மூத்தோர் அணியினரின் தலைவர் கே. ஏ. சபீயுல்லாஹ்
சாகிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிய வினா விடைப் போட்டி, உர்து நஸம் போட்டிகள்,
குர்ஆன் ஆயத்துக்களை ஓதும் போட்டி, ஞாபக சக்தியை அளவிடும் போட்டி உட்பட பல போட்டி நிகழ்ச்சிகள்
நடைபெற்றன. அத்துடன் பல்வேறு தலைப்புக்களிலும் விசேட உரைகள் இடம்பெற்றன.
Sunday, November 24, 2019
இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மூத்தோர் அணியினரின் வருடாந்த தேசிய மாநாடு (இஜ்திமா)
Saturday, May 25, 2019
Saturday, April 20, 2019
இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மாதர் அணியினரின் வருடாந்த கண்காட்சி SRILANKA LAJNA IMAILLAH , ANNUAL EXHIBITION 2019 ,
இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மாதர் அணியினர் (LAJNA IMAILLAH) வருடாந்தம் நடத்தும் பொருட் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று சனிக்கிழமை (20-4-2019) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலின் (MASJID FAZL) ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் மாணவிகளின் பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் ஆடை வகைகள், உணவு வகைகள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் குறைந்த விலையில்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன், வெலிசறையில் அமைந்துள்ள அரசாங்க ஹோமியோபதி
வைத்தியசாலையின் உதவியுடன் வைத்தியர் திருமதி
பரீனா பேகம் தலைமையில் அங்கு நோயாளிகளுக்கு இலவசாமாக ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த
அஹ்மதியா ஜமாஅத்தின் கிளை அமைப்புகளைச் சேர்ந்த பெண்களும் சிறுவர் சிறுமிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Monday, March 4, 2019
நீர்கொழும்பு தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா
ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ ரவீந்ர குருக்கள்
தலைமையில் இரவு 8 மணிக்கு விசேட பூஜைகள் ஆரம்பமாயின.
இரவு 11 மணிக்கு இரண்டாம் சாம பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் சாம பூஜையும்,
அதிகாலை 5 மணிக்கு நான்காம் சாம பூஜையும் இடம்பெற்றன.
பூஜைகள் நடைபெறுவதற்கு
Sunday, February 3, 2019
சுதந்திர தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு, பொலன்னறுவை அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசல்களில்; விசேட பிரார்த்தனை நிகழ்வு (PHOTOS)
இலங்கையின்
71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (4)
காலை (9 மணிக்கு) நீர்கொழும்;பு பெரியமுல்லையில்
அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில்
விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
நீர்கொழும்பு ஜமாஅத் தலைவர் எச்.ஏ. இப்ராஹீம் தலைமையில்
நிகழ்வு நடைபெற்றது. தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. மௌலவி தாஹிர் அஹ்மத்
பிரார்த்தனை நடத்தியதுடன் சுதந்திர தின விசேட சொற்பொழிவை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்
நிகழ்த்தினார்.
Subscribe to:
Posts (Atom)