கண்டியில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து நீர்கொழும்பு
நகரில் இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமலிருக்கும் வகையில் நீர்கொழும்பில் சர்வ மதத்
தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச
அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று வியாழக்கிழமை (8-3-2018) இரவு 8 மணியளவில்
நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளர்
ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நீர்கொழும்பு
மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர்
எம்.எஸ்.எம்.சகாவுல்லா, நீர்கொழும்பு பிராந்திய
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்துகோரல, உதவிப்
பொலிஸ் அத்தியட்சகர் வை.ஜி.ஆர்.எம்.ரிபாத், சர்வ மதத் தலைவர்கள், நீர்கொழும்பு பிரதேச
செயலாளர் ஏ.கே.ஆர். அலவத்த, மாநகர ஆணையாளர், மாநகர சபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மற்றும்
பிரதேச முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அருட் தந்தை சிஸ்வான் குரூஸ்,
மௌலவி சஹ்லான், குகேஸ்வர குருக்கள், பௌத்த தேர், நீர்கொழும்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்துகோரல, உதவிப்
பொலிஸ் அத்தியட்சகர் வை.ஜி.ஆர்.எம்.ரிபாத் ஆகியோர் உரையாற்றினர்.
அங்கு உரையாற்றியவர்கள் நீர்கொழும்பு நகரில்
பிரச்சினைகள் ஏற்படாமலிருப்பதற்காக சர்வ மதத் தலைவர்கள், அரசியல் தலைமைகள், பிரதேச
முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
நீர்கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வை.ஜி.ஆர்.எம்.ரிபாத்
தெரிவித்தார்.
நீர்கொழும்பு நகரில் வெள்ளிக்கிழமை (9) ஹர்த்தால்
நடத்தப்டமாட்டாது எனவும்; ஜும்மா தொழுகையின் பின்னர் எதிர்ப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது
எனவும் நீர்கொழும்பு பெரியபள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் அங்கு அறிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்