ஊவா
தேர்தலில் அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அரசாங்கம்
முஸ்லிம்களை கண்டுகொள்ளவில்லை என்பதை அரசு சார்பில் முஸ்லிம் வேட்பாளர்
ஒருவரையேனும் களமிறக்கப்படாததை வெளிக்காட்டியுள்ளது. இதனை மறைக்கவே தற்போது எமது
கூட்டமைப்பு அவர்களின் கடிவாளம் கைக்கூலிகள் என கூறி வருகின்றனர். இவையெல்லாம்
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஊவா முஸ்லிம்கள் நன்றாக சிந்தித்து செயல்பட
வேண்டும் அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும்
களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக
வெளிப்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும்
ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்
மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Thursday, September 11, 2014
வாக்கு வேட்டைக்காக கூட்டு சேர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் - தேச நேசன்
(தமிழ்த் தந்தி பத்திரிகை 31-8-2014)
தமிழ் திரைப்படமொன்றில் நகைச்சுவை நடிகர் ஒருவர் 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று கிண்டலாகக்
குறிப்பிடுவார். அதேபோன்று 'அரசியல் என்பது ஒரு சாக்கடை. அதில் எதுவேண்டுமானாலும்
கலக்கலாம்.' இது புpரபல அரசியல் விமர்சகரும் நடிகரும் எழுத்தாளருமான நடிகர் சோ கதை வசனம் எழுதிய பழைய
திரைப்படமொன்றில் வரும் வசனமாகும். இந்த வசனம் பிரபல்யமானது. ஊவா மாகாண சபை
தேர்தலில் அரசியல் பகையாளிகள் இருவர் கூட்டுச் சேர்ந்திருப்பதைப் பார்க்கும் போது
அந்த வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.
ஆம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸும் கூட்டுச் சேரந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதைத்தான் இங்கு
குறிப்பிடுகிறோம்.
Sunday, September 7, 2014
ஆடைத் தொழிற்சாலை யுவதி சமிலா திசாநாயக்காவை வல்லுறவு புரிந்து கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டணை (கட்டுரை) - எம்.இஸட்.ஷாஜஹான்

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் (12-11-2007அன்று) நடைபெற்று இக்கொடூரச் சம்பவத்திற்கான தீர்ப்பு கடந்து
புதன்கிழமை (3-9-2014)
Subscribe to:
Posts (Atom)