பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, June 13, 2012

'இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்'

- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள்.
ஒருவருடைய  வாழ்வில் மிக இனிமையானதும்மங்களகரமானதும், மறக்க முடியாததுமான விடயம்தான்
திருமணம்.

திருமணத்தின் போது ஒருமை ஓரங்கட்டப்பட்டு பன்மை பதவிக்கு  வருகிறது. ஈருயிர் ஓருயிராகிறது. மூன்றாவது உயிர் பிறக்கிறது.

சட்ட ரீதியான முறையிலும் சமயம் மற்றும் குடும்ப சமூக அங்கீகாரத்துடன் ஆண், பெண் ஜோடி இணைந்து வாழ்வதற்கு திருமணம் புரிவது அவசியமாகிறது. மேலும்  பல காரணங்களும் உள்ளன.

திருமணம் புனிதமானதும் மனித தேவையுடையதுமான விடயமாகும். எமது நாட்டு கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களில் திருமணத்திற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.


மேலைத்தேய நாடுகள் போல ஆண், பெண் ஜோடிகள் சட்ட ரீதியான முறையில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதை எமது சமூகம் அங்கீகரிப்பதில்லை. அந்த நாட்டவர்கள்  போல்  சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் விவாகரத்து செய்யும் கலாசாரமும் எம்மிடம் இல்லை.

ஆயினும்புதிய ஆய்வுகளின்படி எமது நாட்டில் திருமணங்கள் பல தோல்வியில் முடிவடைவது அதிகரித்து வருவதாகவும், விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கண்டறியப்பட்டு அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

திருமண வாழ்க்கையின் தோல்விகள், ஏமாற்றங்கள் , பிரிவுகள் என்பன தனி மனிதனின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்காகவே இந்தக் கட்டுரையில் இந்த விடயம் பற்றி ஆராயப்படுகிறது.



25 வயதிற்கும் குறைந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களில் 75 சதவீதம் தோல்வியில் முடிவடைவதாக சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது.

குடும்ப வாழ்க்கை தோல்வியில் முடிவடைவதற்குக் காரணம் 25 வயதிற்கும் குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்வது எனவும், கிராமப் பகுதிகளில் இவ்வாறான திருமணங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிரந்தர தொழில் இல்லாத ஒருவருக்கு இவ்வாறு திருமணம் செய்து வைப்பதால் அல்லது திருமணம் செய்வதால் சிறிது காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை தோல்வியில் சென்று முடிகிறது எனவும்கல்வி அறிவு குறைவும் குடும்ப வாழ்க்கையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது எனவும் சுகாதார அமைச்சின் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து திருமணம் செய்வோரில் 30 சதவீதமானோரின் திருமணம் தோல்வியில்  முடிவடைவதாகவும் சுகாதார அமைச்சு மேற்கொண்ட அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் திருமணம் செய்யும் 60 சதவீதமானவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் திருமணம் கசப்பதாகவும் அதிக எண்ணிக்கையானோர் விவாகரத்து செய்வதாகவும் இன்னொரு ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு விவாகரத்து செய்யும் பெரும்பாலான தம்பதிகள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தம்பதியினர் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டிய காலத்தில் உணர்வுபூர்வமாக சரியாக புரிந்து கொள்ளாமைஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் நடக்காமை, சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ளாமை, பாலியல் தேவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமை மற்றும் பாலியல் தொடர்பாக தவறாக புரிந்து கொண்டுள்ளமையே இது போன்ற விவாகரத்துக்கு பிரதான காரணம் என அந்த ஆய்வின் மூலமாக மேலும் தெரிய வந்துள்ளது.


அதேபோல்நாட்டில் விவாகரத்து புரிவோர் வீதாசாரம் சீக்கிரமாக அதிகரித்து வருவதாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அதிக எண்ணிக்கையானவை விவாகரத்து தொடர்பானவை எனவும் அந்த ஆய்வினை மேற்கொண்ட சட்டத்தரணி ரொஜி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன அல்லவா?

பிரச்சினைகள், காதல் தோல்விகள், விவாகரத்துக்கள், பிரிவுகள் என்பன சம்பந்தப்பட்டோரில் மேலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது உண்மை.

அவை அவர்களது உடல், உள, சமூக ரீதியான ஆரோக்கியத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

அவற்றில் முக்கியமானவைகளை பார்ப்போம்.

1. கவலைகளை மறப்பதற்காக சிகரட், மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துதல் அல்லது அடிமையாதல்.
2. இதன் காரணமாக நோய்களுக்கும் (இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் போன்றன) உடல் பாதிப்புக்களுக்கும் ஆளாதல்.
3. உள ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாதல்.
4. விரக்திவெறுப்பு.
5. ஒதுக்கி வாழுதல்.
6. உணவில் நாட்டமின்மை.
7. எளிதில் நோய்களுக்கு ஆளாதல்.
8. உடல் ஆரோக்கியத்திலும் உடல் தோற்றத்திலும் கவனம் செலுத்தாமை.
9. தற்கொலை முயற்சி அல்லது தற்கொலை புரிதல்.
10. தவறான பாலியல் பழக்க வழக்கங்கள் மற்றும் தவறான பாலியல் தொடர்புகள் ஏற்படும் வாய்ப்பு.
11. திருமணத்திற்கு அப்பாலான தொடர்புகள், நட்புகள், உறவுகள் ஏற்படல்.
இன்னும் இது போன்றன.

இப்பிரச்சினைக்கான தீர்வுகள் சில

1. பிரச்சினைகள் ஏற்படும் போது அறிவு ரீதியாக தீர்மானம் எடுத்தல்.
2. ஒருவரையொருவர் வெளிக்கவர்ச்சிகளுக்கு மயங்கி காதலித்து திருமணம் செய்யாமல் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ளல்.
3. சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளல்.
4. விட்டுக் கொடுப்புடன் நடத்தல்.
5. ஒருவரை ஒருவர் உண்மையாக நேசித்தல்துரோகம் இழைக்காமை.
6. திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் தாம்பத்திய        உறவை பேணுதல்.
7. காதலர்கள் திருமணத்திற்கு முன்னர் பாலியலில் ஈடுபடாமை.
8. பிரச்சினைகள் ஏற்படும் போது தமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள முயற்சித்தல்.
9. பொருளாதார ரீதியில் தம்மை வளப்படுத்திக் கொள்ளல்.
10. சமய நெறிமுறைகளை பின்பற்றல்.
11. தொலைக்காட்சி நாடகம், திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் மேலைத்தேய கலாசாரங்களை பின்பற்றும் விடயத்தில் கவனமாக இருத்தல்.
12. குடும்ப வன்முறைகளில் ஈடுபடாமை. (அடித்தல், அச்சுறுத்தல், எச்சரித்தல்தீங்கிளைத்தல், கொடுமைப்படுத்தல், ஏசுதல் போன்றன)
13. மிக இளவயதில் திருமணம் செய்யும் போது ஏற்படும் குடும்பபொருளாதார ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுத்தல்.
14. பெற்றோரின் விருப்பத்துடன் அல்லது அனுமதியுடன் திருமணம் செய்தல்.
15. விவாகரத்து செய்வதை  முடிந்தளவு தவிர்த்தல்.
16. பாடசாலை வாழ்க்கையில் கல்விக்கு மாத்திரம் முக்கியம் கொடுத்தல். காதலில் ஈடுபட்டு கல்வியையும் வாழ்க்கையையும் வீணாக்காதிருத்தல்.
17. குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்ளல்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்