழும்பு கடற்பகுதியில் மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை கொண்ட மீன் ஒன்று  பிடிக்கப்பட்டுள்ளது.
அதனை நீர்கொழும்பு தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை சேர்ந்த எம். அஸ்ரப் என்பவர்

Wednesday, June 13, 2012

'இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்'

- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள்.
ஒருவருடைய  வாழ்வில் மிக இனிமையானதும்மங்களகரமானதும், மறக்க முடியாததுமான விடயம்தான்

Thursday, June 7, 2012

பல்கலைக்கழக பகிடிவதைகள் கொண்ட காணொளி வெளியானமை ஏற்படுத்தியுள்ள தாக்கம்

 போராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பகிடிவதைகள் கொண்ட வீடியோ காட்சிகள் அண்மையில் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளில் காண்பிக்கப்பட்டன.

Saturday, May 19, 2012

வானொலிக் குயிலுக்கு கலாநெஞ்சனின் கவிதாஞ்சலி



கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
                     

(தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012  அன்று  கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இது.)


வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?

Tuesday, May 15, 2012

கானக் குயில் இராஜேஸ்வரி சண்முகத்திற்கு கவிதாஞ்சலி


 இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012 அன்று கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

 நிகழ்வில் கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.கவியரங்கில் நான் (கலாநெஞ்சன் ஷாஜஹான்) பாடிய கவிதை
   

Sunday, May 13, 2012

இன்று நடைபெற்ற மறைந்த வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா (படங்கள்)


இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்

Thursday, May 10, 2012

வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா


  இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது .