Saturday, May 25, 2019
Saturday, April 20, 2019
இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மாதர் அணியினரின் வருடாந்த கண்காட்சி SRILANKA LAJNA IMAILLAH , ANNUAL EXHIBITION 2019 ,
இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மாதர் அணியினர் (LAJNA IMAILLAH) வருடாந்தம் நடத்தும் பொருட் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று சனிக்கிழமை (20-4-2019) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலின் (MASJID FAZL) ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் மாணவிகளின் பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் ஆடை வகைகள், உணவு வகைகள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் குறைந்த விலையில்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன், வெலிசறையில் அமைந்துள்ள அரசாங்க ஹோமியோபதி
வைத்தியசாலையின் உதவியுடன் வைத்தியர் திருமதி
பரீனா பேகம் தலைமையில் அங்கு நோயாளிகளுக்கு இலவசாமாக ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த
அஹ்மதியா ஜமாஅத்தின் கிளை அமைப்புகளைச் சேர்ந்த பெண்களும் சிறுவர் சிறுமிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Monday, March 4, 2019
நீர்கொழும்பு தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா
ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ ரவீந்ர குருக்கள்
தலைமையில் இரவு 8 மணிக்கு விசேட பூஜைகள் ஆரம்பமாயின.
இரவு 11 மணிக்கு இரண்டாம் சாம பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் சாம பூஜையும்,
அதிகாலை 5 மணிக்கு நான்காம் சாம பூஜையும் இடம்பெற்றன.
பூஜைகள் நடைபெறுவதற்கு
Sunday, February 3, 2019
சுதந்திர தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு, பொலன்னறுவை அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசல்களில்; விசேட பிரார்த்தனை நிகழ்வு (PHOTOS)
இலங்கையின்
71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (4)
காலை (9 மணிக்கு) நீர்கொழும்;பு பெரியமுல்லையில்
அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில்
விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
நீர்கொழும்பு ஜமாஅத் தலைவர் எச்.ஏ. இப்ராஹீம் தலைமையில்
நிகழ்வு நடைபெற்றது. தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. மௌலவி தாஹிர் அஹ்மத்
பிரார்த்தனை நடத்தியதுடன் சுதந்திர தின விசேட சொற்பொழிவை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்
நிகழ்த்தினார்.
Sunday, December 16, 2018
ரணில் விக்ரமசிங்க பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்ததை அடுத்து நீர்கொழும்பு நகரில் பாற்சோறு பகிர்ந்து கொண்டாட்டம்
இன்று
ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதி முன்னிலையில்
பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்தததை அடுத்து நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில்
ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் பாற்சோறு பகிர்ந்து பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்.
நகரின் சகல பிரதேசங்களிலும் பட்டாசு கொழுத்தப்பட்டது.
ஐக்கிய
தேசியக்கட்சியின் நீர்கொழம்பு பிரதான அமைப்பாளரும் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான
ரொயிஸ் பெர்னாந்துவின் தலைமையில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில நிகழ்வு
இடம்பெற்றது.
Sunday, December 9, 2018
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் (power Friends 98) ஒன்று கூடல் நிகழ்வு
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்களின் (power Friends 98) ஒன்றுகூடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (9-12-2018) நீர்கொழும்பு போருதொட்ட வீதியில் அமைந்துள்ள The Kings Bay Hotel இல் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அன்று மாணவர்களுக்கு கற்பித்த வகுப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் சிறப்பதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்வில் பழைய மாணவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் பங்குபற்றினர்.
Wednesday, November 28, 2018
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா
நிகழ்வில்
அருட் தந்தை ரொஹான் பீரிஸ், மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோர் விசேட அதிதிகளாக
கலந்து சிறப்பித்தனர்.
அருட்
சகோதரி ஹேன் மேரி, அருட் சகோதரி குளொடில்டா பெர்னாந்து புள்ளே மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Monday, August 20, 2018
எனக்கு ‘தமிழ்ச் சுடர்’ விருது
தடாகம் கலை இலக்கிய வட்டம் கொழும்பு அஞ்சல் சேவைகள்
மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சிலுள்ள
அஞ்சல் அலுவலக தலைமையக் கட்டட கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (18-8-2018) நடத்திய பன்னாட்டு படை விழாவில் கலை இலக்கிய சமூக சேவையை
பாராட்டி எனக்கு 'தமிழ்ச் சுடர்' விருது வழங்கப்பட்டது.
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள்
ஹிதாயா ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
Sunday, August 19, 2018
தடாகம் கலை இலக்கிய வட்டம் நடத்திய பன்னாட்டு படை விழாவும் விருது வழங்கலும்

தடாகம்
கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரையும் பின்னர்
பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரையும் இரு அமர்வுகளாக
நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட 60 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Monday, June 25, 2018
ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்த கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்கள் (PHOTOS)
கொழும்பு
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் 1982 ஆம் ஆண்டில் கல்வி கற்ற பழைய மாணவர் குழுவினர் (PEARLS
OF HAMEEDIA) தமக்கு கல்வி கற்பித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களையும்
பாடசாலைக்கு பல்வேறு வகையிலும் உதவி புரியும் பழைய மாணவர்களையும் விருது வழங்கி கௌரவித்தனர்.
23-6-2018 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பு ரிச்வின்
விளா (Richvin Villa) இல்லத்தில்
இடம்பெற்ற PEARLS OF HAMEEDIA பழைய மாணவர் குழுவின் ஒன்றுகூடல் மற்றும் இரவு விருந்து நிகழ்வில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
Thursday, June 14, 2018
ஆன்மீக இன்பத்தை தந்த புனித ரமழான்
(வீரகேசரி பத்திரிகையில் நோன்புப் பெருநாள் சிறப்பிதழில் 15-6-2018 அன்று பிரசுரமான கட்டுரை)
- எம். இஸட். ஷாஜஹான்
ஒரு
மாத காலம் ஆத்மீக இன்பத்தை தந்து அருள் மழை பொழிந்த புனித ரமழான் மாதம் நேற்றோடு எமை
விட்டு பிரிந்து விட்டது. இன்று நாங்கள் புனித நோன்புப் பெருநாளை பெரு உவகையோடு கொண்டாடுகிறோம்.
இறைவனின்
நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள்
பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம்
மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.
இறை
பள்ளிவாசல்களில் 'தக்பீர்' முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. இறையடியார்களின் உள்ளத்தில்
உவகை பெருக்கெடுத்தோடுகிறது.
Sunday, May 13, 2018
கொழும்பு ஹமீத் அல்- ஹுசைனி தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள் நடத்திய திறமைகளின் விழா(TALENT FIESTA G82)
கொழும்பு
ஹமீத் அல்- ஹுசைனி தேசிய கல்லூரியில் 1982 ஆம் ஆண்டு கல்வி கல்வி கற்ற (PEARLS OF HAMEEDIYA)
பழைய
மாணவர்கள் குழுவினர் கொழும்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கலை இலக்கிய போட்டி நிகழ்ச்சிகளை (TALENT FIESTA G82's) கடந்த
சனிக்கிழமை (12-5-2018) நடத்தியது.
1982
ஆம் ஆண்டு கல்வி கல்வி கற்ற (PEARLS
OF HAMEEDIYA) பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் தொழிலதிபர்
எஸ். எஸ். யு. ஜெய்னுல் ஆப்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களிடையே
கவிதை, கட்டுரை, பேச்சு, சித்திரம், கைவினை பொருள் தயாரிப்பு, அறிவுக் களஞ்சியம் வினா
விடைப் போட்டி,
Sunday, April 29, 2018
நீர்கொழும்பு நகரில் வெசாக் வலயம் அமைக்கப்பட்டு கொண்டாடப்படும் வெசாக் தினம் (PHOTOS)
நீர்கொழும்பு
நகரில் வெசாக் தினம் இம்முறை மிகச்
சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நகரின் பல இடங்களிலும் தானசாலைகள், தோரணங்கள் மற்றும்
வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன்
நகரின் பிரதான விகாரைகளான அங்குருகாராமமுல்ல
போதிராஜ ராமய, அபயசேகராராமய அமைந்துள்ள பிரதேசம் வெசாக் வலயமாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விகாரைகளின் ஏற்பாட்டுடன்
வொசாக்கூடு போட்டிகள் நடத்தப்படுவதுடன்
தோரணம் மற்றும் தான சாலைகள்; அமைக்கப்பட்டுள்ளன இதற்கு புத்தசாசன அமைச்சு,
நீர்கொழும்பு மாநகர சபை ஆகியன அனுசரணை வழங்குகின்றன.
Friday, March 9, 2018
நீர்கொழும்பில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்புக் கூட்டம்: சர்வ மதத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்பு
கண்டியில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து நீர்கொழும்பு
நகரில் இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமலிருக்கும் வகையில் நீர்கொழும்பில் சர்வ மதத்
தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச
அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று வியாழக்கிழமை (8-3-2018) இரவு 8 மணியளவில்
நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளர்
ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நீர்கொழும்பு
மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர்
எம்.எஸ்.எம்.சகாவுல்லா, நீர்கொழும்பு பிராந்திய
Monday, January 29, 2018
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்
நீர்கொழும்பு
வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்
இன்று திங்கட்கிழமை (29-1-2018) அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் பாடசாலை மைதானத்தில்
நடைபெற்றது.
படங்கள் - அணிகளுக்கிடையில்
வலைப் பந்தாட்டப் போட்டி இடம்பெறுவதையும்,
போத்தலில் தண்ணீர் நிறைத்தல், பந்து போடுதல் போட்டிகள் இடம்பெறுவதையும் வலைப்
பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு
அதிபர் எம். இஸட். ஷாஜஹான் வெற்றிக்கிண்ணம்
வழங்குவதையும், வெற்றி பெற்ற அணிகளுடன் அதிபர்
Tuesday, December 12, 2017
மணப் பெண் அலங்காரம் மற்றும் அழகுக் கலை பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு
மேல்
மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும்
வகையில் நடத்தப்பட்ட மணப் பெண் அலங்காரம் மற்றும்
அழகுக் கலை பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி; பரிசளிப்பு விழாவும் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (10-12-2017) அன்று நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின்
பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் கலந்து சிறப்பித்தார். கெரவ அதிதிகளாக
வைத்தியர் ரிம்ஸீனா
Wednesday, December 6, 2017
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின்
ஒளி விழா இன்று புதன்கிழமை (6-12-2017) பாடசாலை அதிபரான எனது (எம்.
இஸட். ஷாஜஹான்) தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட் சகோதரி எமலின் பிரதம அதிதியாகவும்,
அருட் சகோதரிகளான ஆன்மேரி, ஜுட், கிறிஸ்டா ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்கள்
பங்குபற்றிய வரவேற்பு நடனம் மற்றும் மூன்று மொழிகளிலும் கரோல் கீதம்
என்பன நிகழ்வில் இடம்பெற்றன.
Monday, November 27, 2017
Hameedians Fellowship Dinner – 2017
The Old Boys’ Association organized the Hameedians Fellowship Dinner –
2017 at Hotel Galadari, Colombo on 25th November 2017 in commemoration of the
133rd anniversary of the school. It paved the way for Old Hameedians to get
together and review the progress made by the school as well as the
contributions made by the OBA, G80’s, PPG, Hameedians FC, G99, OBA DUBAI and
OBA QATAR. Six Old Hameedians were felicitated at the event by awarding
Hameedians Fellowship Award for their outstanding contribution and support for
the development of the school in education, sports, extracurricular activities
and infrastructure development. The awardees were Al Haj Haroon Ahamed, Al Haj
Zainul Abdeen, Al Haj Imthiyas Farook, Al Haj K. R. Mohamed Akram, Al Haj A. A.
Mohamed Fowz and Mr. Faizal Buhary.
Subscribe to:
Posts (Atom)






