பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, May 13, 2012

இன்று நடைபெற்ற மறைந்த வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா (படங்கள்)


இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்
காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் சாந்தி சச்சிதானந்தம்  தலைமை வகித்தார்.



பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்  ,  கல்முனை மாநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ,  புரவலர் காசிம் உமர் , கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீன்,  கவிஞர் மேமன் கவி ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டனர்.




இந்நிகழ்வில் கல்முனை மாநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கலாநிதி துரை மனோகரன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , அறிவிப்பாளர் புர்கான் பி இப்திகார் , இராஜேஸ்வரி சண்முகத்தின் மகன்  அறிவிப்பாளர் சந்திரகாந்தன் சண்முகம் , கவிஞர் மேமன் கவி, எழுத்தாளர் சுல்பிகா சரீப் ஆகியோர் உரை நிகழ்த்தினர்







 கானக் குயிலுக்கு கவிதை குரல்கள் என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம் பெற்றது. தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்களான நஜ்முல் ஹுசைன், பதியத்தளாவ பாரூக் , கலாநெஞ்சன் ஷாஜஹான்,  வெலிமடை மகாலிங்கம் , கிண்ணியா அமீரலி , கலைமகன் பைரூஸ் , சுகைதா ஏ கரீம் ,ஸைலஜா, கலையழகி வரதராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.



 







மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் அங்கு இடம்பெற்றன.










1 comment:

  1. பணி தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்