பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, September 11, 2014

அதிர்ச்சி வைத்தியம் அரசுக்கா? முஸ்லிம் காங்கிரஸிற்கா? - தேச நேசன்

  (தமிழ்த் தந்தி 7-9-2014)
ஊவா தேர்தலில் அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் முஸ்லிம்களை கண்டுகொள்ளவில்லை என்பதை அரசு சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரையேனும் களமிறக்கப்படாததை வெளிக்காட்டியுள்ளது. இதனை மறைக்கவே தற்போது எமது கூட்டமைப்பு அவர்களின் கடிவாளம் கைக்கூலிகள் என கூறி வருகின்றனர். இவையெல்லாம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஊவா முஸ்லிம்கள் நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும் அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று  பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 இந்நாட்டில் அனைத்து இன மக்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொதுபலசேனா மாத்திரம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஊர்வலம் செல்கிறது. இவற்றுக்கு ஆதரவு வழங்குவது யார் என்பது எமக்கு தெரியும். இவ்வாறான நிலையில் எவ்வாறு முஸ்லிம்கள் ஆளும் ஐ.ம.சு.கூ. க்கு ஆதரவு வழங்குவார்கள?. இனிமேல் ஒருபோதும் ஜே.வி.பி.யும் ஐ.தே.கட்சியும் ஒன்று சேரப்போவதில்லை. ஐ.தே.கட்சிக்கு ஏற்பட்டுள்ள சரிவை பல கட்சிகள் முஸ்லிம்களைக் கொண்டு சவாரி செய்யப்பார்க்கின்றன. ஜே.வி.பி. முஸ்லிம்களின் வாக்குகளை சூறையாட புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருகிறது. ஜே.வி.பி. யினால் முஸ்லிம்களுக்கு எதையும் செய்திட முடியாது. அவற்றுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் சோரம்போக மாட்டார்கள் எனவும் அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் குறிப்பிடுவது உண்மை என்று வைத்துக்கொள்வோம். ஊவா தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால்; இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலமாக தமக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களாக அல்லவா ஆகிவிடுவார்கள். அண்மையில் நடந்த மேல் மற்றும்  தென் மாகாண சபை தேர்தலில் ஆளும்; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்பதையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு எத்தனை முஸ்லிம் வாக்குகள் கிடைத்தன என்பதையும் பார்க்க வேண்டும்.
மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து மூன்று முஸ்லிம்கள்; தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .

அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து தலா ஒரு உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் .

அதேபோன்று, கம்பஹா மாவட்டத்திலிருந்து  முஸ்லிம் காங்கிரஸின் சர்பில் மீண்டும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் சார்பில் இரண்டாவது தடைவையாகவும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட நீர்கொழும்பு பிரதி மேயர் எம்.எஸ். ஏம் சகாவுல்லாஹ்வும் வெற்றி பெறவில்லை.
மேல் மாகாண சபையில் அரசாங்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்ட முஸ்;லிம், தமிழ் வேட்பாளர்கள் ஒருவரும் வெற்றி பெறவில்லை. போனஸ் ஆசனம் மூலமாகவே கொழும்பு மாவட்டத்தில்  அமைச்சர் பவுஸியின் மகன் நவுஸர் பவுஸி மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த தேர்தலின் பின்னர்  பொது பலசேனா  என்ற பேரினவாத அமைப்பினால் பல இன்னல்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டன. அதனை அரசாங்கம் தடுக்கவோ, அந்த அமைப்புக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவோ  இல்லை. இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் மீது கடுங் கோபத்துடன் உள்ள நிலையில், இந்த ஊவா மாகாண சபை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதைவிட, தமது பங்காளிக் கட்சிகள் மூலமாக முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் திட்டமாகும். இது சாதாரண ஒருவருக்கும் புரிகின்ற விடயமாகும். கிpழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்திற்கு வசைபாடி விட்டு, வாக்குகளைச் சுருட்டிக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் அரசோடு ஒட்டிக்கொள்ளவில்லையா? ஊவாவிலும் அதுவே நடைபெறப் போகிறது.; அரசு சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரேனும் களமிறக்கப்படாதது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் அரசாங்கத்தை சாடுவது ஒரு நாடகமாகும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ஹக்கீம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஆகியன முஸ்லிம் மக்களின் வாக்குகளை; குறி வைத்துச் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். எல்லா கட்சிகளும் சகல இன மக்களினதும் வாக்குகளையும் பெற்றுக் கொள்ளும் வகையிலேயே செயற்பட வேண்டும்.அதில் தவறில்லை.
'இந்நாட்டில் அனைத்து இன மக்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொதுபலசேனா மாத்திரம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஊர்வலம் செல்கிறது. இவற்றுக்கு ஆதரவு வழங்குவது யார் என்பது எமக்கு தெரியும். இவ்வாறான நிலையில் எவ்வாறு முஸ்லிம்கள் ஆளும் ஐ.ம.சு.கூ. க்கு ஆதரவு வழங்குவார்கள்?.' என்று அமைச்சர் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படியானால் மத்திய அரசாங்கத்திலும் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளிலும்; அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று  அமைச்சர் எப்படி எதிர் பார்க்க முடியும்?
 ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதைப் போன்று, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று முஸ்லிம்கள்; நினைத்தால் எப்படி இருக்கும்? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்?
இதேவேளை, சிறுபான்மை மக்களினது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆக்கப்பூரவமாக செயற்படுகிறதா?, அனைத்து எதிரணியினரையும் கவரும் வகையில் செயற்படுகிறதா? என்பதையும் கேட்க வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். 
இந்த கொடுங்கோல் அரசை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் வேறு எவரையும் விட தமிழ், முஸ்லிம் மக்களுக்கே அதிக தேவை உள்ளது. ஆனால், இந்த தேவை பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்றதா என்ற கேள்வியும், ஐ.தே.க.வின் ஊவா முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஹரின் பெர்னாண்டோவுக்கு இருக்கின்ற துணிச்சலும், அர்ப்பணிப்பும் இக்கட்சியின் ஏனைய பிரமுகர்களுக்கு  இருக்கின்றதா என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளன என்று அதிகாரத்தை  பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
எதிர்வரும் தேர்தல்களில், குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில்,  தமிழ், முஸ்லிம் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு, எந்தவித நிபந்தனையும் இல்லாமல், தமக்கு வாக்களிப்பார்கள் என  ஐ.தே.க எதிர்பார்க்ககூடாது என  கூட்டமைப்பு எம்பி சுமந்திரன் கூறுகிறார். தேசிய ஐக்கிய முன்னனி தலைவர் அசாத் சாலியும் கூறுகிறார். அதையே நானும் கூறுகின்றேன.; ஐதேகவினால் மாத்திரம் இந்த அரசை வீழ்த்த முடியாது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கரமாக சந்திக்க அனைத்து எதிரணியினரையும் ஐ தே க கவர வேண்டும். சோபித தேரர், ஜேவிபி, சரத் பொன்சேகா ஆகியோர் என்ன சொல்கிறார்கள் என்பதை ஐதேக கவனிக்க வேண்டும். இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் என்ன சொல்கின்றன என்பதை ஐதேக  கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் வீழ்வது ஐதேக மட்டுமல்ல, முழு நாடும் என்பதை இவர்கள் உணர வேண்டும். அரசாங்கத்தை நடத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஆளும் கட்சியும், இந்த அரசை வீழ்த்தி, புதிய அரசை உருவாக்குவதில் பிரதான எதிர்கட்சியும் இன்று பொறுப்பற்று செயல்படுகின்றன எனவும்  மனோ கணேசன்  அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இரு பிரதான கட்சிகளும் சிறுபான்மை மக்களை புறக்கணிப்பதைத் தொடர்ந்;தால், அந்த இரு பிரதான கட்சிகளுக்கும்; ஆதரவு வழங்கி வரும் சிறுபான்மை இன கட்சிகளுக்கும் சிறுபான்மை மக்கள்தான் பாடம் புகட்ட வேண்டும். இல்லை. அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்