நான் கல்வி கற்ற கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசிய
கல்லூரிக்கு தற்போது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 133 வருடங்களாகின்றன. கொழும்பில்
உள்ள பிரபல முஸ்லிம் ஆண் பாடசாலையான எமது பாடசாலையில் கல்வி கற்றவர்களில்
பலர் பல்வேறு துறைகளிலும் சிறந்து
விளங்குகின்றனர்.
எமது கல்லூரியின் பழைய மணவர் சங்கத்தினர் நேற்று
சனிக்கிழமை (25-11-2017) இரவு Colombo Galadari Hotel இல் நட்புறவு
இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்தனர். இதில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
1980 இறகு பின் கல்வி கற்றவர்களும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்வி கற்ற பலரும் நிகழ்வில் பங்கு பற்றினர்.
1980 ஆம் ஆண்டில் கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில்
கல்வி கற்ற எனது நண்பர்கள் 14 பேர் வரை இந்த நிகழ்வில்
பங்குபற்றினோம். இது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
எனது ஆத்ம
நண்பன் அல்ஹாஜ் ஜெயினுலாப்தீன் இதில்
கலந்து கொள்வதற்காக அன்றைய தினம் காலை டுபாயிலிருந்து வருகை தந்திருந்தார்.
அவருடன் இணைந்து என்னுடன் கல்வி கற்ற மற்றொரு நண்பனான அஸ்லமும்
டுபாயிலிருந்து வருகை தந்திருந்தார்.
இவர்களுடன் நான்
நீர்கொழும்பிலிருந்தும் , நண்பர் இர்பான் கண்டியிலிருந்தும்
ஏனைய நண்பர்கள் ( அமான், மஹ்பூப், ஜாபிர்,
அஸார், ஹில்மி, நவாஸ் அலி, மஹ்ரூப், பிர்தவ்ஸ், அக்ரம்,
சக்வான், சிராஜ் ) ஆகியோர் கொழும்பு மற்றும்
அண்டிய பிரதேசங்களிலிருந்து வருகை தந்திருந்தார்கள்.
எங்கள் 14 பேரையும் ஒன்று சேர்த்து இந்த நிகழ்வில் பங்குபற்ற
வைத்த பெருமை நண்பன் ஏ.எச்.எம். அமான் என்பவரையே சேரும். வகுப்பில் குறும்பு செய்யும் நண்பர்களில் அவரும் முக்கியமானவர். ஆயினும் நண்பர்களை ஒன்று சேர்க்க
வைப்பதில் இவர் குறும்பு செய்யும் இன்னொரு நண்பனான மெஹ்பூபுடன் இணைந்து பெரு
முயற்சி செய்துள்ளமையை அங்கு சென்றதன் பின்னரே உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள
முடிந்தது.
Mr. M. Amaan
இந்த நிகழ்வில் நண்பனும் தொழிலதிபருமான அல்ஹாஜ் ஜெயினுலாப்தீன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை
சிறப்பம்சமாகும். அது எங்கள் குழுவினருக்குக் கிடைத்த கௌரவமாகும். அல்ஹாஜ்
ஜெயினுலாப்தீன் தான் கல்வி கற்ற பாடசாலையின்
அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக தாராளமாக உதவி புரிந்து வருபவராவார்.
இந்த நிகழ்வில் எமது நண்பர்கள் ஒருவரை ஒருவர்
சந்திக்கும் நோக்கில் ஆவலாக கலந்து கொண்டமையை உணரமுடிந்தது. பலர் கொழும்பில்
இருந்தாலும் அன்றுதான் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள்.
தொழில்
மற்றும் குடும்ப விபரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டோம். பழைய சம்பவங்களை மீட்டிப்
பார்த்தோம். கற்பித்த ஆசிரியர்களை
பற்றி விசாரித்தோம். தொலைபேசி இலக்கங்களை
ஒருவருக்கொருவர் பறிமாறிக் கொண்டோம். செல்லிடத் தொலைபேசிகளுக்கு வலியெடுக்கும் வரை புகைப்படம்
எடுத்துக்கொண்டோம்.
எங்கள் வகுப்பில் கல்வி கற்ற இன்னும் பல
நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் அடுத்த முறை சந்திப்போம் என்ற
நம்பிக்கையோடு இறைவனுக்கு நன்றி கூறி விடைப் பெற்றோம்.
- கலாநெஞ்சன்
ஷாஜஹான் (எம்.இஸட். ஷாஜஹான்)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்