பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, December 31, 2016

நீர்கொழும்பு நகரில் புத்தாண்டு சமய நிகழ்ச்சி (PHOTOS)

 நீர்கொழும்பு  நகரில்  அமைந்துள்ள தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். அத்துடன்; பெரியமுல்லையில் அமைந்துள்ள 'மஸ்ஜித் பஸ்ல்' முஸ்லிம் பள்ளிவாசலில் (Ahmadiya Muslim Mosque) அதிகாலை 4.20 மணியளவில் புத்தாண்டையிட்டு விசேட தொழுகை , உரை மற்றும் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன. மௌலவி அஸ்மத் அஹம்மத் புத்தாண்டு நற்சிந்தனை உரையை நிகழ்தினார்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புதிய ஆண்டு சகலருக்கும் நன்மைகள் தருகின்ற ஆண்டாக அமையட்டும்.

வாழ்த்துக்களுடன்

எம். இஸட். ஷாஜஹான் (KALANENJAN SHAJAHAN)



Saturday, December 24, 2016

உலகின் மிக உயரமான நத்தார் மரம் (வீடியோ)

உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று  கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெரும் எண்ணிக்கையான மக்கள் நத்தார் மரத்தை பார்க்க வந்தவாறு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதேவேளை, கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு தெரிவித்துள்ளது.

Saturday, December 17, 2016

காலஞ்சென்ற கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரருக்கு திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்திய முஸ்லிம்கள்

நீர்கொழும்பு நகரின் பிரதான விகாரையான அங்குருகாரமுல்ல  போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் (62 வயது) கடந்த செவ்வாய்க்கிழமை (13) இயற்கை எய்தினார்.  
 நீர்கொழும்பில் வாழும் சகல  இனமத  மக்களினதும் பெருமதிப்பை பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி விகாரையின் விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார். அவர் அகில இலங்கை சமாதான நீதவானாக சேவை புரிந்ததுடன் பல்வேறு சமூக பணிகளையும் ஆற்றி வந்தார்.

Wednesday, December 14, 2016

உலகம் போற்றும் சமாதானத் தூதர் முஹம்மத் நபி

(12-12-2016 அன்று   இக்கட்டுரை வீரகேசரியில் பிரசுரமானது.)

-     எம்..இஸட். ஷாஜஹான்

உலகம் போற்றிப் புகழும் உத்தமத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் இன்று (12-12-2016) கொண்டாடுகின்றனர்.
நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில் பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
ரஸ்ய தத்துவ மேதை டால்ஸ்டாய் என்பவர் மனிதனை  எடைபோடும் அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது  (ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (அல்குர்ஆன் 68:4)

நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் காலமானார்


நீர்கொழும்பு நகரின் பிரதான விகாரையான அங்குருகாரமுல்ல  போதிராஜாராம  விகாரையின் விகாராதிபதி கொந்தகேமுல்ல ஞானசிரி திஸ்ஸ தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.

 நீர்கொழும்பில்  சகல  இன மக்களினதும் பெருமதிப்பை பெற்றுள்ள ஞானசிரி தேரர் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்படி விகாரையின் விகாராதிபதியாக சேவையாற்றி வந்தார்.

இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை (17) மாலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 30, 2016

வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா (படங்கள்)

நீர்கொழும்பு கல்வி வலயத்தின் கட்டானைக் கோட்டத்தைச் சேர்ந்த வெலிஹேன றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் இன்று புதன்கிழமை (30) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட் தந்தை அமில கோமிஸ், அருட் சகோதரிகள், தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பிரிட்டோ மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, November 27, 2016

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்   கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து  தீ விபத்து இடம்பெற்ற  புனரமைப்பு செய்யப்படும் ஆறு மாடிக் கட்டடத்தில்  தற்காலிகமாக இயங்கி வந்த வந்த எக்ஸ்ரே பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புனரமைப்பு செய்யப்பட்டு வரும் வைத்தியசாலை கட்டிடத்தின் கீழ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை  திடீரென தீப்பிடித்தது. மின்சாரம் விநியோகிக்கும் (பெனல்போர்ட்)  அறையில்

Wednesday, February 3, 2016

68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் - video

இன்று கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949 ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின வைபமொன்றின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது தேசிய கீதம் தமி­ழிலும், பாடலாம் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.இந்தத் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ, தூய்­மை­யான ஹெல­உ­று­மய கட்­சியின் தலை­வரும் எம்.பி.யுமான உதய கம்­பன்­பில ஆகியோர் கடும் எதிர்ப்­புக்­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

Wednesday, January 27, 2016

சக்தி, சிரஸ தொலைக்காட்சி சேவைகளின் சிறந்த சிறந்த 'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளருக்கான விருது எம்.இஸட். ஷாஜஹானுக்கு

 சக்தி தொலைக்காட்சி சேவை, சிரஸ தொலைக்காட்சி சேவை, எம்.ரி.வி. தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின்  'யூ ரிப்போர்ட்' (News 1 st U- report)   செய்திப் பிரிவின்  ஏற்பாட்டில் மேல் மாகாணத்திற்கான சிறந்த   'யூ ரிப்போர்ட்' (U- report) நிருபருக்கான (U- report Eagle 2014/2015 Award)  விருது வழங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-1-2016) களுத்துறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களில் சிறந்த   'யூ ரிப்போர்ட்' ஊடகவியலாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மூவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கம்பஹா மாவட்டத்திற்கான விருது எனக்கு (எம்.இஸட். ஷாஜஹான்) வழங்கப்பட்டது.