பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, August 30, 2011


நோன்புப் பெருநாள் தினத்தில் ரமழான் கற்றுத் தந்த போதனைகளை நினைப்போம்


புண்ணியம் பொழிந்த மாதம் எம்மை  விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மை விட்டு அகன்று விட்டது.
ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு ஷவ்வால் மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

Monday, August 22, 2011

லண்டன் தமிழ் இணைய வானொலியில் எனது
 (கலாநெஞ்சன் ஷாஜஹானின்)  பேட்டி
லண்டன் தமிழ் இணைய வானொலியில் (www.firstaudio.net) 21-8-2011 அன்று ஒலிபரப்பான கீதாஞ்சலி நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம் பெற்றது. கீதாஞ்சலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சஹிபா பேகம் என்னை பேட்டி கண்டார்.அதனை இங்கு கானொளியாக தருகிறேன்.உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.


Wednesday, August 17, 2011

கிறீஸ் மனிதனும் அப்பாவிக் காதலும்

(படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள் பெரிதாகத் தெரியும்)


Saturday, August 13, 2011


நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை 
பாதித்துள்ள கிறீஸ் பூதம்


நாட்டின் பல இடங்களிலும் கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சினை தலை விரித்தாடுகிறது.இதன் காரணமாக பல இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்துடன் அப்பாவிகள் சிலர் கொல்லப்பட்டும் பலர் தாக்கப்பட்டுமுள்ளனர். இச் சம்பவம் தினமும் தொடர் கதையாகிவருகிறது.
ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலர் கொள்ளை ,திருட்டு, வழிப்பறி மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

நடிகை ருக்மணி தேவியின் கல்லறையும்

மனித நாகரிகமற்ற அரசியல்வாதியும்



மறைந்த பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் பாடகியுமான ருக்மணி தேவியின் கல்லறை உட்பட சிலை இனந் தெரியாத நபர்களால் 12-8-2011 அன்று உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது.

Friday, August 5, 2011


வீரகேசரி பத்திரிகை 81 ஆவது அகவையில்


இலங்கையின் பிரபல தமிழ் தினசரி பத்திரிகையான வீரகேசரி பத்திரிகை 80 வருடங்களை பூர்த்தி செய்து இன்று 81 அகவையில் காலடி எடுத்து வைக்கிறது.
இப் பத்திரிகை 1930 ஆம் ஆண்டில் ஆரம்பமானது. இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அது அளப்பரிய சேவைகளை செய்துள்ளது. நடு நிலைமை தவறாது அது தரும் செய்திகளை யாவரும் பாராட்டுவர்.
நவீன கணனி மயமான பத்திரிகையாக அது மாறியுள்ளதுடன் இணையத் தினூடாகவும்  அது உலகெல்லாம் வளம் வருகிறது. வீரகேசரி நிறுவனம் மேலும் பல வெளியீடுகளையும் வெளியிடுகிறது.

Tuesday, August 2, 2011


வையகம் போற்றும் வான் மறை

இனிய திருக்குர்ஆனே!
இறை மறையே!
v   
நீ!
உலகின் இருளை
ஒழிக்க வந்த பேரொளி!
v   
ஆராய்பவர்களுக்கு
அட்சய பாத்திரம்!
v   
அறிவின் வேர்
வேருக்கு நீர்!
v   
அஞ்ஞானத்தின் பலி பீடம்
விஞ்ஞானத்தின் ஆய்வு கூடம்!
v   
ஆத்மீக சூரியன்
லௌகீக சந்திரன்!
v   

சாந்தி நபியின்
சமாதான தூது!
v   

Monday, August 1, 2011

​( நோன்பு தொடர்பாக நான் எழுதிய இக் கட்டுரை 1-8-2011 வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. )
புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்
"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

ஆம்! உலக முஸ்லிம்களின் வாழ்வில் மீண்டும் ஒரு முறை புனித ரமழான் வந்திருக்கிறது. அமல்கள் கோடி புரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், எமது வாழ்வில் மீண்டும் ஒரு முறை ஆன்மிக வசந்தம் வீச ரமழான் மாதம் பிறந்திருக்கிறது.

புண்ணியம் மொழியும் கண்ணியமிகு மாதமான இம்மாதம் பாவக் கறையகற்றும் மாதமாகும். பதினொரு மாதமும் நாம் செய்த பாவங்களை கழுவி பரிசுத்தப்படுத்துவதற்காக இனிய நோன்பு வருடத்தில் ஒரு தடவை வருகிறது.