பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, June 25, 2018

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்த கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்கள் (PHOTOS)


கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் 1982 ஆம் ஆண்டில் கல்வி கற்ற  பழைய மாணவர் குழுவினர் (PEARLS OF HAMEEDIA)  தமக்கு கல்வி கற்பித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் பாடசாலைக்கு பல்வேறு வகையிலும் உதவி புரியும் பழைய மாணவர்களையும் விருது வழங்கி கௌரவித்தனர்.
 23-6-2018 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பு ரிச்வின் விளா (Richvin Villa)   இல்லத்தில் இடம்பெற்ற PEARLS OF HAMEEDIA பழைய மாணவர் குழுவின் ஒன்றுகூடல் மற்றும் இரவு விருந்து  நிகழ்வில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


அல்ஹாஜ்   எஸ்.எஸ்.யு. ஜெய்னுல் ஆப்தீன் 

PEARLS OF HAMEEDIA பழைய மாணவர் குழுவின் ஆயுட்காலத் தலைவரும் தொழிலதிபருமான அல்ஹாஜ்   எஸ்.எஸ்.யு. ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ்  எஸ்ஏ.எம்.எம். அஸ்ரப், முன்னாள் உப அதிபர் எம்.எச்.எம். ரிஸ்வி, தற்போதைய அதிபர் எம்.அத்னான் , ஓய்வு பெற்ற  ஆசிரியர்களான எம்.எச்.எம்.நாளிர், என்.எஸ்.ஏ காதர், ரி.ஆர். அமோன், ஏ.ஆர். நஹாஸ், ஏ.எல்.எம். ஜெம்சித் ஐ.கே.எச், இப்திகார், எம்.கே.எம். பிசுருல் ஹாப்பி, ஏ.எல்.எம். பஸீர் ஆகிய ஆசிரியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆசிரியர் எம்.எச்.எம்.நாளிர்

 ஆசிரியர் என்.எஸ்.ஏ காதர்

 பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் 

அதிபரும் ஊடகவியலாளருமான எம்.இஸட். ஷாஜஹான்

 அத்துடன் கல்லூரியின் பழைய மாணவரும், நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் அதிபரும் ஊடகவியலாளருமான எம்.இஸட். ஷாஜஹான், பழைய மாணவர்களும் தொழிலதிபர்களுமான ஒக்ஸ்போர்ட் இம்தியாஸ், பைசல் ஹாஜி,  கல்லுரியின் பழைய மாணவரும் குத்துச் சண்டை விளையாட்டு; பயிற்றுவிப்பாளருமான  எம். இம்தியாஸ் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
                         கௌரவிப்பு 

கல்லூரின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ்  எஸ்ஏ.எம்.எம். அஸ்ரப்

 ஆசிரியர் ஏ.எல்.எம். பஸீர்

 முன்னாள் உப அதிபர் எம்.எச்.எம். ரிஸ்வி

 கல்லூரி அதிபர் எம்.அத்னான்


பழைய மாணவர் குழுவின் ஆயுட்காலத் தலைவரும் தொழிலதிபருமான அல்ஹாஜ்   எஸ்.எஸ்.யு. ஜெய்னுல் ஆப்தீன் PEARLS OF HAMEEDIA பழைய மாணவர் குழுவின் சார்பில் 'சமூகத் தாரகை'  எனும் பட்டம் வழங்கப்பட்டு 'வாழ்துப் பா' வாசிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பழைய மாணவர் கவிஞர் கலாநெஞ்சன் ஷாஜஹான் வாழ்த்துப் பாவினை வாசித்து  பட்டத்தினை வழங்கினார்.
 பழைய மாணவர்களான ஏ.எச்.எம். அமானுல்லாஹ், பி.எம்.பி. அஹ்மத் ஆகியோரும்  ஆயுட்காலத் தலைவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

                  ஆயுட்காலத் தலைவருக்கு விருது

'சமூகத் தாரகை'  எனும் பட்டம் 

 தொழிலதிபர் ஒக்ஸ்போர்ட்இம்தியாஸ்

  தொழிலதிபர் பைசல் ஹாஜி  

நிகழ்வில் ஏ.எஸ்.எம்.வசீர், எம்.எம். ஸஹீர் ஆகியோர் கவிதை வாசித்தனர். பழைய மாணவர் குழுவின் உப தலைவர் எம்.ஆர்.எம்.அனாஸ் நன்றி உரை நிகழ்த்தினார்.



படவிளக்கம்  - பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், பழைய மாணவர் குழுவின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எஸ்.யு. ஜெய்னுல் ஆப்தீன், ஆசிரியர்களான எம்.எச்.எம்.நாளிர், என்.எஸ்.ஏ காதர் ஆகியோர் உரையாற்றுவதையும்,  விருதுகள் மற்றும் வாழ்த்துப் பா வழங்கப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்