பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, September 29, 2015

நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழா -2015 இல் எனக்கு 3 பரிசுகள்

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன்  இணைந்து நீர்கொழும்பு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த 'நீர்கொழும்பு பிரதேச சாகித்திய மகோற்சவம்' இன்று செவ்வாய்க்கிழமை (29-9-2015) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர். அலவத்த தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். பிரபல சிங்கள கலைஞரும் அறிவிப்பாளரும் பாடலாசிரியருமான  வசந்த துக்கன்னாரால விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு சாகித்தியம் தொடர்பாக உரையாற்றினார்.

Wednesday, July 29, 2015

உலக நிலா உதிர்ந்தது

(டாக்டர் அப்துல் கலாம் மறைவு 27-7-2015)

உலக நிலா
உதிர்ந்தது!
பாரத மண்ணின்
அறிவியல் சூரியன்
விண்ணகம் புறப்பட்டது!

கனவு கண்ட
ஞான விழிகள்
மூடிக் கொண்டன
நிரந்தரமாய்....

ஒரு வரலாற்றுப் புத்தகத்தின்
இறுதி அத்தியாயம்
முற்றுப் பெற்றது.

'அக்கினிச் சிறகை'
தந்த ஆளுமை
பறந்து போனது
பாரதம் துறந்து!

கனவு காண
கற்றுத் தந்த
கனிந்த இதயம்
கனவாகிப் போனது.
எங்கள்
நினைவாகிப் போனது.

Sunday, July 19, 2015

புனித ரமழானை மறவோமே!




இறை மறை அருளப் பெற்ற
   இனிய நல் ரமழானே!
அருள் மாரி  பொழிந்து வந்த
   அற்புத ரமழானே!
இருள் நீக்கி ஒளி தந்த
   உன்னத ரமழானே!
இறை வனவன் நேசத்;தை
   பெற்றுத் தந்த ரமழானே!


இச்சைகளை அடக்கச் செய்த
   இங்கித ரமழானே!
அச்சங் கொள் இறைவன் மீது
   ஏன்று சொன்ன ரமழானே!
கஷ்டங்களை உணர்ந்து கொள்ள
   களம் அமைத்த ரமழானே!
நஷ்டப்பட்ட மனிதருக்கு
   நலங் கொடுத்த ரமழானே!

Saturday, July 18, 2015

மனிதனைப் புடம் போட்ட ரமழான் மாத நோன்பின் இனிய பெருநாள்

(18-7-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை.)

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஓரு மாதம் முழுதும் நோற்றுவிட்டு இன்று நாங்கள்  இனிய நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.
புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதத்திற்கு விடை கொடுத்து விட்டு  இனிய ஈதுல்; பித்ர் பெருநாளை கொண்டாடுகிறோம். ஆம்! 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டுவிட்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.

Friday, May 15, 2015

சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்

 கடந்த ஆண்டு நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில்  சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ள  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை  (15-5-2015) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் (எனது) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்களான ஜெகநாதன், எம். ஏ. சில்வா, காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர்.
ஆசிரிய ஆலோசகர் ஜெகநாதன்  மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர்  சிறப்பான சித்திகளைப் பெற்ற மாணவிகளான ஆர். கலைவதனி  , ஆர். தருஷிகா ஆகியோருக்கு பதக்கம் அணிவித்தும் பரிசில் வழங்கியும் கௌரவித்தனர்.

Wednesday, April 22, 2015

நீர்கொழும்பில் நடைப்பெற்ற ‘மொட்டைக் கடிதம்’ குறுந்திரைப்பட அறிமுக விழா

 நீர்கொழும்பு  எஸ்.எஸ். ட்ரீம் சினிமா (SS  Dream cinema) சார்பில் . ஆர். சிவலிங்கம்,  ஜி. சசிதரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘மொட்டைக்கடிதம்குறுந்திரைப்பட அறிமுக விழா கடந்த (19-04-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை  நீர்கொழும்பு இந்து இளைஞர்  கலாசார மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு ஸ்ரீகுகேஸ்வர குருக்களின் பூஜை  மற்றும் ஆசியுரையுடன் விழா அரம்பமானது. இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ.ஜெயராமன் அறிமுக விழாவைப் பற்றி விளக்கமாக உரையாற்றினார். குறுந் திரைப்படங்களைப் பற்றி மு.ஜெயகாந்தன் சிறப்பாக உரையாற்றினார்.

Saturday, April 18, 2015

சக்தி தொலைக்காட்சியின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சியில் Kalanenjan Shajahan


 சித்திரைப் புத்தாண்டு அன்று (14-4-2015) சக்தி தொலைக்காட்சியில் காலை 6.45 மணி முதல் காலை 8 மணி வரை ஒளிபரப்பான  'குட்மோர்னிங் சிறிலங்கா' நிகழ்ச்சியில் நான் பங்கு பற்றினேன். நிகழ்ச்சியில் அடியேன் கவிதை வாசிக்கும் காட்சி இது.






Sunday, March 15, 2015

நீர்கொழும்பில் இடம்பெற்ற 'நெய்தல்' நூல் வெளியீட்டு விழா

                        
நீர்கொழும்பு  விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரி  பழையமாணவர்   மன்றத்தின்    ஏற்பாட்டில்  அண்மையில் (28-2-2015) கல்லூரி மண்டபத்தில்     நெய்தல்  நூல்  வெளியீட்டு  விழா  நடைபெற்றது.
1954  ஆம்  ஆண்டு தொடங்கப்பட்ட  கல்லூரியின்  வைரவிழாவை        முன்னிட்டு    கல்லூரியின்   முதல்   மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான     அவுஸ்திரேலியாவில்     வதியும்  லெ.முருகபூபதி    தொகுத்த  நெய்தல்  நூலில்  கல்லூரியின் முன்னாள்    மாணவர்கள்,    அதிபர்கள்,   ஆசிரியர்கள்  எழுதிய கட்டுரைகள்,   சிறுகதைகள்,   கவிதைகள்ஆய்வுகள்  இடம்பெற்றுள்ளன.

Saturday, October 18, 2014

சாகித்திய விழாவில் பரிசு

நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேச சாகித்திய கலா மகோற்சவத்திற்காக நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளில் எனக்கு நான்கு பரிசில்கள் கிடைத்துள்ளன.


 கவிதை மற்றும் சிறுவர்  சிறுவர் கதை ஆக்கப் போட்டிகளில் முதலாமிடங்களையும் , பாடலாக்கம் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் இரண்டாமிடங்களையும் பெற்றுள்ளேன். அத்துடன் கம்பஹா மாவட்ட செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மாவட்ட சாகித்திய கலா மகோற்சவத்திற்காக நடத்திய இலக்கியப்

Thursday, September 11, 2014

அதிர்ச்சி வைத்தியம் அரசுக்கா? முஸ்லிம் காங்கிரஸிற்கா? - தேச நேசன்

  (தமிழ்த் தந்தி 7-9-2014)
ஊவா தேர்தலில் அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் முஸ்லிம்களை கண்டுகொள்ளவில்லை என்பதை அரசு சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரையேனும் களமிறக்கப்படாததை வெளிக்காட்டியுள்ளது. இதனை மறைக்கவே தற்போது எமது கூட்டமைப்பு அவர்களின் கடிவாளம் கைக்கூலிகள் என கூறி வருகின்றனர். இவையெல்லாம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஊவா முஸ்லிம்கள் நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும் அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று  பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வாக்கு வேட்டைக்காக கூட்டு சேர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் - தேச நேசன்

(தமிழ்த் தந்தி பத்திரிகை 31-8-2014)

தமிழ் திரைப்படமொன்றில் நகைச்சுவை நடிகர் ஒருவர் 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று கிண்டலாகக் குறிப்பிடுவார். அதேபோன்று 'அரசியல்  என்பது ஒரு சாக்கடை. அதில் எதுவேண்டுமானாலும் கலக்கலாம்.' இது புpரபல அரசியல் விமர்சகரும் நடிகரும் எழுத்தாளருமான  நடிகர் சோ கதை வசனம் எழுதிய பழைய திரைப்படமொன்றில் வரும் வசனமாகும். இந்த வசனம் பிரபல்யமானது. ஊவா மாகாண சபை தேர்தலில் அரசியல் பகையாளிகள் இருவர் கூட்டுச் சேர்ந்திருப்பதைப் பார்க்கும் போது அந்த வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.
ஆம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டுச் சேரந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம்.

Sunday, September 7, 2014

ஆடைத் தொழிற்சாலை யுவதி சமிலா திசாநாயக்காவை வல்லுறவு புரிந்து கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டணை (கட்டுரை) - எம்.இஸட்.ஷாஜஹான்

        நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலையொன்றில்  பணியாற்றிய இளம் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் வைத்து வைத்தியர் ஒருவரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலை கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை  பலருக்கும் அன்று அதிர்ச்சி அளித்த விடயமாக இருந்தது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் (12-11-2007அன்று) நடைபெற்று இக்கொடூரச் சம்பவத்திற்கான தீர்ப்பு கடந்து புதன்கிழமை (3-9-2014)

Wednesday, August 27, 2014

சிறுபான்மை மக்களை அடக்கி பெரும்பான்மையின மக்களை நம்பி தேர்தலில் குதிக்கத் தயாராகும் அரசு! - தேச நேசன்


(இக்கட்டுரை 24-8-2014 அன்றைய தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள 400 வருடம் பழமை வாய்ந்த திருகோணமலை வெள்ளை மணல் கருமலையூற்று பள்ளிவாசல்  இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
 பிரதேசத்தில்  கடும் மழை பெய்து கொண்டிருக்கையில்  அந்த  நேரத்தைப் பயன்படுத்தி கனரக இயந்திரத்தைக் கொண்டு பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளி நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சுமையில் வாழும் அரச ஊழியர்கள் - தேச நேசன்

(இக்கட்டுரை  17-8-2014 அன்றைய தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கமாறும் கோரி  கடந்த செவ்வாய்க்கிழமை (12-8-2014)  கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக  உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு  ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஒன்றை  நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், தாய்மார்கள் , பல்கலைக்கழக மாணவிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதி நாடகம் ஒன்றையும் நடத்தினர்.

மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்ல மறந்த கதைகள் நூல் வெளியீட்டு அரங்கு

 படைப்பிலக்கியவாதியும்  பத்திரிகையாளருமான  திரு. லெட்சுமணன் முருகபூபதியின்   20  ஆவது   நூல்   சொல்ல  மறந்த  கதைகளின் வெளியீட்டு   அரங்கு   கடந்த  சனிக்கிழமை 23  ஆம்  திகதி மெல்பனில்  Dandenong Central Senior Citizens Centre மண்டபத்தில் நடைபெற்றது.

லங்கை  கம்பன்  கழகத்தின்  ஸ்தாபக   உறுப்பினரும்   லக்கிய ஆர்வலருமான    திரு. கந்தையா   குமாரதாசன்  ,ந்நிகழ்வுக்கு தலைமைதாங்கினார்.

Saturday, August 16, 2014

இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் - ​தேச நேசன்

-  (இக்கட்டுரை 10-8-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும்  இலங்கையைச் சேர்ந்த அகதிகள்;   அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்டுவது பற்றி அடிக்கடி ஊடகங்கள் ஊடாக அறிந்து கொள்கிறோம்.

கடந்த வாரம் முதல் அது போன்ற நடவடிக்கை  இலங்கையிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆம்! இலங்கையில் தங்கியிருந்தபடி ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு புகலிடம்  கோரிய பாகிஸ்தானியர்கள் சிலர்  கடந்த வெள்ளிக்கிழமை (1-8-2014) குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் தமது தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Wednesday, August 6, 2014

மக்களை பொருளாதார சுமைகளிலிருந்து காப்பாற்றப்போவது யார்? - தேச நேசன்

(இக்கட்டுரை  3-8-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
வாழ்க்கைச் செலவு வானுயர உயர்ந்து நின்று  சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் சோதனைக்கு மேல் சோதனைகளை கண்டபடி வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கம் அடுத்த தேர்தல்களிலும் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்று திட்டங்கள் வகுத்து அதனை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வாக்காளப் பெருமக்களான பொது மக்கள் படுகின்ற  பொருளாதார அவஸ்தைகளை, இன்னல்களை சிந்திப்பதற்கு அதனைப் பற்றிப் பேசுவதற்கு வெகு சிலரே உள்ளனர். தற்போது நடக்கப்போகும் தேர்தலைப் பற்றி கட்சிகள் சிந்திக்கும் காலமாகும்.