பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, October 4, 2011

‘ பேஸ் புக்' தொடர்பாக 1000 முறைப்பாடுகள்

பேஸ் புக்' சமூக வலைத்தளத்தின் மூலம் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகக் கடந்த 10 மாதக் காலப்பகுதியில் 1000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணினி அவசர பொறுப்புக் கூறல் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

போலியான தகவல்களை கொண்டு "பேஸ் புக்' கணக்குகளை வைத்திருத்தல் மற்றும் அடுத்தவரின் அனுமதியின்றி அவர்களின் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல் தொடர்பாகவே அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசர பொறுப்புக் கூறல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தவிர சட்ட விரோதமான முறையில் இரகசிய குறியீட்டு இலக்கங்களைத் தெரிவித்துக்கொண்டு அந்த கணக்குகளுக்குள் ஊடுருவல் செய்தல் மற்றும் கப்பம் பெற முயற்சித்த சம்பவங்கள் தொடர்பாகவும் அந்தக் குழுவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் முறைப்பாடுகளை கிடைத்துக்கொண்டிருப்பதாகவும் முறைப்பாடுகள் தெரிவிப்போர் பொலிஸாரிடமும் தெரிவிக்க முடியுமெனவும் கணினி அவசர பொறுப்புக் கூறல் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்