பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, November 27, 2015

கட்டானை கந்தவலை பிரதேசத்தில் ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்தது

கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஓல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட  200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளது.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்  புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்ட  60 அடி உயரமான இந்த கோபுரம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

Saturday, November 21, 2015

பிரதேச, மாவட்ட சாகித்திய விழா போட்டிகளில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு நான்கு பரிசில்கள்

 நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து  2015 ஆம் ஆண்டுக்கான பிரதேச சாகித்திய கலா மகோற்சவத்திற்காக நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளில் எனக்கு இரண்டு முதலாமிடங்கள் கிடைத்துள்ளன.

  திறந்த போட்டிப் பிரிவில் கவிதை மற்றும் பாடலாக்கம் ஆகிய போட்டிகளிலேயே  எனக்கு   இரண்டு முதலாமிடங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் கம்பஹா மாவட்ட செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மாவட்ட சாகித்திய கலா மகோற்சவத்திற்காக (2015) நடத்திய இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகளிலும்  அடியேனுக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 

Friday, November 13, 2015

திரும்பிப்பார்க்கின்றேன். முஸ்லிம் சகோதரர்களே அல்லாவின் நாமத்தால் அவர்களை மன்னித்துவிடுங்கள். யாழ்ப்பாணம் உங்களை அழைக்கட்டும். முஸ்லிம் வட்டாரத்தில் உங்கள் பாங்கோசை ஒலிக்கட்டும். இரண்டு குழந்தைகள் உலகிற்குச்சொன்ன ஞானோபதேசம் - முருகபூபதி - அவுஸ்திரேலியா

எமது  ஊரில்  எமது  வீட்டுக்கு  அருகாமையில்  காமாச்சோடை   என்ற இடம்   இன்றும்  அதேபெயருடன்  அழைக்கப்படுகிறது.   கடற்கரையை அண்டியிருக்கும்    இந்த  இடத்தில்தான்  பள்ளிவாசல்,   முஸ்லிம்  பாடசாலை,   மீன்கடை,   கூட்டுறவுச்சங்கத்தின்  அரசிமூடைகள்  பாதுகாக்கப்படும்    பெரிய  களஞ்சிய  மண்டபம்,   மரக்கறி  சந்தை, இறைச்சிக்கடை,    கிங்ஸ்   தியேட்டர்   , கள்ளுத்தவறணை,   விளையாட்டு மைதானம்   யாவும்  இருந்தன.
ஒருகாலத்தில்  இந்த  இடத்தில்  அமைந்திருந்த  ஒரு  காமாட்சி  அம்மன் கோயிலை   கடலால்  வந்து  ஆக்கிரமித்த  போர்த்துக்கீசர்  இடித்துவிட்டனர். அதன்  சுவடே   மறைந்துவிட்டதாக  எனது  பாட்டி  சிறுவயதில் சொல்லியிருக்கிறார்.
தற்பொழுது   அவ்விடத்தில்  நிறைய மாற்றங்கள்  நேர்ந்துவிட்டன.
மீன்கடை,    இறைச்சிக்கடை,    அரிசிக்களஞ்சியம்,   கிங்ஸ்  தியேட்டர்  என்பன மறைந்துவிட்டன.   ஆனால்,  இன்றும்  அங்கே  பள்ளிவாசலும், பாடசாலையும்    இயங்குகின்றன.    பள்ளிவாசல்  தெருவில்    காலாதிகாலமாக   முஸ்லிம்  மக்களும்   செறிந்துவாழ்கிறார்கள்.

Sunday, November 1, 2015

வாழ்த்துப்பா

 ( நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளி விழா 'கலை விழா' ஞாயிற்றுக்கிழமை (1-11-2015) மாலை அஹ்மதியா ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அடியேன் வாழ்த்துப் பா வாசிக்கும் காட்சியும், சபையோரும்)   

                 வெள்ளி விழாக் காணும்
                        அஹ்மதிய்யா பள்ளிக் கூடமே
                   துள்ளி;த் திரியும் பாலகர்கள்
                        அறிவைத் தேடும் கூடமே!

                   வண்ணத்துப் பூச்சிகள்
                        பறக்கும் சோலையே
                   சின்னஞ் சிறு சிறுவர்கள்
                        கல்வி கற்கும் சோலையே!

                   சீர் கல்வி நற்பண்பு
                        பாலர் வகுப்பிலே
                   வேர் பதிக்கும் நிச்சயமாய்
                       ‘அஹ்மதிய்யா' வகுப்பிலே!