நீர்கொழும்பு நகர வர்த்தகப் பிதேசங்களின் சில இடங்களிலும் குறிப்பாக
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாகவும் விபசாரிகளுக்கு எதிராக
ஒட்டப்பட்டுள்ள 'அசிட் வீச்சு' எச்சரிக்கை சுவரொட்டிகள் காரணமாக வீதியோர விபசாரிகள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டடிருந்தன. இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த வீதியோர விபசாரிகளை அங்கு காணமுடியவி;ல்லை. இந்நிலையில் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு நகரின் ஹோட்டல்களிலும், சட்டவிரோதமாக நடத்தப்படும் விபசார
விடுதிகளிலும் பாதுகாப்புடன் பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வீதியோரத்தில் நின்றபடி
விபசாரத்திற்காக ஆண்களை அழைக்கும்; பெண்களுக்கு இந்த
எச்சரிக்கையானது அவர்களை பெரிதும் அச்சம் கொள்ளச் செய்துள்ளதாக
சுட்டிக்காட்டப்படுகிறது.
விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை ;அசிட்' ஆகும் என்பன போன்ற வாசகங்கள் சிங்களத்தில்
எழுதப்பட்ட சுவரொட்டிகளே அங்கு ஒட்டப்பட்டுள்ளன.
விபசாரத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்றால் அதற்கான தண்டனயை வழங்கும்
அதிகாரத்தை இனந்தெரியாத நபர்களுக்கு வழங்கியது யார்? இது மனித உரிமை மீறலும்
அச்சுறுத்தும் செயலுமாகும் எனம் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்