கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நீர்கொழும்பு பிரதேச செயலகம் ஏற்பாடு
செய்திருந்த 'நீர்கொழும்பு பிரதேச
சாகித்திய மகோற்சவம்' இன்று செவ்வாய்க்கிழமை (29-9-2015) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் பிரதேச
செயலாளர் ஏ.கே.ஆர். அலவத்த தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர,
மேல் மாகாண சபை
உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். பிரபல சிங்கள
கலைஞரும் அறிவிப்பாளரும் பாடலாசிரியருமான
வசந்த துக்கன்னாரால விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு சாகித்தியம் தொடர்பாக
உரையாற்றினார்.
நீர்கொழும்பு பிரதேச சாகித்திய மகோற்சவத்திற்காக பாடசாலை
மாணவர்கள் மத்தியிலும், திறந்த போட்டியாகவும் தமிழ்,
சிங்களம்,
ஆங்கில மொழிகளில்
நடத்தப்பட்ட இலக்கியப் போட்டி
நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியோருக்கு நிகழ்வில் சான்றிதழ்களும் பரிசில்களும்
வழங்கப்பட்டன. அத்துடன் கடந்த வருடம் கலாபூசணம் விருது பெற்ற நீர்கொழும்பு பிரதேச
செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இரண்டு கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் எனக்கு
பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் கவிதையாக்கம்,
பாடல் இயற்றுதல் ஆகிய
போட்டி நிகழ்ச்சிகளில் முதலாமிடங்களுக்காகவும் சிறுகதைப் போட்டியில் மூன்றாமிடம்
பெற்றமைக்காகவும் சான்றிதழ்களும்
பரிசுகளும் கிடைத்தன.
இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்