பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, December 12, 2017

மணப் பெண் அலங்காரம் மற்றும் அழகுக் கலை பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட  மணப் பெண் அலங்காரம் மற்றும் அழகுக் கலை பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி; பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-12-2017) அன்று நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் கலந்து சிறப்பித்தார். கெரவ அதிதிகளாக வைத்தியர் ரிம்ஸீனா

Wednesday, December 6, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா  இன்று  புதன்கிழமை (6-12-2017) பாடசாலை அதிபரான எனது (எம். இஸட். ஷாஜஹான்) தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட் சகோதரி எமலின் பிரதம அதிதியாகவும், அருட் சகோதரிகளான ஆன்மேரி, ஜுட், கிறிஸ்டா ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
   மாணவர்கள் பங்குபற்றிய வரவேற்பு நடனம் மற்றும் மூன்று மொழிகளிலும்  கரோல் கீதம்  என்பன நிகழ்வில்   இடம்பெற்றன.

Monday, November 27, 2017

Hameedians Fellowship Dinner – 2017

The Old Boys’ Association organized the Hameedians Fellowship Dinner – 2017 at Hotel Galadari, Colombo on 25th November 2017 in commemoration of the 133rd anniversary of the school. It paved the way for Old Hameedians to get together and review the progress made by the school as well as the contributions made by the OBA, G80’s, PPG, Hameedians FC, G99, OBA DUBAI and OBA QATAR. Six Old Hameedians were felicitated at the event by awarding Hameedians Fellowship Award for their outstanding contribution and support for the development of the school in education, sports, extracurricular activities and infrastructure development. The awardees were Al Haj Haroon Ahamed, Al Haj Zainul Abdeen, Al Haj Imthiyas Farook, Al Haj K. R. Mohamed Akram, Al Haj A. A. Mohamed Fowz and Mr. Faizal Buhary.

Sunday, November 26, 2017

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசிய கல்லூரி பழைய மாணவர்களின் நட்புறவு இரவு விருந்து (HAMEED AL HUSSEINIE COLLEGE FELLOWSHIP DINNER 2017)

 நான் கல்வி கற்ற கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசிய கல்லூரிக்கு தற்போது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 133 வருடங்களாகின்றன. கொழும்பில் உள்ள பிரபல முஸ்லிம் ஆண் பாடசாலையான எமது பாடசாலையில் கல்வி கற்றவர்களில் பலர்  பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
எமது கல்லூரியின் பழைய மணவர் சங்கத்தினர் நேற்று சனிக்கிழமை (25-11-2017) இரவு Colombo Galadari Hotel இல் நட்புறவு இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்தனர். இதில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
1980 இறகு பின் கல்வி கற்றவர்களும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்வி கற்ற பலரும் நிகழ்வில் பங்கு பற்றினர்.

Thursday, June 1, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம் சிறைச்சாலைக்கு அமைச்சர் சுவாமிநாதன் திடீர் விஜயம்: நேரடி ரிப்போர்ட்


 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருநது நான்கு விளக்கமறியல் கைதிகள் கடந்த  செவ்வாய்க்கிழமை (30-5-2017) அதிகாலை  1.30 மணியளவில் தப்பியோடியமையை அடுத்து சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலில் துளையை (ஓட்டையை) எற்படுத்தி  கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியுள்ள கைதிகள் பல்வேறு  சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.
சத்துர மதுசங்க (25 வயது), விபுல சுரங்க முனசிங்க (19 வயது), பி. ஜயகுமார். (26 வயது), மொஹமத் நவுபர் தவுபீக் முஹம்மத் நஸீம் (26 வயது) ஆகியோரே

Tuesday, May 30, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

 நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் இன்று   (30-5-2017) அதிகாலை 1.30 மணியளவில் தப்பியோடியுள்ளனர்.
 சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலை உடைத்துக் கொண்டு கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிய வருகிறது. அந்த மதிலில்  ஒன்றரை அடி துளையை (ஓட்டையை) எற்படுத்தி  இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியுள்ள கைதிகள் பல்வேறு  சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருபவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டுள்ளவராவார்.

Saturday, April 22, 2017

நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நீர்கொழும்பில் நடைபெற்ற தமிழ், சிங்கள புத்தாண்டு விழா விளையாட்டுப் போட்டிகள்

மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில்  தமிழ், சிங்கள புத்தாண் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (22-4-2017)  நீர்கொழும்பில் நடைபெற்றது.
 நீர்கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து செத் சரண அமைப்பு, கொழும்பு கரிடாஸ் அமைப்பு  ஆகியன இணைந்து இந்த புத்தாண்டு விழாவை நீர்கொழும்பு கொட்டுவ மைதானத்தில் நடத்தின.
இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், செத் சரண அமைப்பு, கொழும்பு கரிடாஸ் அமைப்பு  ஆகியவற்றின் முக்கியஸ்த்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, April 14, 2017

சித்திரை புத்தாண்டையிட்டு நீர்கொழும்பு ஆலயங்களில் இடம்பெற்ற விசேட பூஜைகள்

சித்திரை புத்தாண்டையிட்டு நீர்கொழும்பில் அமைந்துள்ள ஆலயங்களில் இன்று (14) காலை விசேட பூஜைகள் இடம்பெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையானோர்  பங்குபற்றினர்.

 நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ சிங்கமா காளி அம்பாள் ஆலயம் ஆகியவற்றில்  இன்று (14-4-2017)  காலை இடம்பெற்ற

Thursday, April 13, 2017

60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குமாறு வலியுறுத்தி சைக்கிளில் சாதனைப் பயணம்

 இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் இன, மத, மொழி பாகுபாடின்றி போதுமான அளவு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை, அரசாங்கம் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் சகல முதியவர்களும் சுயகௌரவத்துடனும். நிம்மதியாகவும் வாழ வகை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தின் கவனத்தை இந்த விடயம் தொடர்பாக ஈர்க்கும் நோக்கில் 1515 கிலோமீற்றர் சாதனைப் பயணத்தை சைக்கிளில் ஆரம்பித்துள்ள வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த  தர்மலிங்கம் பிரதாபன் நேற்று (12-4-2017) இரவு 8 மணியளவில்   கொழும்பு நோக்கி செல்லும் வழியில் நீர்கொழும்பு நகரை வந்தடைந்தார்.

Friday, February 10, 2017

தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் கலை விழா (படங்கள்)

 நீர்கொழும்பு தளுபத்தை விவேகானந்த பாலர் அறிவாலய மாணவர்களின் கலை விழா வெள்ளிக்கிழமை (10-2-2017) மாலை  நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில்  தலைவர் ஜி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் , வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர். எம்.இஸட். ஷாஜஹான்தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய பிரதி அதிபர் செல்வகுமார் , நுவரெலிய வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி எஸ்.பாமினி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Wednesday, January 11, 2017

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு (படங்கள்)

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை பாடசாலை அதிபர் எம்.இஸட்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில்  புதிய மாணவர்கள் தரம் இரண்டில் கற்கும் மாணவர்களால் மலர்ச் செண்டு வழங்கி வரவேற்கப்படுவதையும், ஆசிரியர்களால் வகுப்பறைக்கு அழைத்துச் செல்லப்படுவதையும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாற்சோறு வழங்குவதையம்,

Thursday, January 5, 2017

நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்கு நத்தார் பரிசு வழங்கிய மாணவர்கள்

நீர்கொழும்பு வலய  கல்விக் காரியாலயத்தினால் நீர்கொழும்பு வலய பாடசாலை அதிபர்களுக்காக   பமுனுகம கொன்ஸல்வேஸ் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (5) நடத்தப்பட்ட மாதாந்த கூட்டத்தின் போது அந்த பாடசாலையினால்  பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு நத்தார் பரிசு வழங்கப்பட்டது.
கொன்ஸல்வேஸ் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ஆனந்த விதான மற்றும் கல்லூரியின் மாணவர் தலைவர்களினால் நத்தார் பரிசு வழங்கப்பட்டதுடன் நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.