பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, February 13, 2014

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு விமோசனமும் நன்மையும் கிடைக்கும் - மேல் மாகாண சபையின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் கார்த்திகேசு விக்னேஸ்வரம்


நேர்காணல்: எம்.இஸட்.ஷாஜஹான்

(வத்தளை - மாபொல முன்னாள் நகர சபை உறுப்பினரும்> ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட பிரதான செயலாளரும்> மேல்மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளருமான கார்த்திகேசு விக்னேஸ்வரம் 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட செவ்வி. 9-2-2014 அன்று பிரசுரமானது)

கேள்வி : நீங்கள் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணிக்கு சென்றீர்கள்?

பதில்: ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மணோ கணேசன்தான் இதற்கு காரணம். அவரது அரசியல் செயற்பாடுகளால் கவரப்பட்டே அவரது கட்சியில் இணைந்து கொண்டேன். தமிழ் மக்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பவர் மணோ கணேசன். அவர் பதவிகளுக்கும் பணத்திற்கும் விலை போகாதவர். சகல இன மக்களுக்கும் உதவி புரிபவர். மக்களின்  குரலாக ஒலிப்பவர். துணிந்து செயற்படுபவர். இவை என்னை கவர்ந்தன. அதன் காரணமாக அவரது கட்சியில் சேர்ந்தேன்.

கேள்வி :  நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வந்த பிறகு என்ன வித்தியாசத்தை  காண்கிறீர்கள்?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் மிகப் பெரும் கட்சியாகும். அக்கட்சி சகல இனத் தலைவர்களும் சேர்ந்து உருவாக்கிய கட்சியாகும். அது சகல இனத்தவர்களதும் கட்சியாகும். ஆயினும்> காலப் போக்கில்

இந்த அரசு மக்களை பிரித்து ஆட்சி செய்கிறது -நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து

நேர்காணல்: எம்.இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)

நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சிபிரதான அமைப்பாளரும்> நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவரும்> மேல்மாகாண சபையின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட செவ்வி. 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 26-1-2014 அன்று பிரசுரமானது  

கேள்வி: மேல்> தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன. நீங்களும் ஐக்கிய தேசியக் கட்சி;யின் சார்பில்  கம்பஹா மாவட்ட வேட்பாளராக களமிறங்கவுள்ளீர்கள். இந்த தேர்தலில்  ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுமா? இந்த தேர்தல் தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்; : நிச்சயமாக எமது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.  அதற்காக சிறந்த வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். மக்களும் மாற்றத்தை விரும்புகின்றனர்.
இன்று, ஆளும் கட்சி பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு அரசியல்

மேல் மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் அமோக வெற்றி பெறும் - நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிதி மேயர் எம்.எஸ்.எம். சகாவுல்லா

நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)

(நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிதி மேயரும்> ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தின்  நீர்கொழும்பு தலைவரும்,; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீர்கொழும்பு மத்தியக் குழுவின் பொருளாளருமான எம்.எஸ்.எம். சகாவுல்லா  தமிழ்த் தந்திக்கு வழங்கிய விஷேட செவ்வி. 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 26-1-2014அன்று பிரசுரமானது)

கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடுங்கள்?

பதில்1992 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலுக்கு வந்த காலப் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீர்கொழும்பு, போருதொட்ட கிளையின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டடேன். அதனைத் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2006 ஆம் ஆண்டு

மேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக அமையும் - முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;யின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளர் ஷாபி ரஹீம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;யின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் தமிழ் தந்திக்கு வழங்கிய விசேட செவ்வி. 19-1-2014 அன்று பிரசுரமானது

நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)

உங்களது அரசியல் பிரவேசம்  மற்றும் வெற்றிகள் பற்றி கூறுங்கள் ?

நான் வர்த்தகத்துறையில்  ஈடுபட்டுக்  கொண்டிருந்த காலப் பகுதியில்  2004 ஆம் ஆண்டு  நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில்  போட்டியிடுமாறு புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய  முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் ஜனாப் நியாஸ் என்னை

அந்த தேரத்ல் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.பின்னர் அவர் என்னை கட்சித் தலைவர் ரஹுப் ஹக்கீமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

Saturday, December 28, 2013

'காவிய பிரதீப' பட்டம் தொடர்பாக - வீரகேசரி பத்திரிகை செய்தி.

அகில இலங்கை கவி சம்மேளனத்தினால் அடியேனுக்கு 'காவிய பிரதீப' பட்டம் வழங்கப்பட்டமை தொடர்பாக வீரகேசரி  பத்திரிகையில் இன்று சனிக்கிழமை (28-12-2013) இடம்பெற்றுள்ள  செய்தி.


Wednesday, December 25, 2013

மஹா ஓய 'வெந்நீர் ஊற்று கிணறுகள்’

கிழக்கு மாகாணத்தின் மஹா ஓய பிரதேச சபைக்குட்பட்ட  பகுதியில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்று கிணறுகளைப் பார்ப்பதற்காக அடியேன் கடந்த செவ்வாய்க்கிழமை  சென்ற போது எடுத்த படங்கள் இவை. அங்கு ஏழு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Wednesday, December 18, 2013

சென்னையில் நடைபெற்ற ''பாம்புகள் குளிக்கும் நதி'' கவிதை நூல் அறிமுகவிழா.

கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் அறிமுகவிழா  அண்மையில் இணை இயக்குனர் வேடியப்பன் ஏற்பாட்டில் சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெற்றது.

Monday, December 16, 2013

சிறுகதையில் இரண்டாமிடம்

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியில் (2013) நடத்திய அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் அடியேனுக்கு சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் கிடைத்துள்ளது. 

இற்கான பரிசளிப்பு நிகழ்வு (13-12-2013) வெள்ளிக்கிழமை முற்பகல் தேசிய நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கவிடமிருந்து அதற்கான

Saturday, December 7, 2013

விடுதலை கீதம் ஓய்ந்து விட்டது


ஒரு
கறுப்புச் சூரியன்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

முழு நிலவு
முழுமையாய்
மறைந்தது
கால(னின்) மேகத்திற்குள்..!

சிறையை வென்றவரை
காலன்
சிறைப்படுத்திக் கொண்டான்!

ஒரு சகாப்தம்
நிறைவுக்கு வந்தது!
ஒரு நீண்ட வரலாற்றின்
இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டு விட்டது.
விடுதலை கீதம்
ஓய்ந்துவிட்டது.

Friday, November 15, 2013

பொது நலவாய மாநாட்டை முன்னிட்டு 75 அடி நீளமான பட்டம்

பொது நலவாய மாநாட்டை முன்னிட்டு   நீரகொழும்பு தளுபத்தையில் அமைந்துள்ள வாலிப குற்றவாளிகள் சீர்த்திருத்த நிலையத்தில் 75 அடி நீளமான பட்டம் ஒன்று தயாரிக்கப்ட்டுள்ளது.

சீர்த்திருத்த நிலையத்தின் உத்தியோகத்தர்களும் அங்குள்ள இளைஞர்களும் ஒன்றிணைந்து இந்த பட்டத்தை

Friday, November 8, 2013

தேசிய கல்வி நிருவக கல்வி முதுமாணி மாணவர்களின் பிரியாவிடை வைபவம்

தேசிய  கல்வி நிருவகத்தில் கல்வி முதுமாணி உயர் பட்டப் பாடநெறியை தொடர்ந்த 2012 - 2013 கல்வி ஆண்டு மாணவர்களின் ஒன்று கூடல்; மற்றும் பிரியாவிடை வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை (8-11-2013) முற்பகல் தேசிய  கல்வி நிருவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Saturday, October 26, 2013

'மூவிதழ் மலர்' இறுவட்டு வெளியீட்டு விழா

 'மூவிதழ்; மலர்'  என்ற மகுடத்தில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை மாலை சிங்கள மெல்லிசைப் பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது.
நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயத்தின் உதவிப்

Saturday, October 12, 2013

புனித ஹஐ் பெருநாள்

இன்றைய 13-10-2013 'தமிழ்த் தந்தி' வாரப் பத்திரிகையில் புனித ஹஐ் பெருநாளையிட்டு எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது.


Sunday, September 29, 2013

வயம்ப தேர்தல் களம் ஒரு பார்வை

 எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed                            


எல்லோரும் எதிர்பார்த்தபடி நடந்து முடிந்த வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு

Sunday, September 22, 2013

சாகித்திய விழாவில் பரிசு பெற்மை தொடர்பாக பத்திரிகைகளில் பிரசுரமான செய்திகள்

நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவில் அடியேன் பரிசு பெற்றமை தொடர்பாக வீரகேசரி மற்றும் தமிழ்த் தந்தி’ பத்திரிகைகளில் 21-9-2013 மற்றும் 22-9-2013 அன்று பிரசுரமான செய்திகள்.

Thursday, September 12, 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா- 2013

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை(12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு

பிரதேச இலக்கிய கலை பெருவிழாவில் கலாநெஞ்சனுக்குப் பரிசு

நீர்கொழும்பு பிரதேச இலக்கிய கலை பெருவிழா இன்று வியாழக்கிழமை (12-9-2013) நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர்  ஏ.கே. ஆர். அலவத்த தலைமையில் நடைபெற்றது.
அரச இலக்கிய கலை பெரு விழாவை முன்னிட்டு

Thursday, September 5, 2013

இது ஒரு தேர்தல் காலம்

 ‘தமிழ் தந்தி’  வாரப் பத்திரிகையில் 1-9-2013 அன்று பிரசுரமான கவிதை 


நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவில் பரிசு


 மெட்ரோ நிவ்ஸ்’ பத்திரிகையில் 5-9-2013 அன்று பிரசுரமான செய்தி