பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, February 3, 2016

68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் - video

இன்று கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949 ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின வைபமொன்றின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது தேசிய கீதம் தமி­ழிலும், பாடலாம் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.இந்தத் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ, தூய்­மை­யான ஹெல­உ­று­மய கட்­சியின் தலை­வரும் எம்.பி.யுமான உதய கம்­பன்­பில ஆகியோர் கடும் எதிர்ப்­புக்­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர்.


இந்த நிலை­யி­லேயே இன்­றைய சுதந்­திர நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழில் பாடு­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டு  கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்