பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, March 4, 2019

நீர்கொழும்பு தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா



 நீர்கொழும்பு தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில்  நேற்று திங்கட்கிழமை  (4) இரவு மஹா சிவராத்திரி விழா இடம்;பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ ரவீந்ர குருக்கள் தலைமையில்  இரவு 8 மணிக்கு விசேட பூஜைகள் ஆரம்பமாயின. இரவு 11 மணிக்கு இரண்டாம் சாம பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் சாம பூஜையும், அதிகாலை 5 மணிக்கு நான்காம் சாம பூஜையும் இடம்பெற்றன.
பூஜைகள் நடைபெறுவதற்கு
  இடையில் கலை விழா நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றன. 
நிகழ்வில் வத்தளை - மாபொல நகர சபை உறுப்பினர் சசிகுமார் விசேட அதிதியாக கலந்து கொண்டார். தலைமை உரையை பி. லோகநாதன் நிகழ்த்தினார். நிகழ்வில் விசேட அதிதி பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
வரவேற்பு நடனம், பேச்சு,  அபிநயப்பாடல்,  பஞ்சப்புராணம் ஓதல், ஞான சம்;பந்தர் கதை,  கிராமிய நடனம், பரத நாட்டியம், காவடி நடனம், குத்தாட்டம், செம்பு நடனம், குழு நடனம், மற்றும் பக்திப் பாடல்கள் உட்பட பல கலை நிகழ்ச்சிகள் விடியும் வரை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.























Photos By  - M.Z.Shajahan










No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்