நீர்கொழும்பு நகரம் பல்வேறு விடயங்களுக்கு பிரபல்யம் பெற்றதாகும். மீன்
பிடித்துறை. உல்லாசப் பயணத்துறை, வர்த்தகத்துறை என
பொருளாதார ரீதியிலும். அழகிய கடற்கரைகள்;, கடோலான தாவரங்;கள் மற்றும் களப்பு என இயற்கை வனப்பு ரீதியிலும் நீர்கொழும்பு
மாநகரம் பிரபல்யம் பெற்றது.
Tuesday, April 22, 2014
Monday, April 21, 2014
பேரினவாதிகளுக்கு தூக்குக் கயிறாக அமையும் ஒற்றுமைக் கயிறு - கலாநெஞ்சன்
அரசியல்வாதிகள் சண்டித்தனம் செய்வது எமது
நாட்டில் புதிதல்ல. மக்கள் பிரதிநிதிகள்; வன்முறைச் சம்பவங்களிலும் சட்டத்தை கையில் எடுத்து தான்தோன்றித்தனமாக நடந்து
கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறும் விடயமாகும். ஊடகங்களும் அவற்றை
முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும். வன்முறைகளுக்கே பெயர்போன அரசியல்வாதிகளும்
இருக்கிறார்கள். நாடாளுமன்றம் முதல் உள்ளுராட்சி சபை வரை அதுபோன்ற
Wednesday, April 16, 2014
'இலங்கையை மியன்மாராக மாற்ற முயலும் பொது பல சேனா'
- எம்.இஸட்.ஷாஜஹான்
(இக்கட்டுரை 17-4-2014 இன்றைய
விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
மாகாண சபை தேர்தல் முடிந்த கையோடு மீண்டும்
வேதாளம் முருங்கை மரம் ஏந்தியிருக்கிறது. ஆம். பொதுபலசேனா மீண்டும் தனது
சண்டித்தனத்தை ஆரம்பித்திருக்கிறது.
1990 இல் மன்னார்
மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பொதுபல சேனா அமைப்பு வன்மையாக
எதிர்த்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள
மறிச்சுக்கட்டி கிராமத்துக்கு வந்த பொதுபலசேன அமைப்பினர் அக்கிராம மக்களை நோக்கி
தகாத வார்த்தைகள் பேசி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
Sunday, April 13, 2014
எதிர் கட்சிகள் பொது அணியில் திரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? முன்னோடிப் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ள அரசு - கலாநெஞ்சன்
(இக்கட்டுரை 13-4-2014 இன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர
உயர்தரப் பரீட்சை போன்ற பொதுப் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு முன்னர் பாடசாலைகளில்
முன்னோடிப் பரீட்சைகளை நடத்தப்பட்டு மாணவர்களின் அடைவு மட்டம் இனங்காணப்படும்.
இந்;த முன்னோடிப் பரீட்சைகள்
மூலமாக மாணவர்களும் தமது கல்வி நிலையை அறிந்து கொண்டு பரீட்சைக்கு மேலும் சிறப்பான
முறையில் தயாராவர்;. அந்;த முன்னோடிப் பரீட்சைகளின்
பெறுபேறுகளே மாணவர்கள் தோற்றும் அந்தப் பொதுப் பரீட்சையின் பெறுபேறாகவும்
பெரும்பாலும் அமைந்துவிடும்.
Sunday, April 6, 2014
இருபது -20 உலக கிண்ணத் தொடர்: இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் (படங்கள்)
பங்களாதேஷில் நேற்று
(6-4-2014) நடைபெற்ற ஐந்தாவது இருபது - 20 உலக கிண்ணத் தொடர் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இலங்கை
சாம்பியனானது.
கடும் மழை காரணமாக, போட்டி 40 நிமிடம் தாமதமாக ஆரம்பமானது. நாணய சுழற்சியில்
வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மாலிங்க
களத்தடுப்பை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில்
துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.
Wednesday, April 2, 2014
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ஒரு அலசல் - எம்.இஸட்.ஷாஜஹான்
(இக்கட்டுரை (2-4-2014) இன்றைய வீரகேசரி
பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
கடந்த சனிக்கிழமை (29-3-2014) நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண மாகாண சபைத் தேர்தலில்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
தேர்தல் முடிவுகள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. அந்த
முடிவுகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்
கட்சிக்கும் எச்சரிக்கை பலவற்றை விடுப்பதாக அமைந்துள்ளன.
அதேவேளை, மாற்றுத் தீர்வாக அல்லது தெரிவாக சரத் பொன்சேகா தலைமையிலான
ஜனநாயகக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையம் மக்கள் கருத
ஆரம்பித்துள்ளாரகள் என்பதை முடிவுகள்
Saturday, March 15, 2014
மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை பிரதிநிதித்துவமும் - - எம்.இஸட். ஷாஜஹான்
(இக்கட்டுரை 16-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை
மக்களுக்கு முக்கிய தேர்தலாக உள்ளது. குறிப்பாக மேல் மாகாண சபை
தேர்தல் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முக்கியமானதொரு தேர்தலாக அமைந்துள்ளது.
இது என்ன மாகாண சபை தேர்தல்தானே. பாராளுமன்ற தேர்தல் அல்லவே என
சிறுபான்மை மக்கள் கருதுவார்களாயின்
அல்லது யார் ஆட்சி அமைத்தால் நமக்கென்ன என்று தேர்தலில் வாக்களிக்காமல்
விடுவார்களாயின், அது சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது
Thursday, March 13, 2014
அரசில் இருந்து விலகுமா முஸ்லிம் காங்கிரஸ்? -எம்.இஸட்.ஷாஜஹான்
(இக்கட்டுரை 9-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றினை ஜெனீவா மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்துள்ள விடயம் தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஹுப் ஹக்கீமுடன் கடும் தொனியில் கதைத்ததாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'உங்களால் ஆளும்
கட்சியில் இருக்க முடியும் என்றால் இருங்கள் . இல்லையேல் விலகிச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி
ரஹுப்
Friday, March 7, 2014
இனவாத அமைப்ப்புக்களின் செயற்பாடுகள் வெற்றி அடையது - நீர்கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஓ.எம்.ஹீஸான்
(நீர்கொழும்பு
மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும்
மேல்மாகாண சபையின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான
எம்.ஓ.எம்.ஹீஸான் 'தமிழ்த்
தந்திக்கு' வழங்கிய விஷேட
செவ்வி.23-2-2014 அன்று பிரசுரமானது)
நேர்காணல்;- எம்.இஸட்.ஷாஜஹான்
கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து
போட்டியிட்டது. பின்னர் அரசாங்கத்துடன்
இணைந்து கொண்டது. மேல் மாகாண சபை தேர்தலிலும் தனித்து
போட்டியிடுகிறது. பின்னர் இணைந்து கொள்ளும் என கூறப்படுகிறது. எனவே, முஸ்லிம்
காங்கிரஸ் தனித்து போட்டியிடாமல் அரசாங்கத்துடன் இணைந்து
தேர்தலில் போட்டியிட்டால் என்ன?
பதில்;: மாகாண சபை தேர்தலில் தனித்து
போட்டியிடுவது எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவேயாகும். பிரதான
கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.
Saturday, March 1, 2014
தேர்தலுக்கு சவாலாக அமையும் வன்முறைகள் - எம்.இஸட்.ஷாஜஹான்
மேல் மற்றும் தென் மாகாண சபை
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளுக்கு
நாள் சூடு பிடித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வரை (24-2-2014) தேர்தல் சட்ட மீறல் மற்றும்
தேர்தல் வன்முறைகள் குறித்து 354 முறைப்பாடுகள்
பதிவாகியுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
Friday, February 21, 2014
மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை கட்சிகளும் - எம்.இஸட்.ஷாஜஹான்
(;தமிழ்த் தந்தி பத்திரிகையில் 16-2-2014 அன்று பிரசுரமானது)
எதிர்வரும் மார்ச் மாதம் நடைறெவுள்ள
மேல் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை
இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தலாக
உள்ளது.
இரு பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சிறுபான்மை
மக்களின் வாக்குகளை குறிவைத்து
வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. அத்துடன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை
சிதறடிக்கும் திட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளன.
இம்முறை அதிக எண்ணிக்கையான முஸ்லிம்
வேட்பாளர்கள்
Friday, February 14, 2014
இனவாதிகள் - அரசாங்கம் - முஸ்லிம் தலைமைத்துவங்கள் - கலாநெஞ்சன்
'(தமிழ்த் தந்தி' பத்திரிகையில்
2-2-2014 அன்று
பிரசுரமானது)
இலங்கையை
முஸ்லிம் காலணித்துவமாக்கும் சதித்திட்டத்தை முறியடிக்கும் போராட்டத்தை கைவிடப்
போவதில்லை என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசிறி தேரர்
தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
வை.எம்.எம்.ஏ.அமைப்பு,
உலமா சபை, முஸ்லிம் அமைப்புகள் தொடர்பாக பாரிய சந்தேகங்கள
இருப்பதாகவும், கிழக்கில் சூ10ட்சுமமான முறையில் முஸ்லிம் அடிப்படைவாத
சக்திகள் இயங்கி கொண்டிருப்பதோடு அதன் பின்னணியில் சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதச்
சக்திகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Thursday, February 13, 2014
மேல்,தென் மாகாண சபை தேர்தலும் மக்களின் பார்வையும் - தேச நேசன்
('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 2-2-2014 அன்று பிரசுரமானது)
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாத இறுதியில்
நடைபெறவுள்ளது. பிரதான கட்சிகள் உட்பட தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளும்
சுயேட்சைக் குழுக்களும்; தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
பொதுத் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவது
போல் பிரதான கட்சிகள் இரண்டும் இந்த தேர்தலுக்கு
தயாராவது போன்று தெரிகிறது.
சூடுபிடிக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைக் களங்கள் - தேசநேசன்
('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 9-2-2014 அன்று பிரசுரமானது)
மேல் மற்றும்
தென்மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளவுள்ளதாக
தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மேலும் இரு
மாகாணங்களுக்கான தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற
இருக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு விமோசனமும் நன்மையும் கிடைக்கும் - மேல் மாகாண சபையின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் கார்த்திகேசு விக்னேஸ்வரம்
நேர்காணல்: எம்.இஸட்.ஷாஜஹான்
(வத்தளை - மாபொல
முன்னாள் நகர சபை உறுப்பினரும்> ஜனநாயக மக்கள்
முன்னணியின் கம்பஹா மாவட்ட பிரதான செயலாளரும்>
மேல்மாகாண
சபை தேர்தலில் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளருமான கார்த்திகேசு விக்னேஸ்வரம் 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட
செவ்வி. 9-2-2014 அன்று பிரசுரமானது)
கேள்வி : நீங்கள் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு சென்றீர்கள்?
பதில்: ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மணோ கணேசன்தான் இதற்கு காரணம். அவரது
அரசியல் செயற்பாடுகளால் கவரப்பட்டே அவரது கட்சியில் இணைந்து கொண்டேன். தமிழ்
மக்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பவர் மணோ கணேசன்.
அவர் பதவிகளுக்கும் பணத்திற்கும் விலை போகாதவர். சகல இன மக்களுக்கும் உதவி
புரிபவர். மக்களின் குரலாக ஒலிப்பவர்.
துணிந்து செயற்படுபவர். இவை என்னை கவர்ந்தன. அதன் காரணமாக அவரது கட்சியில் சேர்ந்தேன்.
கேள்வி : நீங்கள்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வந்த பிறகு என்ன
வித்தியாசத்தை காண்கிறீர்கள்?
பதில்: ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் மிகப் பெரும் கட்சியாகும். அக்கட்சி சகல
இனத் தலைவர்களும் சேர்ந்து உருவாக்கிய கட்சியாகும். அது சகல இனத்தவர்களதும்
கட்சியாகும். ஆயினும்> காலப் போக்கில்
இந்த அரசு மக்களை பிரித்து ஆட்சி செய்கிறது -நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து
நேர்காணல்: எம்.இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி; பிரதான அமைப்பாளரும்> நீர்கொழும்பு
மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவரும்> மேல்மாகாண
சபையின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து 'தமிழ்த்
தந்திக்கு' வழங்கிய விஷேட செவ்வி. 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 26-1-2014 அன்று பிரசுரமானது
கேள்வி: மேல்> தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன. நீங்களும்
ஐக்கிய தேசியக் கட்சி;யின் சார்பில்
கம்பஹா மாவட்ட வேட்பாளராக களமிறங்கவுள்ளீர்கள். இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுமா? இந்த தேர்தல்
தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்; : நிச்சயமாக எமது கட்சிக்கு
வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அதற்காக
சிறந்த வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். மக்களும் மாற்றத்தை விரும்புகின்றனர்.
இன்று, ஆளும் கட்சி பல கோடி ரூபாய்
பணத்தை செலவிட்டு அரசியல்
மேல் மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் அமோக வெற்றி பெறும் - நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிதி மேயர் எம்.எஸ்.எம். சகாவுல்லா
நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)
(நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிதி மேயரும்>
ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் நீர்கொழும்பு தலைவரும்,;
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீர்கொழும்பு மத்தியக்
குழுவின் பொருளாளருமான எம்.எஸ்.எம். சகாவுல்லா
தமிழ்த் தந்திக்கு வழங்கிய விஷேட செவ்வி. 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 26-1-2014அன்று பிரசுரமானது)
கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடுங்கள்?
பதில்: 1992 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலுக்கு வந்த காலப் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சியின் நீர்கொழும்பு, போருதொட்ட கிளையின்
செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டடேன். அதனைத் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய
வேண்டும் என்ற நோக்கில் 2006 ஆம் ஆண்டு
மேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக அமையும் - முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;யின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளர் ஷாபி ரஹீம்
முஸ்லிம்
காங்கிரஸ் கட்சி;யின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல்
மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் தமிழ் தந்திக்கு வழங்கிய விசேட செவ்வி. 19-1-2014 அன்று பிரசுரமானது
நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான் (கலாநெஞ்சன்)
உங்களது அரசியல் பிரவேசம் மற்றும் வெற்றிகள் பற்றி கூறுங்கள் ?
நான் வர்த்தகத்துறையில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த காலப்
பகுதியில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபை
தேர்தலில் போட்டியிடுமாறு புத்தளம்
மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய
முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் ஜனாப் நியாஸ் என்னை
அந்த
தேரத்ல் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.பின்னர் அவர் என்னை கட்சித் தலைவர்
ரஹுப் ஹக்கீமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
Tuesday, December 31, 2013
Saturday, December 28, 2013
Subscribe to:
Posts (Atom)











.jpg)


.jpg)
.jpg)

