Monday, July 28, 2014
புனித நோன்பின் போதனைகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - எம். இஸட். ஷாஜஹான்
புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதம் மாதம் எம்மை விட்டு
பிரிந்து விட்டது. ரமழான் மாதம் முழுதும் நோன்பு நோற்கும் பாக்கியம் கிடைத்த
எமக்கு அல்லாஹ்வின் அருளினால்; நோன்புப் பெருநாளைக்
கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
இறை பள்ளிவாசல்களில் தக்பீர் முழக்கம் ஒலிக்கிறது. ஆம்!
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை 'ரமழானில்' நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெரு நாளுமாகிய
பெருநாள்
Friday, June 27, 2014
இலங்கை முஸ்லிம்களுக்கோர் கறுப்பு ஜுன் - தேச நேசன்
(இக்கட்டுரை 22-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
எமது தேசம் மீண்டும் ஒரு முறை
செந்நீரால் குளித்துக் கொண்டது.
தமிழ் மக்களுக்கு 'கறுப்பு ஜுலை' (1983) போன்று முஸ்லிம்
மக்களுக்கு 'கறுப்பு ஜுன' வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
ஆம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்
மூன்று தினங்களுக்கு மேலாக அளுத்கம, பேருவளை, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு
எதிரான இன வன்முறைகளினூடாக எமது நாடு சர்வதேச ரீதியில் மீண்டும் ஒரு தடைவை அபகீர்த்தியை தேடிக் கொண்டுள்ளது.
Thursday, June 26, 2014
ஒத்துழைப்பு வழங்குமா இல்லையா? சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் இலங்கை எடுக்கப்போகும் முடிவு என்ன? - தேச நேசன்
(இக்கட்டுரை 15-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை
செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை
விசாரணைக்குழுவை நியமித்துள்ளமையைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும்
பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அரச தரப்பிலிருந்து வழமை போன்று எதிர்ப்பான கருத்துக்கள்
வெளியிடப்படுகின்ற போதிலும் சர்வதேச நாடுகள் சிலவும் மற்றும் எதிர்கட்சிகளும்; சர்வதேச விசாரணைக்கு
ஒத்துழைப்பு வழங்குமாறு கூறிவருகின்றன.
மூழ்கப் போகும் கப்பலில் இருந்து பாயத் தயாராகும் எலிகள்! - தேச நேசன்
(இக்கட்டுரை 8-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
நவம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதத்தில் இடம்பெறாவிட்டால் 2015 ஆம் வருட ஆரம்பப் பகுதியிலாவது அந்த தேர்தல் இடம்பெறும்;.
ஆரம்பத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என தெரிய வருகிறது.
இந்நிலையில், இந்தியாவைப் போன்று
இலங்கையிலும் ஆட்சி மாற்றம் இடம்பெறும் என்று ஆருடம் கூறப்படுகிறது. இது தொடர்பாக
தற்போது பரவலாகப் பேசப்படுகிறது.
Wednesday, June 4, 2014
முஸ்லிம்களின் பெருக்கத்தால் அச்சப்படும் பேரினவாதம் - தேசநேசன்
(இக்கட்டுரை 1-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
முஸ்லிம் மக்கள் தொடர்பில் அதிக காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்ட
அமைப்பாக பொதுபல சேனா அமைப்பு இருந்து வருவது யாவரும் அறிந்த பகிரங்கமான
உண்மையாகும்.
அந்த அமைப்பு காலத்திற்குக் காலம் முஸ்லிம் இனத்திற்கும் இஸ்லாமிய
சமயத்திற்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் சட்டத்தை கையில்
எடுத்துக் கொண்டு சண்டித்தனத்தையும் செய்து வருகிறது.
முஸ்லிமகளுக்கு எதிராக பொதுபல சேனா
அமைப்பு மேற்கொண்டு வரும் அநீதிகள், அடாவடித்தனங்கள் யாவும் தி;ட்டமிடப்பட்ட
ஆளும் கூட்டணிக்குள் ஆதரவு குறைந்து வரும் அரசாங்கம் - தேசநேசன்
(இக்கட்டுரை 11-5-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
எமது நாட்டு அரசியல் நிலைவரம் அண்மைக்காலமாக ஆங்கிலத் திரைப்படம் போன்று ; விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
எந்த வேளை எது நடைபெறுமோ? என்று மக்கள் ஊடகங்களின் ஊடாக
செய்திகளை அறிவதில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இரவு வேளையில், தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் செய்தி
அறிக்கைகளை தொலைக்காட்சி தொடர் நாடகம் ஒன்றை பார்ப்பது போன்று மக்கள் தொடர்ந்து
பார்த்து வருகின்றனர்.
Sunday, June 1, 2014
நீர்கொழும்பில் நடைபெற்ற 'மொழியுரிமை' தொடர்பான பிராந்திய கருத்தரங்கு
'தமிழ்மொழி அமுலாக்கலை
அர்த்தமுள்ளதாக்குவோம்'' என்ற தொனிப் பொருளில் மொழி உரிமை
தொடர்பான பிராந்திய கருத்தரங்கு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (1-6-2014)
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் பி..ப 3.00 முதல் 6.30 மணி வரை
நடைபெற்றது.
.மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்,
ஜனநாயக மக்கள்
முன்னணியின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார்,
ஊடகச் செயலாளர் எஸ்.
விஜேந்திரன், நீர்கொழும்பு
Thursday, May 8, 2014
அரசியலில் கசினோ விளையாடும் முஸ்லிம் தலைமைத்துவங்கள் - எம்.இஸட்.ஷாஜஹான்
எமது முஸ்லிம் தலைமைத்துவங்களில் பலர்
தமது முதுகெலும்பற்ற தன்மையையும் சுயநல அரசியல் செயற்பாடுகளையும் அடிக்கடி
வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அதுபோன்ற வெளிப்படுத்தல்கள் தொடர்ந்து இடம்பெறும் கால கட்டமாக தற்போதைய நாட்டு
சூழ்நிலையும் அரசியல் சூழ்நிலையும்
அமைந்து உள்ளன.
கசினோ சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று திட்டங்களாக அரசாங்கத்தால்
தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட செயல் நுணுக்க அபிவிருத்தி
கருத்திட்டங்களின கீழான கட்டளை ஆளும் தரப்பு
முஸ்லிம் தலைமைத்துவங்களின்
ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
Friday, May 2, 2014
நாட்டை உலுக்கி வரும் முகமூடி குழுக்களின் கொள்ளைகள் - கலாநெஞ்சன்
(இக்கட்டுரை 27-4-2014 அன்றைய தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
எமது நாட்டை தற்போது இரண்டு வகையான குழவினர் உலுக்கி வருகின்றனர்.
அவர்களின் சட்டவிரோத செயற்பாடுகள்
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை தருபவைகளாக உள்ளன. ஒரு குழுவினர் காவி உடை தரித்த பேரினவாதிகள்.
மற்றைய குழவினர் ஆயுதம் ஏந்திய முகமூடி
கொள்ளையர்கள்.
ஒரு குழவினர் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கொள்ளையடிக்கின்றனர். மற்றைய
குழுவினர் நிதி நிறுவனங்களிலும்;, நகைக் கடைகளிலும் பணத்தையும் நகைகளையும்
Tuesday, April 22, 2014
நீர்கொழும்பை அதிர்ச்சியடையச் செய்துள்ள முகமூடி நபர்களின் தொடர் கொள்ளை - எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு நகரம் பல்வேறு விடயங்களுக்கு பிரபல்யம் பெற்றதாகும். மீன்
பிடித்துறை. உல்லாசப் பயணத்துறை, வர்த்தகத்துறை என
பொருளாதார ரீதியிலும். அழகிய கடற்கரைகள்;, கடோலான தாவரங்;கள் மற்றும் களப்பு என இயற்கை வனப்பு ரீதியிலும் நீர்கொழும்பு
மாநகரம் பிரபல்யம் பெற்றது.
Monday, April 21, 2014
பேரினவாதிகளுக்கு தூக்குக் கயிறாக அமையும் ஒற்றுமைக் கயிறு - கலாநெஞ்சன்
அரசியல்வாதிகள் சண்டித்தனம் செய்வது எமது
நாட்டில் புதிதல்ல. மக்கள் பிரதிநிதிகள்; வன்முறைச் சம்பவங்களிலும் சட்டத்தை கையில் எடுத்து தான்தோன்றித்தனமாக நடந்து
கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறும் விடயமாகும். ஊடகங்களும் அவற்றை
முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும். வன்முறைகளுக்கே பெயர்போன அரசியல்வாதிகளும்
இருக்கிறார்கள். நாடாளுமன்றம் முதல் உள்ளுராட்சி சபை வரை அதுபோன்ற
Wednesday, April 16, 2014
'இலங்கையை மியன்மாராக மாற்ற முயலும் பொது பல சேனா'
- எம்.இஸட்.ஷாஜஹான்
(இக்கட்டுரை 17-4-2014 இன்றைய
விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
மாகாண சபை தேர்தல் முடிந்த கையோடு மீண்டும்
வேதாளம் முருங்கை மரம் ஏந்தியிருக்கிறது. ஆம். பொதுபலசேனா மீண்டும் தனது
சண்டித்தனத்தை ஆரம்பித்திருக்கிறது.
1990 இல் மன்னார்
மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பொதுபல சேனா அமைப்பு வன்மையாக
எதிர்த்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள
மறிச்சுக்கட்டி கிராமத்துக்கு வந்த பொதுபலசேன அமைப்பினர் அக்கிராம மக்களை நோக்கி
தகாத வார்த்தைகள் பேசி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
Sunday, April 13, 2014
எதிர் கட்சிகள் பொது அணியில் திரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? முன்னோடிப் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ள அரசு - கலாநெஞ்சன்
(இக்கட்டுரை 13-4-2014 இன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர
உயர்தரப் பரீட்சை போன்ற பொதுப் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு முன்னர் பாடசாலைகளில்
முன்னோடிப் பரீட்சைகளை நடத்தப்பட்டு மாணவர்களின் அடைவு மட்டம் இனங்காணப்படும்.
இந்;த முன்னோடிப் பரீட்சைகள்
மூலமாக மாணவர்களும் தமது கல்வி நிலையை அறிந்து கொண்டு பரீட்சைக்கு மேலும் சிறப்பான
முறையில் தயாராவர்;. அந்;த முன்னோடிப் பரீட்சைகளின்
பெறுபேறுகளே மாணவர்கள் தோற்றும் அந்தப் பொதுப் பரீட்சையின் பெறுபேறாகவும்
பெரும்பாலும் அமைந்துவிடும்.
Sunday, April 6, 2014
இருபது -20 உலக கிண்ணத் தொடர்: இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் (படங்கள்)
பங்களாதேஷில் நேற்று
(6-4-2014) நடைபெற்ற ஐந்தாவது இருபது - 20 உலக கிண்ணத் தொடர் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இலங்கை
சாம்பியனானது.
கடும் மழை காரணமாக, போட்டி 40 நிமிடம் தாமதமாக ஆரம்பமானது. நாணய சுழற்சியில்
வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மாலிங்க
களத்தடுப்பை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில்
துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.
Wednesday, April 2, 2014
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ஒரு அலசல் - எம்.இஸட்.ஷாஜஹான்
(இக்கட்டுரை (2-4-2014) இன்றைய வீரகேசரி
பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
கடந்த சனிக்கிழமை (29-3-2014) நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண மாகாண சபைத் தேர்தலில்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
தேர்தல் முடிவுகள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. அந்த
முடிவுகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்
கட்சிக்கும் எச்சரிக்கை பலவற்றை விடுப்பதாக அமைந்துள்ளன.
அதேவேளை, மாற்றுத் தீர்வாக அல்லது தெரிவாக சரத் பொன்சேகா தலைமையிலான
ஜனநாயகக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையம் மக்கள் கருத
ஆரம்பித்துள்ளாரகள் என்பதை முடிவுகள்
Saturday, March 15, 2014
மேல் மாகாண சபை தேர்தலும் சிறுபான்மை பிரதிநிதித்துவமும் - - எம்.இஸட். ஷாஜஹான்
(இக்கட்டுரை 16-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை
மக்களுக்கு முக்கிய தேர்தலாக உள்ளது. குறிப்பாக மேல் மாகாண சபை
தேர்தல் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முக்கியமானதொரு தேர்தலாக அமைந்துள்ளது.
இது என்ன மாகாண சபை தேர்தல்தானே. பாராளுமன்ற தேர்தல் அல்லவே என
சிறுபான்மை மக்கள் கருதுவார்களாயின்
அல்லது யார் ஆட்சி அமைத்தால் நமக்கென்ன என்று தேர்தலில் வாக்களிக்காமல்
விடுவார்களாயின், அது சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது
Thursday, March 13, 2014
அரசில் இருந்து விலகுமா முஸ்லிம் காங்கிரஸ்? -எம்.இஸட்.ஷாஜஹான்
(இக்கட்டுரை 9-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றினை ஜெனீவா மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்துள்ள விடயம் தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஹுப் ஹக்கீமுடன் கடும் தொனியில் கதைத்ததாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'உங்களால் ஆளும்
கட்சியில் இருக்க முடியும் என்றால் இருங்கள் . இல்லையேல் விலகிச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி
ரஹுப்
Friday, March 7, 2014
இனவாத அமைப்ப்புக்களின் செயற்பாடுகள் வெற்றி அடையது - நீர்கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஓ.எம்.ஹீஸான்
(நீர்கொழும்பு
மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும்
மேல்மாகாண சபையின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான
எம்.ஓ.எம்.ஹீஸான் 'தமிழ்த்
தந்திக்கு' வழங்கிய விஷேட
செவ்வி.23-2-2014 அன்று பிரசுரமானது)
நேர்காணல்;- எம்.இஸட்.ஷாஜஹான்
கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து
போட்டியிட்டது. பின்னர் அரசாங்கத்துடன்
இணைந்து கொண்டது. மேல் மாகாண சபை தேர்தலிலும் தனித்து
போட்டியிடுகிறது. பின்னர் இணைந்து கொள்ளும் என கூறப்படுகிறது. எனவே, முஸ்லிம்
காங்கிரஸ் தனித்து போட்டியிடாமல் அரசாங்கத்துடன் இணைந்து
தேர்தலில் போட்டியிட்டால் என்ன?
பதில்;: மாகாண சபை தேர்தலில் தனித்து
போட்டியிடுவது எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவேயாகும். பிரதான
கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.
Saturday, March 1, 2014
தேர்தலுக்கு சவாலாக அமையும் வன்முறைகள் - எம்.இஸட்.ஷாஜஹான்
மேல் மற்றும் தென் மாகாண சபை
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளுக்கு
நாள் சூடு பிடித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வரை (24-2-2014) தேர்தல் சட்ட மீறல் மற்றும்
தேர்தல் வன்முறைகள் குறித்து 354 முறைப்பாடுகள்
பதிவாகியுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
















