பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, December 31, 2012

பூத்தது புத்தாண்டுப் பூ (கவிதை)



காலச் செடியில்
வருடப் பூவொன்று
உதிர்ந்து விழ
மொட்டு விரித்தது
புதுப் பூ!

பூத்தது புத்தாண்டுப் பூ!



Thursday, November 1, 2012

பெண்ணே கேள்



லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
1-11--2012 அன்று ஒலிபரப்பான அடியேன் எழுதிய கவிதை


Saturday, September 29, 2012

மேல்மாகாண சாகித்திய விழா பாடலாக்கப் போட்டியில் திறந்தபோட்டிப் பிரிவில் பரிசு

 மேல்மாகாண சாகித்திய விழா-2012 நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு -7 இல் அமைந்துள்ள மேல்மாகாண அழகியல் நிலையத்தில் மேல்மாகாண போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார ,கலை கலாசார அலுவல்கள், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் உபாலி கொடிகார  தலைமையில் இட.ம்பெற்றது.

Friday, September 7, 2012

"இலங்கை எங்கள் நாடடா ! இன்பம் பொங்கும் வீடடா”

லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
6-9-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( "இலங்கை எங்கள் நாடடா இன்பம் பொங்கும் வீடடா )

கவிதை வாசிப்பவர் - ஸைபா மலீக்










Monday, September 3, 2012

நீரிழிவு நோயும் பாதங்களின் பராமரிப்பும்


நீரிழிவு நோய் மக்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும். இலங்கையில் நான்குபேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு

Saturday, August 18, 2012

சென்று வா இனிய ரமழானே!



புண்ணியம் பொழிந்த ரமழானே எமை(ப்)
   பிரிந்து நீயும் சென்றாயே
கண்ணியம் மிக்க நோன்பதனை - நீ
   கரங்களில் ஏந்தி வந்தாயே!
பண்ணிய பாவக் கறை யகற்றி - எமை(ப்)
   பக்குவப்படுத்திச் சென்றாயே
மண்ணகம் மீதில் அருள் சொரிந்து - பின்
   மறைந்தாய் ஏன் ரமழானே?

             --------------------    

Thursday, August 16, 2012

“ஏன் இந்த மௌனம்?”


லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
16-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( “ஏன் இந்தமௌனம்?” )

Wednesday, August 15, 2012

கல்வி மாணிப்பட்டம் (B.Ed)பெற்றபோது


3-4-2012 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது எனக்கு கல்வி மாணிப்பட்டம் (B.Ed) வழங்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை.




Friday, August 10, 2012

“மீண்டும் ஒரு தாஜ்மஹால்”


இலண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
9-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை ( “மீண்டும் ஒரு தாஜ்மஹால்”)

கவி சொல்பவர் - ஸைபா மலீக்


Thursday, August 9, 2012

ஹாரிபட்டரின் சாதனையை முறியடித்த பெண் எழுத்தாளரின் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவல்.


ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக

Monday, July 30, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 12-7-2012

இலண்டன் தமிழ் வானொலியில்“ வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில்

12-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை

கவி சொல்பவர் - ஸைபா மலீக்





இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான எனது கவிதை

 இலண்டன் தமிழ் வானொலியில்
வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்26-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை


கவி சொல்பவர் - ஸைபா மலீக்





Thursday, July 26, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் கலாநெஞ்சனின் கவிதை

இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும்
“வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.அவற்றை நீங்களும் கேட்கலாம்.மூன்று நிகழ்ச்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன.குரல் கொடுத்திருப்பவர் அறிவிப்பாளர் ஸைபா மலீக்


28-06-2012 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில் 




Friday, July 6, 2012

'இன்னும் உன் குரல் கேட்கிறது' - “நாளைய தீர்ப்புகள்” எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா


'இன்னும் உன் குரல் கேட்கிறது' (கவிதைத் தொகுதி) “நாளைய தீர்ப்புகள்” (சிறுதை தொகுதி) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Sunday, July 1, 2012

தொற்றல் அல்லாத நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம்


     - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

ஆரோக்கியம் ஒரு சிறந்த செல்வமாகும். எத்தனை கோடி பணம் இருந்தாலும் நோய் நொடிகளுடன் வாழ்ந்தால் எம்மிடமுள்ள செல்வத்தை கூட சரியாக அனுபவிக்க முடியாமல் போய் விடலாம்.

Saturday, June 30, 2012

நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலைய அறநெறி பாடசாலை மாணவர்களது நடனம்


சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவும் புத்தக கண்காட்சியும் 30-6-2012 அன்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் நடைபெற்றது.

Monday, June 25, 2012

அஷ்ரப் ஷிஹாப்தீனின் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்”- நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளரும், கவிஞரும் , பிரபல அறிவிப்பாளருமான அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்பு நூலான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 30.06.2012 சனிக்கிழமை பி.ப. 4.45க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Friday, June 22, 2012

நீர்கொழும்பில் மாட்டின் முகத் தோற்றத்தில் மீன்


நிர்கொழும்பு கடற்பகுதியில் மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை கொண்ட மீன் ஒன்று  பிடிக்கப்பட்டுள்ளது.
அதனை நீர்கொழும்பு தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை சேர்ந்த எம். அஸ்ரப் என்பவர்

Wednesday, June 13, 2012

'இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்'

- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள்.
ஒருவருடைய  வாழ்வில் மிக இனிமையானதும்மங்களகரமானதும், மறக்க முடியாததுமான விடயம்தான்

Thursday, June 7, 2012

பல்கலைக்கழக பகிடிவதைகள் கொண்ட காணொளி வெளியானமை ஏற்படுத்தியுள்ள தாக்கம்

 போராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பகிடிவதைகள் கொண்ட வீடியோ காட்சிகள் அண்மையில் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளில் காண்பிக்கப்பட்டன.

Saturday, May 19, 2012

வானொலிக் குயிலுக்கு கலாநெஞ்சனின் கவிதாஞ்சலி



கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
                     

(தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012  அன்று  கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இது.)


வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?

Tuesday, May 15, 2012

கானக் குயில் இராஜேஸ்வரி சண்முகத்திற்கு கவிதாஞ்சலி


 இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012 அன்று கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

 நிகழ்வில் கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.கவியரங்கில் நான் (கலாநெஞ்சன் ஷாஜஹான்) பாடிய கவிதை
   

Sunday, May 13, 2012

இன்று நடைபெற்ற மறைந்த வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா (படங்கள்)


இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்

Thursday, May 10, 2012

வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா


  இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது .

Thursday, April 19, 2012

நூரானியா ஹஸனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன்


இன்று காலை அநுராதபுரம் ரம்பாவெல - மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளரும், சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான நூரானியா ஹஸன் (Fawsul Hassan) அகால மரணமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சிரேஸ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹசன் வாகன விபத்தில் மரணம்:அறுவர் படுகாயம்

இன்று காலை அநுராதபுரம் ரம்பாவெல - மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளரும், சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான நூரானியா ஹசன் அகால மரணமானார்.

Wednesday, April 4, 2012

கல்விமாணி பட்டம்

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (3-4-2012)   நடைபெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது நான் கல்விமாணி பட்டம் (B.Ed) பெற்றேன்.

Tuesday, March 27, 2012

இலங்கையில் காதல் திருமணங்களில் 30 சதவீதம் தோல்வியில்?



25 வயதிற்கும் குறைந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்கள் 75 சதவீதம் தோல்வியில் சென்று முடிவடைவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Monday, March 26, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகம் அக்கினியுடன் சங்கமம்


காலம் சென்ற மூத்த ஒலிபரப்பாளர் வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகத்தின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு கலாபவனம் ஆகியவற்றில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகள் மாலை ஆறு மணியளவில்

Saturday, March 24, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி அம்மாவுக்கு கவிதாஞ்சலி


 (சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அன்னாருக்கான கவிதாஞ்சலி இது)
      கவியாக்கம் :- சாமஸ்ரீ தேசகீர்;த்தி கலாநெஞ்சன் ஷாஜஹான்


வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?

ஓ.... ராஜேஸ்வரி சண்முகம் (அம்மா) !
நீங்கள்
தேனில் குரல் நனைத்து
வார்த்தைகளைக் கோர்த்து பேசும் போது

Sunday, February 19, 2012

நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்


பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80 . உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார்.

Saturday, January 28, 2012

சாமஸ்ரீ தேச கீர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு

அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ தேச கீர்த்தி பட்டம் வழங்கி என்னை கௌரவித்தது.
இந்த பட்டமளப்பு விழா நேற்று சனிக்கிழமை (28-1-2012) பிற்பகல் 1.30 மணிக்கு இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் நடைபெற்றது.
அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் சாமஸ்ரீ பட்டமளிப்பு விழா


அகில இன நல்லுறவு ஒன்றியம் தொடர்ச்சியாக 18 ஆவது வருடமாக நடத்திவரும் சாமஸ்ரீ தேசிய பாராட்டு விழா நேற்று சனிக்கிழமை இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் அதன் தலைவர் சாமஸ்ரீ சரத் மலவர ஆராச்சி தலைமையில் நடைபெற்றது.

Thursday, January 19, 2012

வசந்தம் தொலைக்காட்சியில் கலாநெஞ்சன் ஷாஜஹான்

எதிர்வரும் 12 ஆ ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம் பெறுகிறது. அறிவிப்பாளர் நாகபூசணி கருப்பையா பேட்டி காண்கிறார்.

இதன் மறு ஒளிபரப்பு 23-1-2012 திங்கட் கிழமை முற்பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகும்.
Top of Form
Bottom of Form

இணையத் தளங்களுக்கான புதிய ஒழுக்கக்கோவை வெளியீடு

செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியொன்றை தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது. இந்த ஒழுக்க நெறிக்கு அமைய செய்தி இணையத்தளங்கள் செயற்படுவேண்‌டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையத்தளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ள

Saturday, January 14, 2012

வாசகர்கள் அனைவருக்கும் இனிய 

பொங்கல் வாழ்த்துக்கள்