(டாக்டர் அப்துல் கலாம் மறைவு
27-7-2015)
உலக நிலா
உதிர்ந்தது!
பாரத மண்ணின்
அறிவியல் சூரியன்
விண்ணகம் புறப்பட்டது!
கனவு கண்ட
ஞான விழிகள்
மூடிக் கொண்டன
நிரந்தரமாய்....
ஒரு வரலாற்றுப் புத்தகத்தின்
இறுதி அத்தியாயம்
முற்றுப் பெற்றது.
'அக்கினிச் சிறகை'
தந்த ஆளுமை
பறந்து போனது
பாரதம் துறந்து!
கனவு காண
கற்றுத் தந்த
கனிந்த இதயம்
கனவாகிப் போனது.
எங்கள்
நினைவாகிப் போனது.
ஓ...உலக மேதையே!
எங்கள் அப்துல் கலாம்!
நீங்கள்
மரணிக்கும் போதும்
மாணவர்களுடன் இருந்த
மகத்தான ஆசான்!
'விதைத்தவன் உறங்கலாம்.
விதைகள் உறங்குவதில்லை!'
இது உங்கள் கூற்று.
நீங்கள்
விதைத்த விதைகள் ஏராளம்.
நீங்கள் உறங்குங்கள்.
அவைகள் உறங்காது.
சரித்திர நாயகர்கள்
மரணிப்பதில்லை!
நின் நாமம்
நிலைக்கும் நாளும்!
- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
Really heart felt
ReplyDeleteMay rest in peace RIP