பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, December 28, 2013

'காவிய பிரதீப' பட்டம் தொடர்பாக - வீரகேசரி பத்திரிகை செய்தி.

அகில இலங்கை கவி சம்மேளனத்தினால் அடியேனுக்கு 'காவிய பிரதீப' பட்டம் வழங்கப்பட்டமை தொடர்பாக வீரகேசரி  பத்திரிகையில் இன்று சனிக்கிழமை (28-12-2013) இடம்பெற்றுள்ள  செய்தி.


Wednesday, December 25, 2013

மஹா ஓய 'வெந்நீர் ஊற்று கிணறுகள்’

கிழக்கு மாகாணத்தின் மஹா ஓய பிரதேச சபைக்குட்பட்ட  பகுதியில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்று கிணறுகளைப் பார்ப்பதற்காக அடியேன் கடந்த செவ்வாய்க்கிழமை  சென்ற போது எடுத்த படங்கள் இவை. அங்கு ஏழு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Wednesday, December 18, 2013

சென்னையில் நடைபெற்ற ''பாம்புகள் குளிக்கும் நதி'' கவிதை நூல் அறிமுகவிழா.

கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் அறிமுகவிழா  அண்மையில் இணை இயக்குனர் வேடியப்பன் ஏற்பாட்டில் சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெற்றது.

Monday, December 16, 2013

சிறுகதையில் இரண்டாமிடம்

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியில் (2013) நடத்திய அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் அடியேனுக்கு சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் கிடைத்துள்ளது. 

இற்கான பரிசளிப்பு நிகழ்வு (13-12-2013) வெள்ளிக்கிழமை முற்பகல் தேசிய நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கவிடமிருந்து அதற்கான

Saturday, December 7, 2013

விடுதலை கீதம் ஓய்ந்து விட்டது


ஒரு
கறுப்புச் சூரியன்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

முழு நிலவு
முழுமையாய்
மறைந்தது
கால(னின்) மேகத்திற்குள்..!

சிறையை வென்றவரை
காலன்
சிறைப்படுத்திக் கொண்டான்!

ஒரு சகாப்தம்
நிறைவுக்கு வந்தது!
ஒரு நீண்ட வரலாற்றின்
இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டு விட்டது.
விடுதலை கீதம்
ஓய்ந்துவிட்டது.