பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, August 19, 2018

தடாகம் கலை இலக்கிய வட்டம் நடத்திய பன்னாட்டு படை விழாவும் விருது வழங்கலும்


 தடாகம்  கலை இலக்கிய வட்டம் நடத்திய  பன்னாட்டு படை விழா  2018 நிகழ்வு சனிக்கிழமை (18-8-2018)  கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சிலுள்ள அஞ்சல் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைப் பெற்றது.
  தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில்  காலை 9 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரையும் பின்னர் பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரையும்  இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட 60 பேர்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 நிகழ்வில் பன்முக ஆற்றல் கொண்ட முத்து மீரானை கௌரவித்து 2016 - 2017 ஆம் ஆண்டுகளில் வெளியான சர்வதேச எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கான விருது வழங்கப்பட்டது.




தடாகம் கலை இலக்கிய வட்டம் கடந்த 100 மாதங்களாக முக நூலில் நடத்திய கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படதுடன், 100 கவிஞர்களது கவிதைகள் அடங்கிய 'தடாகத் தாமரைகள்' கவிதை தொகுதி  வெளியிடுதல்,  கவிஞர்களான சப்னா எஸ்.ஆப்தீன்,  எழுதிய மாயாவின் பேனை,  எம்எம். நௌபல் எழுதிய பச்சை இரத்தம் நீந்தும் காடு,  உலக நாதன் எழுதிய தேயிலைப் பூக்கள் ஆகிய தொகுதிகளை வெளியீட்டு நிகழ்வு, குவைத் கவிஞர் வித்தியாசாகர் தலைமையில் 'தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்' என்ற தலைப்பில்  கவியரங்கு ஆகியன  நிகழ்வில் இடம்பெற்றது.






 இந்தியா , குவைத், அவுஸ்திரேலியா , கட்டார், துபாய், மலேசியா, டென்மார்க் ஆகிய நாடுகளிலிருந்து பன்முக ஆளுமைகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புரவலர் ஹாசிம் உமர்  நூல் வெளியீட்டின் போது முதற் பிரதிகளை பெற்றுக் கொண்டார். புரவலர் ஹாசிம் உமர், கலைஞர் கலைச் செல்வன்,  கவிஞர் வித்தியா சாகர், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள்  உட்பட பெரும் எண்ணிக்கையானோர் நிகழ்வில் பங்குபற்றினர்.














Kalanenjan Shajahan
                                                                       M.F. Rifas


                                                                 Irfan Mohamed

                           Kalaimahan Fairoos





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்