Tuesday, March 1, 2011
Thursday, February 17, 2011
Wednesday, January 26, 2011
புதிய சிறகுகள் லங்கா கலை விழாவில் விருது

25-1-2011 அன்று கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற புதிய சிறகுகள் லங்கா கலை விழாவில் விருது கிடைத்தது.
கலை விழாவையிட்டு திறந்த போட்டியாக நடத்தப்பட்ட பாடல் இயற்றுதல் போட்டியியில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளமைக்காக விருது வழங்கப்பட்டது.அத்துடன் நான் எழுதிய ஆய்வு கட்டுரைக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மனித உரிமை தொடர்பான போட்டி நிகழ்ச்சிக்காக ஆய்வு கட்டுரை சமர்பித்திருந்தேன்.
Friday, December 31, 2010
Happy New Year-2011
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்துக்கள்

புத்தாண்டே வா!
சில நம்பிக்கை பூக்களை
தூவி விட்டு வரும்
புத்தாண்டே வா!
மாற்றங்ளை நம்பியே
ஏமாற்றங்ளை சந்தித்த
வருடங்கள் போல் அல்லாது
ஆரோக்கியமாய் வா
புதிய ஆண்டே!
நம்பிக்கை தரும்
உன் புதிய உதிப்பில்
உறுதியாய் தங்கியிருக்கிறது
எமது தேசத்தவர்களின் நல்வாழ்வு!!
இனிய ஆண்டே!
இனிமைகளை தா ...!!!
Tuesday, November 16, 2010
Saturday, July 24, 2010
Tuesday, November 24, 2009
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற
தொலைக் காட்சி நாடக பிரதியாக்கப் போட்டியில் விருது
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 1999 ஆம் ஆண்டு இளைஞர் விருது வழங்கள் விருது விழாவுக்காக அகில இலங்கை ரீதியில் நடத்திய தொலைக் காட்சி நாடக பிரதியாக்கப் போட்டியில் நான் முதலாம் இடம் பெற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் விருது பெறும் காட்சி.பரிசளிப்பு நிகழ்வு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
தொலைக் காட்சி நாடக பிரதியாக்கப் போட்டியில் விருது
Sunday, November 15, 2009
Friday, October 23, 2009
2002 ஆம் ஆண்டு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஆசிரியர் தின கௌரவிப்பின் போது மேல்மாகான முதமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடமிருந்து பரிசு பெறும் காட்சி.

1999 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பிதேச சாகித்திய விழாவில் கவிதை போட்டியில் முதலாம் பரிசு பெறும் காட்சி.நீர்கொழும்பு மேயர் ஆனந்த முனசிங்க பரிசு வழங்குகிறார்.
கல்வி அமைச்சு அகில இலங்கை ரீதியில் நடத்திய சுனாமி தொடர்பான பாடலாக்கப் போட்டியில் நான் முதலாமிடம் பெற்றேன். 1-8-2005 அன்று தேசிய நூலபிவிருத்தி சபையின் தலைவர் குனசேனவிதானவினால் 25 ஆயிரம் ரூபா பரிசு வழங்கப்படும் காட்சியும், பரிசு பெற்ற ஏனைய கவிஞர்களுடன் உள்ள காட்சியும்.

1993 ஆம் ஆண்டு சிங்களத் திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவுடன்.

1993 ஆம் ஆண்டு சிங்களத் திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவுடன்.

Tuesday, September 22, 2009
"ஏன் இந்த மௌனம்" வெளியீட்டு விழா
எனது நான்காவது கவிதைத் தொகுதியான “ஏன் இந்த மௌனம்" வெளியீட்டு விழா 27-11-1999 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலைஞர் கலைச்செல்வன், கவிஞர் கலைவாதி கலீல், கவிஞர் மேமன் கவி , கவிஞர் இளநெஞ்சன் முர்ஸிதீன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் கணேசலிங்கம், பாடசலை ஆசிரியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். கலைஞர் கலைச்செல்வன், கவிஞர் கலைவாதி கலீல் ஆகியோர் நூல் விமர்சனம் செய்தனர். கவிஞர் இளநெஞ்சன் முர்ஸிதீன் கவி வாழ்த்து நிகழ்த்தினார்.அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் சில வருமாறு.

Subscribe to:
Posts (Atom)