பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, November 24, 2009

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற
தொலைக் காட்சி நாடக பிரதியாக்கப் போட்டியில் விருது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 1999 ஆம் ஆண்டு இளைஞர் விருது வழங்கள் விருது விழாவுக்காக அகில இலங்கை ரீதியில் நடத்திய தொலைக் காட்சி நாடக பிரதியாக்கப் போட்டியில் நான் முதலாம் இடம் பெற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் விருது பெறும் காட்சி.பரிசளிப்பு நிகழ்வு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

Sunday, November 15, 2009

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 1999ஆம் ஆண்டு, மாணவ சாகித்திய விழாவுக்காக உயர்கல்வி நிறுவனங்களில் கற்கும் மாணவர்களுக்காக அகில இலங்கை ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான் முதல் பரிசாக விருது பெறும் காட்சி.

Friday, October 23, 2009

1999 ஆம் ஆண்டு சமய கலாசார அமைச்சு தேசிய ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்று தேசிய சாகித்திய விழாவில் பரிசு பெறும் காட்சி.

2000 ஆம் ஆண்டு "சிலுமின" சிங்களப் பத்திரிகை தேசிய ரீதியில் நடத்திய தேசிய ஐக்கிய சாகித்திய விழாவுக்கான கவிதைப் போட்டியில் 3 ஆம் இடம் பெற்று பரிசு பெறும் காட்சி.
2002 ஆம் ஆண்டு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஆசிரியர் தின கௌரவிப்பின் போது மேல்மாகான முதமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடமிருந்து பரிசு பெறும் காட்சி.


1999 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பிதேச சாகித்திய விழாவில் கவிதை போட்டியில் முதலாம் பரிசு பெறும் காட்சி.நீர்கொழும்பு மேயர் ஆனந்த முனசிங்க பரிசு வழங்குகிறார்.


2002 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலை கழகத்தில் இதழியல் துறை தொடர்பான டிளோமா பட்டம் பெறும் காட்சி.


கல்வி அமைச்சு அகில இலங்கை ரீதியில் நடத்திய சுனாமி தொடர்பான பாடலாக்கப் போட்டியில் நான் முதலாமிடம் பெற்றேன். 1-8-2005 அன்று தேசிய நூலபிவிருத்தி சபையின் தலைவர் குனசேனவிதானவினால் 25 ஆயிரம் ரூபா பரிசு வழங்கப்படும் காட்சியும், பரிசு பெற்ற ஏனைய கவிஞர்களுடன் உள்ள காட்சியும்.




1993 ஆம் ஆண்டு சிங்களத் திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவுடன்.


1991 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளையாட்டு வர்னணையாளராக நான் கடமையாற்றினேன். விளையாட்டு வர்னணையாளர்களுக்கு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வழங்கப்பட்ட பயிற்சிநெறியின் பின்னர் அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட படம்.


பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற -(ஆசிரியர் பயிற்சி நெறி) வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.


1-9-1995 ஆம் ஆண்டு கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் கலை விழாவில்-(பம்பலப்பிட்டி – புதிய கதிரேசன் மண்டபத்தில் ) வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.




24-9-1984 ஆம் ஆண்டு கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் கலை விழாவில்-
(டவர் மண்டபத்தில் ) “இப்படியும் சில மனிதர்கள் “ நாடகத்தில் நான் தோன்றும் காட்சி.


Tuesday, September 22, 2009

"ஏன் இந்த மௌனம்" வெளியீட்டு விழா

எனது நான்காவது கவிதைத் தொகுதியான “ஏன் இந்த மௌனம்" வெளியீட்டு விழா 27-11-1999 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலைஞர் கலைச்செல்வன், கவிஞர் கலைவாதி கலீல், கவிஞர் மேமன் கவி , கவிஞர் இளநெஞ்சன் முர்ஸிதீன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் கணேசலிங்கம், பாடசலை ஆசிரியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். கலைஞர் கலைச்செல்வன், கவிஞர் கலைவாதி கலீல் ஆகியோர் நூல் விமர்சனம் செய்தனர். கவிஞர் இளநெஞ்சன் முர்ஸிதீன் கவி வாழ்த்து நிகழ்த்தினார்.அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் சில வருமாறு.