நீர்கொழும்பு நகரில்
அமைந்துள்ள தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். அத்துடன்;
பெரியமுல்லையில் அமைந்துள்ள 'மஸ்ஜித் பஸ்ல்' முஸ்லிம் பள்ளிவாசலில் (Ahmadiya Muslim Mosque) அதிகாலை 4.20 மணியளவில்
புத்தாண்டையிட்டு விசேட தொழுகை , உரை மற்றும் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன. மௌலவி
அஸ்மத் அஹம்மத் புத்தாண்டு நற்சிந்தனை உரையை நிகழ்தினார்.
Saturday, December 31, 2016
Saturday, December 24, 2016
உலகின் மிக உயரமான நத்தார் மரம் (வீடியோ)
உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு
காலி முகத்திடலில் இன்று கோலாகலமாக திறந்து
வைக்கப்பட்டது.
இந்த நத்தார் மரம் சுமார் 325 அடி
உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார
மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெரும் எண்ணிக்கையான மக்கள் நத்தார்
மரத்தை பார்க்க வந்தவாறு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள
நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு தெரிவித்துள்ளது.
Saturday, December 17, 2016
காலஞ்சென்ற கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரருக்கு திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்திய முஸ்லிம்கள்
நீர்கொழும்பு நகரின் பிரதான விகாரையான
அங்குருகாரமுல்ல போதிராஜாராம விகாரையின்
விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் (62 வயது) கடந்த செவ்வாய்க்கிழமை (13) இயற்கை எய்தினார்.
நீர்கொழும்பில் வாழும் சகல இன, மத மக்களினதும்
பெருமதிப்பை பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி
விகாரையின் விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார். அவர் அகில இலங்கை சமாதான நீதவானாக
சேவை புரிந்ததுடன் பல்வேறு சமூக பணிகளையும் ஆற்றி வந்தார்.
Wednesday, December 14, 2016
உலகம் போற்றும் சமாதானத் தூதர் முஹம்மத் நபி
(12-12-2016 அன்று இக்கட்டுரை வீரகேசரியில்
பிரசுரமானது.)
- எம்..இஸட். ஷாஜஹான்
உலகம் போற்றிப் புகழும் உத்தமத் தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்களின் ஜனன தினத்தை உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் இன்று (12-12-2016) கொண்டாடுகின்றனர்.
நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும்
தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய
தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம்
உடையவராக இருக்கின்றீர் (அல்குர்ஆன் 68:4)
நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் காலமானார்
நீர்கொழும்பு நகரின்
பிரதான விகாரையான அங்குருகாரமுல்ல
போதிராஜாராம விகாரையின்
விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை இயற்கை
எய்தினார்.
நீர்கொழும்பில்
சகல இன மக்களினதும் பெருமதிப்பை
பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி விகாரையின்
விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார்.
இறுதிக்கிரியைகள்
சனிக்கிழமை (17) மாலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, November 30, 2016
வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா (படங்கள்)
நீர்கொழும்பு
கல்வி வலயத்தின் கட்டானைக் கோட்டத்தைச் சேர்ந்த வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின்
ஒளி விழா பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் இன்று புதன்கிழமை (30) பாடசாலையின்
பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
அருட் தந்தை அமில கோமிஸ், அருட் சகோதரிகள், தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின்
அதிபர் பிரிட்டோ மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Sunday, November 27, 2016
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை
அடுத்து தீ விபத்து இடம்பெற்ற புனரமைப்பு செய்யப்படும் ஆறு மாடிக் கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த வந்த எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக
மூடப்பட்டுள்ளது.
புனரமைப்பு செய்யப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தின் கீழ் பகுதியில்
கடந்த வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்தது.
மின்சாரம் விநியோகிக்கும் (பெனல்போர்ட்) அறையில்
Wednesday, February 3, 2016
68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் - video
இன்று கொழும்பு
காலிமுகத்திடலில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய
கீதம் இசைக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டுக்கு
பின்னர் முதல் தடவையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949 ஆண்டு இடம்பெற்ற
சுதந்திர தின வைபமொன்றின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த அமைச்சரவைக்
கூட்டத்தின் போது தேசிய கீதம் தமிழிலும், பாடலாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.இந்தத்
தீர்மானத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தூய்மையான ஹெலஉறுமய
கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்பன்பில ஆகியோர் கடும் எதிர்ப்புக்களைத்
தெரிவித்திருந்தனர்.
Thursday, January 28, 2016
Wednesday, January 27, 2016
சக்தி, சிரஸ தொலைக்காட்சி சேவைகளின் சிறந்த சிறந்த 'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளருக்கான விருது எம்.இஸட். ஷாஜஹானுக்கு
கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களில் சிறந்த 'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளர்களாக
தெரிவு செய்யப்பட்ட மூவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கம்பஹா மாவட்டத்திற்கான விருது
எனக்கு (எம்.இஸட். ஷாஜஹான்) வழங்கப்பட்டது.
Wednesday, December 23, 2015
மனித குலத்தை சீர்த்திருத்திய மாநபி - எம்.இஸட்.ஷாஜஹான்
உலகிற்கு
அருட்கொடையாக உதித்த உலகம் போற்றும் உத்தமத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது
ஜனன தினம் இன்றாகும்.
முஹம்மத் நபியவர்கள் மனித குலத்தில் மாபெரும்
புரட்சியை ஏற்படுத்தியவராவார். அவர்களின் வருகையே மனித குல மீட்சிககு
அடித்தாளமிட்டது.
அண்ணல் நபியவர்கள்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில்
பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள்
அனுப்பப்பட்டார்கள்.மனிதப் பண்பாட்டையே உயர்த்திக் காட்டிய உத்தமர் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் என்பதை சரித்திரம்
புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறது.
ரஸ்ய தத்துவ மேதை
டால்ஸ்டாய் என்பவர் மனிதனை எடைபோடும்
அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது
(ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Friday, November 27, 2015
கட்டானை கந்தவலை பிரதேசத்தில் ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்தது
கட்டானை,
கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில்
ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளது.
இச்சம்பவம்
இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பிரதேசவாசிகள்
தெரிவிக்கின்றனர்.
இந்த கோபுரம்
ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர்
காலத்தில் இது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புராதன சின்னங்களில் ஒன்றாக
பிரகடனப்படுத்தப்பட்ட 60 அடி உயரமான இந்த கோபுரம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்
காரணமாக தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
Saturday, November 21, 2015
பிரதேச, மாவட்ட சாகித்திய விழா போட்டிகளில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு நான்கு பரிசில்கள்

திறந்த போட்டிப் பிரிவில் கவிதை மற்றும் பாடலாக்கம்
ஆகிய போட்டிகளிலேயே எனக்கு இரண்டு முதலாமிடங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் கம்பஹா
மாவட்ட செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மாவட்ட சாகித்திய கலா மகோற்சவத்திற்காக
(2015) நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளிலும் அடியேனுக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. கம்பஹா
மாவட்டத்தில்
Friday, November 13, 2015
திரும்பிப்பார்க்கின்றேன். முஸ்லிம் சகோதரர்களே அல்லாவின் நாமத்தால் அவர்களை மன்னித்துவிடுங்கள். யாழ்ப்பாணம் உங்களை அழைக்கட்டும். முஸ்லிம் வட்டாரத்தில் உங்கள் பாங்கோசை ஒலிக்கட்டும். இரண்டு குழந்தைகள் உலகிற்குச்சொன்ன ஞானோபதேசம் - முருகபூபதி - அவுஸ்திரேலியா
எமது
ஊரில் எமது வீட்டுக்கு அருகாமையில் காமாச்சோடை என்ற இடம் இன்றும் அதேபெயருடன் அழைக்கப்படுகிறது. கடற்கரையை அண்டியிருக்கும் இந்த இடத்தில்தான் பள்ளிவாசல், முஸ்லிம் பாடசாலை, மீன்கடை, கூட்டுறவுச்சங்கத்தின் அரசிமூடைகள் பாதுகாக்கப்படும் பெரிய களஞ்சிய மண்டபம், மரக்கறி சந்தை, இறைச்சிக்கடை, கிங்ஸ் தியேட்டர் , கள்ளுத்தவறணை, விளையாட்டு மைதானம் யாவும் இருந்தன.
ஒருகாலத்தில்
இந்த இடத்தில் அமைந்திருந்த ஒரு காமாட்சி அம்மன் கோயிலை கடலால் வந்து ஆக்கிரமித்த போர்த்துக்கீசர் இடித்துவிட்டனர். அதன் சுவடே மறைந்துவிட்டதாக எனது பாட்டி சிறுவயதில் சொல்லியிருக்கிறார்.
தற்பொழுது அவ்விடத்தில் நிறைய மாற்றங்கள் நேர்ந்துவிட்டன.
மீன்கடை, இறைச்சிக்கடை, அரிசிக்களஞ்சியம், கிங்ஸ் தியேட்டர் என்பன மறைந்துவிட்டன.
ஆனால், இன்றும் அங்கே பள்ளிவாசலும், பாடசாலையும் இயங்குகின்றன. பள்ளிவாசல் தெருவில் காலாதிகாலமாக முஸ்லிம் மக்களும் செறிந்துவாழ்கிறார்கள்.
Sunday, November 1, 2015
வாழ்த்துப்பா
( நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளி விழா 'கலை விழா' ஞாயிற்றுக்கிழமை (1-11-2015) மாலை அஹ்மதியா ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அடியேன் வாழ்த்துப் பா வாசிக்கும் காட்சியும், சபையோரும்)
வெள்ளி விழாக் காணும்
அஹ்மதிய்யா பள்ளிக் கூடமே
துள்ளி;த் திரியும் பாலகர்கள்
அறிவைத் தேடும் கூடமே!
வண்ணத்துப் பூச்சிகள்
பறக்கும் சோலையே
சின்னஞ் சிறு சிறுவர்கள்
கல்வி கற்கும் சோலையே!
சீர் கல்வி நற்பண்பு
பாலர் வகுப்பிலே
வேர் பதிக்கும் நிச்சயமாய்
‘அஹ்மதிய்யா' வகுப்பிலே!
Tuesday, September 29, 2015
நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழா -2015 இல் எனக்கு 3 பரிசுகள்
கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நீர்கொழும்பு பிரதேச செயலகம் ஏற்பாடு
செய்திருந்த 'நீர்கொழும்பு பிரதேச
சாகித்திய மகோற்சவம்' இன்று செவ்வாய்க்கிழமை (29-9-2015) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச
செயலாளர் ஏ.கே.ஆர். அலவத்த தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர,
மேல் மாகாண சபை
உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். பிரபல சிங்கள
கலைஞரும் அறிவிப்பாளரும் பாடலாசிரியருமான
வசந்த துக்கன்னாரால விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு சாகித்தியம் தொடர்பாக
உரையாற்றினார்.
Wednesday, July 29, 2015
உலக நிலா உதிர்ந்தது
(டாக்டர் அப்துல் கலாம் மறைவு
27-7-2015)
உலக நிலா
உதிர்ந்தது!
பாரத மண்ணின்
அறிவியல் சூரியன்
விண்ணகம் புறப்பட்டது!
கனவு கண்ட
ஞான விழிகள்
மூடிக் கொண்டன
நிரந்தரமாய்....
ஒரு வரலாற்றுப் புத்தகத்தின்
இறுதி அத்தியாயம்
முற்றுப் பெற்றது.
'அக்கினிச் சிறகை'
தந்த ஆளுமை
பறந்து போனது
பாரதம் துறந்து!
கனவு காண
கற்றுத் தந்த
கனிந்த இதயம்
கனவாகிப் போனது.
எங்கள்
நினைவாகிப் போனது.
Sunday, July 19, 2015
புனித ரமழானை மறவோமே!
இறை மறை அருளப் பெற்ற
இனிய நல் ரமழானே!
அருள் மாரி பொழிந்து வந்த
அற்புத ரமழானே!
இருள் நீக்கி ஒளி தந்த
உன்னத ரமழானே!
இறை வனவன் நேசத்;தை
பெற்றுத் தந்த ரமழானே!
இச்சைகளை அடக்கச் செய்த
இங்கித ரமழானே!
அச்சங் கொள் இறைவன் மீது
ஏன்று சொன்ன ரமழானே!
கஷ்டங்களை உணர்ந்து கொள்ள
களம் அமைத்த ரமழானே!
நஷ்டப்பட்ட மனிதருக்கு
நலங் கொடுத்த ரமழானே!
Saturday, July 18, 2015
மனிதனைப் புடம் போட்ட ரமழான் மாத நோன்பின் இனிய பெருநாள்
(18-7-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை.)
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஓரு மாதம் முழுதும்
நோற்றுவிட்டு இன்று நாங்கள் இனிய நோன்புப்
பெருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.
புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதத்திற்கு விடை கொடுத்து விட்டு இனிய ஈதுல்; பித்ர் பெருநாளை கொண்டாடுகிறோம். ஆம்! 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டுவிட்டு இன்று நாங்கள்
நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும்
தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல
புரிந்து, முஸ்லிம்கள்
ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை
கொண்டாடுகின்றோம்.
Subscribe to:
Posts (Atom)










