பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, March 27, 2012

இலங்கையில் காதல் திருமணங்களில் 30 சதவீதம் தோல்வியில்?



25 வயதிற்கும் குறைந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்கள் 75 சதவீதம் தோல்வியில் சென்று முடிவடைவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Monday, March 26, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகம் அக்கினியுடன் சங்கமம்


காலம் சென்ற மூத்த ஒலிபரப்பாளர் வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகத்தின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு கலாபவனம் ஆகியவற்றில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகள் மாலை ஆறு மணியளவில்

Saturday, March 24, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி அம்மாவுக்கு கவிதாஞ்சலி


 (சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அன்னாருக்கான கவிதாஞ்சலி இது)
      கவியாக்கம் :- சாமஸ்ரீ தேசகீர்;த்தி கலாநெஞ்சன் ஷாஜஹான்


வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?

ஓ.... ராஜேஸ்வரி சண்முகம் (அம்மா) !
நீங்கள்
தேனில் குரல் நனைத்து
வார்த்தைகளைக் கோர்த்து பேசும் போது

Sunday, February 19, 2012

நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்


பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80 . உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார்.

Saturday, January 28, 2012

சாமஸ்ரீ தேச கீர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு

அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ தேச கீர்த்தி பட்டம் வழங்கி என்னை கௌரவித்தது.
இந்த பட்டமளப்பு விழா நேற்று சனிக்கிழமை (28-1-2012) பிற்பகல் 1.30 மணிக்கு இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் நடைபெற்றது.
அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் சாமஸ்ரீ பட்டமளிப்பு விழா


அகில இன நல்லுறவு ஒன்றியம் தொடர்ச்சியாக 18 ஆவது வருடமாக நடத்திவரும் சாமஸ்ரீ தேசிய பாராட்டு விழா நேற்று சனிக்கிழமை இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் அதன் தலைவர் சாமஸ்ரீ சரத் மலவர ஆராச்சி தலைமையில் நடைபெற்றது.

Thursday, January 19, 2012

வசந்தம் தொலைக்காட்சியில் கலாநெஞ்சன் ஷாஜஹான்

எதிர்வரும் 12 ஆ ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம் பெறுகிறது. அறிவிப்பாளர் நாகபூசணி கருப்பையா பேட்டி காண்கிறார்.

இதன் மறு ஒளிபரப்பு 23-1-2012 திங்கட் கிழமை முற்பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகும்.
Top of Form
Bottom of Form

இணையத் தளங்களுக்கான புதிய ஒழுக்கக்கோவை வெளியீடு

செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியொன்றை தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது. இந்த ஒழுக்க நெறிக்கு அமைய செய்தி இணையத்தளங்கள் செயற்படுவேண்‌டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையத்தளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ள

Saturday, January 14, 2012

வாசகர்கள் அனைவருக்கும் இனிய 

பொங்கல் வாழ்த்துக்கள்




Saturday, December 10, 2011

ஞாபக மறதியும் நினைவாற்றலும்

          - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed 


 இன்றைய அவசர யுகத்தில் ஞாபக மறதி என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. சிலருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஓரளவு ஞாபக மறதி இருக்கும்.

ஞாபக மறதியை நோய் என்றும் சிலர் கூறுவர். அது போல் நினைவாற்றலை ஒரு கலை என்றும் கூறுவர்.

ஞாபக மறதி காரணமாக இழப்புக்களும் பின்னடைவுகளும், அசௌகரியங்களும், எதிர் மறையான விடயங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. இருந்த போதிலும் ஞாபக மறதி காரணமாகவே

Friday, December 9, 2011

மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்க 

வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்


                 - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


புகைத்தல் மற்றும் மதுபான பழக்க வழக்கங்களினால் ஏற்படும் தீங்குகள் ஏராளம்.

இவை மனித ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் பரந்துபட்ட சமூக மட்டத்திலும் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அத்துடன் மனிதனின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

மேற்கத்தேய கலாசாரத்தின் உள்வாங்கலே புகைத்தல், மதுபான பழக்க வழக்கங்கள் என்பனவாகும்.

Thursday, December 8, 2011

கோபத்தை தவிர்த்து சுகதேகியாக வாழ்வோம்      

          - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


அவசர யுகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை பலர் பரபரப்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் தவிக்கும் பெரும்பாலானவர்கள்  கோபப்படுவதும் அதிகரித்தே காணப்படுகிறது.

மனித உணர்ச்சிகளின் ஒன்றுதான் கோபம் என்ற உணர்வு வெளிப்பாடாகும். கோபம் நல்ல
பக்கற்றுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகள் தொடர்பில்
கவனம் செலுத்துவோம்


- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


எல்லோருக்கும்  மிகவும் பிடித்த ஒன்றுதான் ஐஸ்கிறீம். குறிப்பாக சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக ஐஸ்கிறீம் உள்ளது.  உணவின் பின் டெஸர்ட் ஆகவும் பலரும் ஐஸ்கிறீம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அந்த ஐஸ்கிறீம் சாப்பிடுவதற்கும் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஆம் விற்பனை  நிலையங்களில் பிளாஸ்ரிக் பக்கட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஐஸ்கிறீம் வகைகளைத்தான்   இங்கு குறிப்பிடுகிறோம்.

Wednesday, November 9, 2011

ஜெயகாந்தனுக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த 


விருது அறிவிப்பு!


சென்னை: எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, October 25, 2011

கடாபியின் பெயரில் கணனி வைரஸ்கள்

லிபியாவின் முன்னாள் அதிபர் முகம்மர் கடாபி கொல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளி வந்தபடியுள்ளன.
கடாபி தொடர்பான செய்திகளின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதே இதற்கான காரணமாகும். 

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


Thursday, October 6, 2011


ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்
      
நியூயார்க்: கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் (வயது56) நேற்று மரணமடைந்தார்.

Tuesday, October 4, 2011

‘ பேஸ் புக்' தொடர்பாக 1000 முறைப்பாடுகள்

பேஸ் புக்' சமூக வலைத்தளத்தின் மூலம் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகக் கடந்த 10 மாதக் காலப்பகுதியில் 1000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணினி அவசர பொறுப்புக் கூறல் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கணனி அறிவுடையோர் உள்ள நாடுகளில் இலங்கைக்கு 66 ஆவது இடம்.

இலங்கையில் கணனி அறிவுடையோர் 35 சதவீதமாக உள்ளதாகவும் இ உலகளாவிய ரீதியில் கணனி அறிவுடையோர் அதிகம் வசிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை 66 ஆவது இடத்தை பெற்றுள்ளதாவும் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நிமால் ஆனந்த அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.