பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, August 5, 2011


வீரகேசரி பத்திரிகை 81 ஆவது அகவையில்


இலங்கையின் பிரபல தமிழ் தினசரி பத்திரிகையான வீரகேசரி பத்திரிகை 80 வருடங்களை பூர்த்தி செய்து இன்று 81 அகவையில் காலடி எடுத்து வைக்கிறது.
இப் பத்திரிகை 1930 ஆம் ஆண்டில் ஆரம்பமானது. இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அது அளப்பரிய சேவைகளை செய்துள்ளது. நடு நிலைமை தவறாது அது தரும் செய்திகளை யாவரும் பாராட்டுவர்.
நவீன கணனி மயமான பத்திரிகையாக அது மாறியுள்ளதுடன் இணையத் தினூடாகவும்  அது உலகெல்லாம் வளம் வருகிறது. வீரகேசரி நிறுவனம் மேலும் பல வெளியீடுகளையும் வெளியிடுகிறது.


வீரகேசரியின் 80 ஆவது நிறைவையிட்டு ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் உட்பட அரசியல் தலைவர்கள் .அறிஞர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் வீரகேசரி பத்திரிகையின் பிரதேச நிருபராக பல வருட காலமாக நான் பணியாற்றி வருவதை நினைத்து பெருமையடைகிறேன்.அதற்காக வீரகேசரி நிறுவனத்திற்கு நன்றிகளை நவில்கறேன்.எனது தந்தையும் (ஸபருல்லாஹ் கான்) இப்பத்திரிகையில் பல வருடகாலமாக அச்சுக் கோப்பாளராக பணியாற்றியுள்ளதுடன் வீரகேசரி நிறுவன வெளியீடான மித்திரன் பத்திரிகையில் ஆக்கங்களும் எழுதி வந்துள்ளார்.
வீரகேசரி மேலும் பல நூற்றாண்டுகள் வெளி வந்து சேவையாற்ற நாங்களும் வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்