எழுத்தாளரும், கவிஞரும் , பிரபல அறிவிப்பாளருமான அஷ்ரப் ஷிஹாப்தீனின் மொழிபெயர்ப்பு நூலான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 30.06.2012 சனிக்கிழமை பி.ப. 4.45க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், மொறிஷியஸ் நாட்டின் இலங்கைக்கான கௌரவத் தூதுவர் தெ.ஈஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், இந்திய முஸ்லிம் லீக் - தேசியச் செயலாளரும் தமிழக மாநிலத் தலைவருமான திருமதி பாத்திமா முஸப்பர் சிறப்பு அதிதியாகவும், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூல் அறிமுகவுரையை சட்டத்தரணி திருமதி சுகந்தி ராஜகுலேந்திரா வழங்கவுள்ளார். நூல் மதிப்புரையை பேராதனைப் பல்கலைக் கழக மெய்யியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸும், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க. இரகுபரனும் நிகழ்த்தவுள்ளனர்.
.நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்