ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக
எழுதினார். ஹாரி பாட்டர் என்ற பெயரில் வெளிவந்த இந்த நாவல் பெரும் புகழையும் பணத்தையும் ராவ்லினுக்கு பெற்று தந்தது. இந்த வரிசையில் வந்த நாவல்களும், சினிமா படங்களும் வசூலில் சாதனை படைத்தன. இதனால் உலக கோடீஸ்வரர்களில் ஓருவரானார் ராவ்லின்.
எழுதினார். ஹாரி பாட்டர் என்ற பெயரில் வெளிவந்த இந்த நாவல் பெரும் புகழையும் பணத்தையும் ராவ்லினுக்கு பெற்று தந்தது. இந்த வரிசையில் வந்த நாவல்களும், சினிமா படங்களும் வசூலில் சாதனை படைத்தன. இதனால் உலக கோடீஸ்வரர்களில் ஓருவரானார் ராவ்லின்.
அதன்பின், டான் பிரவுன் என்பவர் டாவின்சி கோட் என்ற நாவலை எழுதினார். இந்த நாவலும் உலகளவில் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் எல் ஜேம்ஸ் என்ற பெண் எழுதிய காதல் பற்றிய நாவல் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி ஆன் லைனில் வெளியானது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில்,புத்தக வடிவில் 4 மாதங்களுக்கு முன் இந்த நாவல் வெளியிடப்பட்டது. விற்பனைக்கு வந்த 4 மாதத்திலேயே நாவல் 5.3 கோடி பிரதிகள் விற்று முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது என்று இதன் வெளியீட்டாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பிப்டி ஷேட்ஸ் வரிசையில் பிப்டி ஷேட்ஸ் டார்க்கர், பிப்டி ஷேட்ஸ் பிரீட் ஆகிய நாவல்கள் முறையே 36 லட்சம், 32 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. இதுகுறித்து நாவல் ஆசிரியர் எல் ஜேம்ஸ் கூறுகையில், என் நாவல் எல்லா கடைகளிலும் இருப்பதை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஆனால், ரேண்டம் ஹவுஸ் வெளியீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கூட, இந்த அளவுக்கு என் நாவல் விற்பனையாகும் என்று நினைத்து பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன் என்றார்.
தகவல்- இணையம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்