பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, April 22, 2015

நீர்கொழும்பில் நடைப்பெற்ற ‘மொட்டைக் கடிதம்’ குறுந்திரைப்பட அறிமுக விழா

 நீர்கொழும்பு  எஸ்.எஸ். ட்ரீம் சினிமா (SS  Dream cinema) சார்பில் . ஆர். சிவலிங்கம்,  ஜி. சசிதரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘மொட்டைக்கடிதம்குறுந்திரைப்பட அறிமுக விழா கடந்த (19-04-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை  நீர்கொழும்பு இந்து இளைஞர்  கலாசார மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு ஸ்ரீகுகேஸ்வர குருக்களின் பூஜை  மற்றும் ஆசியுரையுடன் விழா அரம்பமானது. இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ.ஜெயராமன் அறிமுக விழாவைப் பற்றி விளக்கமாக உரையாற்றினார். குறுந் திரைப்படங்களைப் பற்றி மு.ஜெயகாந்தன் சிறப்பாக உரையாற்றினார்.



'மொட்டைக் கடிதம்' அனுப்புவோரின் செயற்பாடுகளினால் சமூகத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளை இந்த குறுந்திரைப்படம் விளக்குகிறது.
திரு.கனகராஜா, திரு.தீபன், திரு.ஸ்ரீதரன், திரு.சிவா, திரு.சசி, மாக்கஸ், என்ட்டன், பிரான்சிஸ் ராஜா, ரகுபதி, ரஜினிராஜ், தர்மிளா, பிரமிளா, கவிஷா, காயத்திரி அகியோர் நடித்துள்ள இக் குறுந்திரைப்படத்தை .சு.சிவலிங்கம், .பு.சசிதரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இக்குறுந்திரைப்படத்திற்கு ‘இளையகவி’ சிவா பாடல் இயற்ற, நீர்கொழும்பு கே. விஜயரட்னம் பாடலை பாடுகிறார். நீர்கொழும்பு மனோபாரதி எழுதி இயக்குகிறார். இவ்விழாவில் செல்வி தர்மிளா தயாரித்து வழங்கிய இரண்டு நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன.

ஜிட்டல் பிளஸ் புரடொக்ஷன் விஜயதாஸ் இப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த குறுந்திரைப்பட விழா ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதனை மனோபாரதி அழகாக விளக்கினார்.









ரஜினிராஜ் வரவேற்புரையும்,  கனகராஜ் நன்றி உரையும்  நிகழ்த்தினர்.   தொலைக்காட்சி அறிவிப்பாளர் எஸ். சந்திரசேகர் நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கினார். 



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்