கம்பஹா மாவட்ட பிரதேச
ஊடகவியலாளர்களுக்கு கம்பகா மாவட்ட பிரதேச செயலகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை
ஸ்தாபனம் செயலமர்வொன்றை கடந்த சனிக்கிழமை(1-6-2013)
நடத்தியது.
'குற்றச் செயல்கள் மற்றும்
வன்முறைகளை அறிக்கையிடும் விடயத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்பு' என்ற
தொனிப் பொருளில் கம்பஹா “சாகெத” உற்சவ மண்டபத்தில் செயலமர்வு
நடத்தப்பட்டது.
தகவல் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சரித்ம த Nஹரத்தகவல் திணைக்களத்தின்
பணிப்பாளர் ஆரியரத்ன எத்துகல,
லங்காதீப ஞாயிறு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆரியானந்த
, இரத்னபுரி பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கெலின் ஆரியரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி
சட்டத்தரணி டப்ளியூ. தயாரத்ன ஆகியோர் நிகழ்வில் பல்வேறு தலைப்புக்களில் உரைiயாற்றினர்.
நிகழ்வின் இறுதியில்
செயலமர்வில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்