பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, September 11, 2014

வாக்கு வேட்டைக்காக கூட்டு சேர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் - தேச நேசன்

(தமிழ்த் தந்தி பத்திரிகை 31-8-2014)

தமிழ் திரைப்படமொன்றில் நகைச்சுவை நடிகர் ஒருவர் 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று கிண்டலாகக் குறிப்பிடுவார். அதேபோன்று 'அரசியல்  என்பது ஒரு சாக்கடை. அதில் எதுவேண்டுமானாலும் கலக்கலாம்.' இது புpரபல அரசியல் விமர்சகரும் நடிகரும் எழுத்தாளருமான  நடிகர் சோ கதை வசனம் எழுதிய பழைய திரைப்படமொன்றில் வரும் வசனமாகும். இந்த வசனம் பிரபல்யமானது. ஊவா மாகாண சபை தேர்தலில் அரசியல் பகையாளிகள் இருவர் கூட்டுச் சேர்ந்திருப்பதைப் பார்க்கும் போது அந்த வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.
ஆம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டுச் சேரந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான இந்த இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்திருப்பது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.முஸ்லிம் மக்கள் அண்மைக் காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த கட்சிகள் இரண்டும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆயினும் உண்மையில் இந்த கட்சிகள் இரண்டும் இ.ணைந்து தேர்தலில் போட்டியிடுவது தனது சமூகத்தின் நலனுக்காகவா? அரசாங்கத்தின் நலனுக்காகவா என்பது சந்தேகத்திற்குரியதாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது.
முஸ்லிம் மக்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு இல்லை என்பதை நடைபெற்று முடிந்த மேல் மற்றும்; தென் மாகாண சபை தேர்தல்களின் முடிவுகள் நன்கு புலப்படுத்தியுள்ளன. முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகள் அடாவடித்தனங்களை அடுத்து, அதனை கண்டுகொள்ளாத அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் கோபமாக உள்ளனர். அரசாங்கத்திற்கும் இது நன்கு தெரியும்.
இந்நிலையில், ஊவா மாகாண சபை தேர்தலில் அதன் தாக்கம் எதிரொலிக்கும். எனவே, இந்த மு;லிம் பங்காளிக் கட்சிகள் இரண்டையும் இணைந்து போட்டியிட வைத்து முஸ்லிம் மக்களின் வாக்குகளை கொள்ளை அடித்து தேர்தலில்  வெற்றி பெறுவதுதான் அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன்  காரணமாகவே இரு துருவங்களாக இருந்த இந்த இரண்டு கட்சிகளும்  இணைந்துள்ளன என்று எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஊவா தேர்தலில் பிரசாரங்களின் போது இந்த கட்சிகள் இனத்தின் மீட்பர்களாக காட்டிக் கொண்டாலும், வீரவசனம் பேசினாலும் அரசாங்கத்தை கடுமையாக சாடினாலும் தேர்தலில் பின்னர் இந்த இரண்டு கட்சிகளும் அரசாங்கத்துக்கே ஆதரவு வழங்கப் போகின்றன. அப்படி நடைபெறாவிட்டால் அது அதிசயமாகும்.
அரசாங்கம் வகுத்த தேர்தல் வியூகத்தின்படி இந்த இரண்டு கட்சிகளும் செயற்படுகின்றன. அரசாங்கம் எழுதிய கதை வனத்திற்கு அதன் இயக்கத்தில் இந்த கட்சிகள் இரண்டும் தேர்தல் மேடையில் நடிக்கின்றன. தேர்தலின் பின்னர் ஆளும் தரப்பு வெற்றி பெற்றால் இந்த கட்சிகள் சார்பில் வெற்றி பெறுகின்ற உறுப்பினருக்கு மாகாண சபையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும். சில வேளை  மத்திய அரசாஙகத்தில் இன்னுமொரு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.வேறு வரப்பிரசாதங்களும் கிடைக்கும். ஆனால் வாகக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைக்.கும்;.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் முஸ்லிம் கட்சிகளாலும் அதன் அமைச்சர்களாலும்  முஸ்லிம் சமூகத்திற்கு என்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன? இது முஸ்லிம் சமூகம் இப்போது கேட்கும் கேள்வியாகும். அந்த கட்சிகளின் முக்கியஸ்த்தர்களும் நெருக்கமானவர்கள் சிலரும்  பல்வேறு வகையிலும் பயனடைந்தள்ளனர் எனபதே உண்மையாகும்.
முஸ்லிம் மக்களுக்கு சோதனை மிகுந்த இந்தக் காலகட்டத்தில் ஆக்கபூர்வமான வகையில் எதையும் செய்ய முடியாத கையாளாகாதவர்களாகவும், அறிக்கை அரசியல் செய்பவர்களாகவும், வெறும் மேடைப் பேச்சாளர்களாகவுமே இந்தத் தலைவர்கள் உள்ளனர் என்று குற்றச்சாட்டு தெரவிக்கப்படுகிறது. சிலசமயங்களில் இந்த முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்  அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் இதுதொடர்பாக முறையிடப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள.;
'விருப்பம் என்றால் இருக்கலாம். இல்லையேல் அரசாங்கத்தைவிட்டு வெளியேறலாம்' என்பதே இவர்களுக்கு பதிலாகவும் எச்சரிக்கையாகவும் வழங்கப்படுகிறது. ஒரு சமயம் எமது நீதி அமைச்சர் ரஹுப் ஹக்கீம் எமது நாட்டில் சட்டம்  சரியாக  கடைப்பிடிக்காமை  தொடர்பில் மனம் நொந்து கருத்து தெரிவித்தமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் முஸ்லிம் மக்களை காப்பாற்றுவது யார்? என்பதற்காகவே இந்தத் தலைவர்கள் அரசாங்கத்தில் அமைச்சு பதவி மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை பெற்று சமூகத்திற்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லோரும் கட்டாயம் நம்பியே ஆகவேண்டும்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்