பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, July 29, 2015

உலக நிலா உதிர்ந்தது

(டாக்டர் அப்துல் கலாம் மறைவு 27-7-2015)

உலக நிலா
உதிர்ந்தது!
பாரத மண்ணின்
அறிவியல் சூரியன்
விண்ணகம் புறப்பட்டது!

கனவு கண்ட
ஞான விழிகள்
மூடிக் கொண்டன
நிரந்தரமாய்....

ஒரு வரலாற்றுப் புத்தகத்தின்
இறுதி அத்தியாயம்
முற்றுப் பெற்றது.

'அக்கினிச் சிறகை'
தந்த ஆளுமை
பறந்து போனது
பாரதம் துறந்து!

கனவு காண
கற்றுத் தந்த
கனிந்த இதயம்
கனவாகிப் போனது.
எங்கள்
நினைவாகிப் போனது.

Sunday, July 19, 2015

புனித ரமழானை மறவோமே!




இறை மறை அருளப் பெற்ற
   இனிய நல் ரமழானே!
அருள் மாரி  பொழிந்து வந்த
   அற்புத ரமழானே!
இருள் நீக்கி ஒளி தந்த
   உன்னத ரமழானே!
இறை வனவன் நேசத்;தை
   பெற்றுத் தந்த ரமழானே!


இச்சைகளை அடக்கச் செய்த
   இங்கித ரமழானே!
அச்சங் கொள் இறைவன் மீது
   ஏன்று சொன்ன ரமழானே!
கஷ்டங்களை உணர்ந்து கொள்ள
   களம் அமைத்த ரமழானே!
நஷ்டப்பட்ட மனிதருக்கு
   நலங் கொடுத்த ரமழானே!

Saturday, July 18, 2015

மனிதனைப் புடம் போட்ட ரமழான் மாத நோன்பின் இனிய பெருநாள்

(18-7-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை.)

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஓரு மாதம் முழுதும் நோற்றுவிட்டு இன்று நாங்கள்  இனிய நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.
புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதத்திற்கு விடை கொடுத்து விட்டு  இனிய ஈதுல்; பித்ர் பெருநாளை கொண்டாடுகிறோம். ஆம்! 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டுவிட்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.