பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, August 13, 2011

நடிகை ருக்மணி தேவியின் கல்லறையும்

மனித நாகரிகமற்ற அரசியல்வாதியும்



மறைந்த பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் பாடகியுமான ருக்மணி தேவியின் கல்லறை உட்பட சிலை இனந் தெரியாத நபர்களால் 12-8-2011 அன்று உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது.


கல்லறை உடைக்கப்படுவதற்கு முன்னர் உள்ள தோற்றம்

அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு ,ஏத்துக்காலயில் உள்ள பொது மயான பூமிக்கு வந்த  இனந் தெரியாத நபர்கள் ருக்மணி தேவியின் கல்லறை , சிலை, ருக்மணி தேவி நடித்த திரைப்படங்களின் பெயர் பட்டியல் உட்பட அவரது வாழ்க்கை குறிப்பு பொறிக்கப்பட்ட பெயர் படிகம், , கல்லறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு சட்டவேலி என்பவற்றை உடைத்து நாசம்செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக நீரகொழும்பு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நீர்கொழும்பு நகர முன்னாள் மேயரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த முனசிங்க ஆவார்.ஏனைய சந்தேக நபர்கள் அவரிடம் பணியாற்றுபவர்களாவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் செய்தி சில மனிதர்களின் காட்டு மிராண்டிக் குணத்தை எடுத்துக் காட்டுகிறது. மயான பூமியில் ருக்மணி தேவி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் தமது “முனசிங்க பரம்பறைக்கு“ சொந்தமானதெனவும் அது தொடர்பான இடம் உறுதிப்பத்திரம் தன்னிடம் இருப்பதாகவும் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு மாநகர முன்னாள் மேயரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த முனசிங்க பொலிஸாரிடம் வாக்கு மூலமளித்துள்ளார்
இலங்கையின் சிரேஷ்ட கலைஞர்களில் ஒருவராக போற்றப்படும் ருக்மணி தேவியின் கல்லறை உடைக்கப்பட்டமை அவரது ரசிகர்களை மாத்திரமன்றி கலைஞர்கள் , ஊடகவியலாளர்கள்., மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சம்பவத்தை கேள்விப்பட்ட அனைவரையும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.
மனிதனை நிம்மதியாக வாழவிடாத பேராசை பிடித்த மனித நேயமற்ற மனிதர்கள் சிலர் மனிதன் இறந்த பிறகு அவனை கல்லறையிலும் நிம்மதியாக இருக்கவிடாமல் செய்திருக்கிறார்கள்.இதயம் மரணித்தவர்களாலேயே இது போன்ற செயல்களை செய்ய முடியும்
இது ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமாகும். இது ஒரு கலைஞனுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமாகும். இது ஒரு மரணத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமாகும்.
 - kalanenjan shajahan

2 comments:

  1. ஆமாம் மிகவும் மனவருத்தத்தை தரும் விடயமாக இருக்கிறது... மனிதன் மாற மாட்டான்.. அவனது காட்டுமிராண்டிக் குணங்கள் அவனை விட்டு என்றும் போகாது என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது..கண்டிக்கப்படவேண்டிய விசயமே.....

    ReplyDelete
  2. நன்றி சாய்பா பேகம்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்