பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, June 1, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம் சிறைச்சாலைக்கு அமைச்சர் சுவாமிநாதன் திடீர் விஜயம்: நேரடி ரிப்போர்ட்


 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருநது நான்கு விளக்கமறியல் கைதிகள் கடந்த  செவ்வாய்க்கிழமை (30-5-2017) அதிகாலை  1.30 மணியளவில் தப்பியோடியமையை அடுத்து சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலில் துளையை (ஓட்டையை) எற்படுத்தி  கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியுள்ள கைதிகள் பல்வேறு  சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.
சத்துர மதுசங்க (25 வயது), விபுல சுரங்க முனசிங்க (19 வயது), பி. ஜயகுமார். (26 வயது), மொஹமத் நவுபர் தவுபீக் முஹம்மத் நஸீம் (26 வயது) ஆகியோரே

Tuesday, May 30, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் இன்று   (30-5-2017) அதிகாலை 1.30 மணியளவில் தப்பியோடியுள்ளனர்.
 சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலை உடைத்துக் கொண்டு கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிய வருகிறது. அந்த மதிலில்  ஒன்றரை அடி துளையை (ஓட்டையை) எற்படுத்தி  இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியுள்ள கைதிகள் பல்வேறு  சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருபவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டுள்ளவராவார்.

Saturday, April 22, 2017

நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நீர்கொழும்பில் நடைபெற்ற தமிழ், சிங்கள புத்தாண்டு விழா விளையாட்டுப் போட்டிகள்

மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில்  தமிழ், சிங்கள புத்தாண் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (22-4-2017)  நீர்கொழும்பில் நடைபெற்றது.
 நீர்கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து செத் சரண அமைப்பு, கொழும்பு கரிடாஸ் அமைப்பு  ஆகியன இணைந்து இந்த புத்தாண்டு விழாவை நீர்கொழும்பு கொட்டுவ மைதானத்தில் நடத்தின.
இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், செத் சரண அமைப்பு, கொழும்பு கரிடாஸ் அமைப்பு  ஆகியவற்றின் முக்கியஸ்த்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, April 14, 2017

சித்திரை புத்தாண்டையிட்டு நீர்கொழும்பு ஆலயங்களில் இடம்பெற்ற விசேட பூஜைகள்

சித்திரை புத்தாண்டையிட்டு நீர்கொழும்பில் அமைந்துள்ள ஆலயங்களில் இன்று (14) காலை விசேட பூஜைகள் இடம்பெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையானோர்  பங்குபற்றினர்.

 நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ சிங்கமா காளி அம்பாள் ஆலயம் ஆகியவற்றில்  இன்று (14-4-2017)  காலை இடம்பெற்ற

Thursday, April 13, 2017

60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குமாறு வலியுறுத்தி சைக்கிளில் சாதனைப் பயணம்

 இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் இன, மத, மொழி பாகுபாடின்றி போதுமான அளவு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை, அரசாங்கம் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் சகல முதியவர்களும் சுயகௌரவத்துடனும். நிம்மதியாகவும் வாழ வகை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தின் கவனத்தை இந்த விடயம் தொடர்பாக ஈர்க்கும் நோக்கில் 1515 கிலோமீற்றர் சாதனைப் பயணத்தை சைக்கிளில் ஆரம்பித்துள்ள வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த  தர்மலிங்கம் பிரதாபன் நேற்று (12-4-2017) இரவு 8 மணியளவில்   கொழும்பு நோக்கி செல்லும் வழியில் நீர்கொழும்பு நகரை வந்தடைந்தார்.

Friday, February 10, 2017

தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் கலை விழா (படங்கள்)

 நீர்கொழும்பு தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலய மாணவர்களின் கலை விழா வெள்ளிக்கிழமை (10-2-2017) மாலை  நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில்  தலைவர் ஜி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் , வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர். எம்.இஸட். ஷாஜஹான்தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் செல்வகுமார் , நுவரெலிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி எஸ்.பாமினி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Wednesday, January 11, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு (படங்கள்)

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில்  புதிய மாணவர்கள் தரம் இரண்டில் கற்கும் மாணவர்களால் மலர்ச் செண்டு வழங்கி வரவேற்கப்படுவதையும், ஆசிரியர்களால் வகுப்பறைக்கு அழைத்துச் செல்லப்படுவதையும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாற்சோறு வழங்குவதையம்,

Thursday, January 5, 2017

நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்கு நத்தார் பரிசு வழங்கிய மாணவர்கள்

நீர்கொழும்பு வலய  கல்விக் காரியாலயத்தினால் நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்காக   பமுனுகம கொன்ஸல்வேஸ் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (5) நடத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தின் போது அந்த பாடசாலையினால்  பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு நத்தார் பரிசு வழங்கப்பட்டது.
கொன்ஸல்வேஸ் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ஆனந்த விதான மற்றும் கல்லூரியின் மாணவர் தலைவர்களினால் நத்தார் பரிசு வழங்கப்பட்டதுடன் நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Saturday, December 31, 2016

நீர்கொழும்பு நகரில் புத்தாண்டு சமய நிகழ்ச்சி (PHOTOS)

 நீர்கொழும்பு  நகரில்  அமைந்துள்ள தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். அத்துடன்; பெரியமுல்லையில் அமைந்துள்ள 'மஸ்ஜித் பஸ்ல்' முஸ்லிம் பள்ளிவாசலில் (Ahmadiya Muslim Mosque) அதிகாலை 4.20 மணியளவில் புத்தாண்டையிட்டு விசேட தொழுகை , உரை மற்றும் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன. மௌலவி அஸ்மத் அஹம்மத் புத்தாண்டு நற்சிந்தனை உரையை நிகழ்தினார்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புதிய ஆண்டு சகலருக்கும் நன்மைகள் தருகின்ற ஆண்டாக அமையட்டும்.

வாழ்த்துக்களுடன்

எம். இஸட். ஷாஜஹான் (KALANENJAN SHAJAHAN)



Saturday, December 24, 2016

உலகின் மிக உயரமான நத்தார் மரம் (வீடியோ)

உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று  கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெரும் எண்ணிக்கையான மக்கள் நத்தார் மரத்தை பார்க்க வந்தவாறு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதேவேளை, கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு தெரிவித்துள்ளது.

Saturday, December 17, 2016

காலஞ்சென்ற கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரருக்கு திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்திய முஸ்லிம்கள்

நீர்கொழும்பு நகரின் பிரதான விகாரையான அங்குருகாரமுல்ல  போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் (62 வயது) கடந்த செவ்வாய்க்கிழமை (13) இயற்கை எய்தினார்.  
 நீர்கொழும்பில் வாழும் சகல  இனமத  மக்களினதும் பெருமதிப்பை பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி விகாரையின் விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார். அவர் அகில இலங்கை சமாதான நீதவானாக சேவை புரிந்ததுடன் பல்வேறு சமூக பணிகளையும் ஆற்றி வந்தார்.

Wednesday, December 14, 2016

உலகம் போற்றும் சமாதானத் தூதர் முஹம்மத் நபி

(12-12-2016 அன்று   இக்கட்டுரை வீரகேசரியில் பிரசுரமானது.)

-     எம்..இஸட். ஷாஜஹான்

உலகம் போற்றிப் புகழும் உத்தமத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் இன்று (12-12-2016) கொண்டாடுகின்றனர்.
நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (அல்குர்ஆன் 68:4)

நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் காலமானார்


நீர்கொழும்பு நகரின் பிரதான விகாரையான அங்குருகாரமுல்ல  போதிராஜாராம  விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.

 நீர்கொழும்பில்  சகல  இன மக்களினதும் பெருமதிப்பை பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி விகாரையின் விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார்.

இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை (17) மாலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 30, 2016

வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா (படங்கள்)

நீர்கொழும்பு கல்வி வலயத்தின் கட்டானைக் கோட்டத்தைச் சேர்ந்த வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் இன்று புதன்கிழமை (30) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட் தந்தை அமில கோமிஸ், அருட் சகோதரிகள், தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பிரிட்டோ மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, November 27, 2016

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்   கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து  தீ விபத்து இடம்பெற்ற  புனரமைப்பு செய்யப்படும் ஆறு மாடிக் கட்டடத்தில்  தற்காலிகமாக இயங்கி வந்த வந்த எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புனரமைப்பு செய்யப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தின் கீழ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை  திடீரென தீப்பிடித்தது. மின்சாரம் விநியோகிக்கும் (பெனல்போர்ட்)  அறையில்

Wednesday, February 3, 2016

68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் - video

இன்று கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949 ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின வைபமொன்றின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது தேசிய கீதம் தமி­ழிலும், பாடலாம் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.இந்தத் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ, தூய்­மை­யான ஹெல­உ­று­மய கட்­சியின் தலை­வரும் எம்.பி.யுமான உதய கம்­பன்­பில ஆகியோர் கடும் எதிர்ப்­புக்­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

Wednesday, January 27, 2016

சக்தி, சிரஸ தொலைக்காட்சி சேவைகளின் சிறந்த சிறந்த 'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளருக்கான விருது எம்.இஸட். ஷாஜஹானுக்கு

 சக்தி தொலைக்காட்சி சேவை, சிரஸ தொலைக்காட்சி சேவை, எம்.ரி.வி. தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின்  'யூ ரிப்போர்ட்' (News 1 st U- report)   செய்திப் பிரிவின்  ஏற்பாட்டில் மேல் மாகாணத்திற்கான சிறந்த   'யூ ரிப்போர்ட்' (U- report) நிருபருக்கான (U- report Eagle 2014/2015 Award)  விருது வழங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-1-2016) களுத்துறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களில் சிறந்த   'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மூவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கம்பஹா மாவட்டத்திற்கான விருது எனக்கு (எம்.இஸட். ஷாஜஹான்) வழங்கப்பட்டது.

Wednesday, December 23, 2015

மனித குலத்தை சீர்த்திருத்திய மாநபி - எம்.இஸட்.ஷாஜஹான்

உலகிற்கு அருட்கொடையாக உதித்த உலகம் போற்றும் உத்தமத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஜனன தினம் இன்றாகும்.
 முஹம்மத் நபியவர்கள் மனித குலத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவராவார். அவர்களின் வருகையே மனித குல மீட்சிககு அடித்தாளமிட்டது.
அண்ணல் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.மனிதப் பண்பாட்டையே உயர்த்திக் காட்டிய உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை  சரித்திரம் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறது.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.