உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாரிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நகரங்களில்
நீர்கொழும்பு பிரதானமானதாகும். நீர்கொழும்பு கட்டுவபிட்டியவில் அமைந்துள்ள தேவாலயத்தின்
மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்காரணமாக
பல அப்பாவி உயிர்கள் பலியாயின. பலர் படுகாயங்களுக்கு
உள்ளாயினர். புலர் தமது உறவுகளை இழந்தனர்.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில்; உள்ள ஏனைய முஸ்லிம்களைப்
போன்று நீர்கொழும்பு வாழ் முஸ்லிம்களும் பல
வகைகளிலும் பாதிக்கப்பட்டனர்.