-
எம்.இஸட். ஷாஜஹான் B.Ed
(கலாநெஞ்சன் ஷாஜஹான் )
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வரும்
தொடர்ச்சி;யான விடயங்கள்
முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்து வரும் நிலையில் முஸ்லிம்
பெண்களின் அபாயா தொடர்பில் அடுத்த எச்சரிக்கை மணிகள் தொடர்ச்சியாக
அடிக்கப்பட்டு வருகின்றன.
ஹலால் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். இதுவே எமது இலக்காக
இருந்தது. இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அடுத்து முஸ்லிம் பெண்களின் அபாயா
தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என பொது பல சேனா அமைப்பின் தலைவர்
கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்
மாடுகளை அறுத்தல் , பள்ளிவாசல் தொடர்பான
பிரச்சினைகள், ஹலால் விவகாரம், தற்போது அபாயா விவகாரம் என்று முஸ்லிம்களுக்கு எதிரான
சவால்கள் தொடர்ந்தபடியே இருப்பதாக பல்வேறு தரப்பினராலும் கவலையுடன்
சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கை முறையாகும். மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்பதை
இஸ்லாம் தெளிவாகக் காட்டித் தந்துள்ளது.
இஸ்லாம் மனித சமுதாயத்துக்கு மாண்பையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும்
மார்க்கமாகும். அது ஆண்களும் பெண்களும் தமது நடை, உடை பாவனைகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுத்துக்
காட்டியுள்ளது. இறைவன் அல்-குர்ஆனில் இது தொடர்பாக கூறியுள்ளான்.
ஏக இறைவனை வழிபடும் முஸ்லிம்கள்; அல்குர்ஆன் கூறியுள்ளபடியும்
நபியவர்கள் செய்தும் சொல்லியும் காட்டித் தந்துள்ளபடியும் வாழ்பவர்களாவர்.
அவர்களுடைய மார்க்க சட்டத்திட்டங்களில் இன்னொருவர் தலையிட முடியாது. முஸ்லிம்கள்
எவ்வாறு உடை உடுக்க வேண்டும் எவ்வாறான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இன்னொரு
சமயத்தவரோ, பேரினவாதிகளோ தீர்மானிக்க
முடியாது.
நாட்டில் தற்போது தலையெடுத்துள்ள
முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள்; இஸ்லாமியர்களின் சமய
உரிமைகளிலும் நாட்டின் பிரஜைகளான முஸ்லிம்களின் மனித உரிமைகளிலும் கைவைப்பதாக
அமைந்துள்ளது.
இலங்கையில் அதிகரி;த்து வரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு பெண்கள்
அணியும் ஆடைகளும் பிரதான காரணமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்
பெண்கள் அணியும் அபாயா ,பர்தா, நிகாப் ஆடைகள் உடல் அங்கங்களை தெரியப்படுத்துவதில்லை. கவர்ச்சியாக
எடுத்துக்காட்டுவதில்லை. மாறாக அவர்களிற்கு அது பாதுகாப்பை தருகின்றன. கௌரவமான
ஆடைகளாகவே அவை பல்வேறு தரப்பினராலும் பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் அடிக்கப்பட்டுள்ள அபாய
எச்சரிக்கை முஸ்லிம்கனை கொதிப்படையச் செய்துள்ளது. சமய மற்றும் அரசியல் ரீதியில்
ஹலால் விவகாரத்தை போன்று பேசப்படும் விடயமாக ஆகியுள்ளது.
இவ்விவகாரங்கள் வெளிநாடுகளிலும் தற்போது பேசப்பட்டு வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதை
நோக்காகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பொன்றை நிறுவுவதற்கான
முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்ற தகவலும்
ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதற்காக உலகின் நாலா பாகங்களிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்கள்
ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற சர்வதேச இளைஞர்
பாராளுமன்ற பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் கருத்து தெரிவித்துள்ளதுடன் புலம்
பெயர்துள்ள முஸ்லிம்களுக்கு ஒன்;றிணையுமாறு அழைப்பு
விடுத்துள்ளார்.
இதேவேளை, ஹலால் சான்றிதழ் விடயம்
மற்றும் அபாயா அணியும் விடயம் தொடர்பில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் இது தொடர்பில் கருத்தக்களை தெரிவித்தள்ளனர்.
அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆக்கப்பூர்வமாக கருத்து எதனையும்
தெரிவிக்கவில்லை. பலர் மௌனவிரதம் காத்து வருகின்றனர். சில அரசியல்வாதிகளும்
அமைப்புக்களும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை குற்றம்சாட்டிவிட்டு தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றன.
மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை பொருட்களுக்கு
ஹலால் இலச்சினை வழங்க இணங்கும் அரசு, உள்நாட்டில் ஹலால் இலச்சினையை தடை செய்து இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அநீதி
இழைத்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு ஹலாலை வழங்கிவிட்டு
உள்நாட்டில் முஸ்லிம் சகோதர சமூகத்தின் கன்னத்தில் அறைந்துள்ளது. இதுதான்
நடந்துள்ள உண்மை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கருத்து
தெரிவித்துள்ளார்.
வெகு விரைவில் முஸ்லிம் பெண்கள் உடை அணியும் விடயத்திலும்; பாங்கு (அதான்) தொடர்பிலும் புதிய பேரினவாத எதிர்ப்பு கோஷங்களை இந்நாடு
எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை நான் இந்த வேளையில் முஸ்லிம்
சகோதரர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் ஆடைகளை அணிய வேண்டாம் என கூறுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என 'முஸ்லிம் நீத்திய' நூலின் ஆசிரியர் சட்டத்தரணி
கருணாரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே இவ்வாறு
தெரிவித்துள்ளார்,
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம்களின் ஆடை விடயத்தை ஊடகங்களே பூதாகரமான பிரச்சினையாக சமூகத்திற்கு
காட்டுகின்றன.
பௌத்த பிக்குகள் அவர்களின் மேனியில் ஒரு பகுதியை திறந்து ஆடை அணிவது கலாசார
சீர்கேடு என்று யாராவது குற்றம் சுமத்தும் பட்தச்சதில் அவர்கள் அதனை ஏற்று
அவர்களின் ஆடை கலாசாரத்தை மாற்றிக்கொள்வார்களா?
மேற்கத்தய ஆடைகள் அணியக் கூடது அல்லது இந்திய கலாசார ஆடைகளை அணியக் கூடாது என
வாதிட்டால் நாம் எந்த ஆடைகளை அணிவது?
ஒருவர் நிர்வானமான பாதையில் சென்றால் அவரை கட்டாயம் சட்டம் தண்டிக்கும்.
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையிலிருந்து துர்நாற்றம் ஏற்பட்டாலோ, சூழலை பாதிக்கும் வகையில் ஏதேனும் இரசாயணம் வெளியேற்றினாலோ அதனை தடுக்க
முடியும்.
எமது நாட்டில் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் குறிப்பிட்ட ஆடையைத்தான் அணிய வேண்டும்
என்ற எந்த சட்டமும் கிடையாது. எனவே யாராலும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா
நிகாப் ஆடைகளை அணிய வேண்டாம் என கூற முடியாது. அப்படி கூறுவதற்கு இலங்கை
சட்டத்தில் எந்த இடமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு லங்காதீப பத்திரிகையில் ஒரு அந்நிய மத எழுத்தாளர்
ஒருவர் சிங்கள யுவதிகளுடன் ஒப்பிட்டு அபாயா எனும் ஆடையைப் புகழ்ந்து
குறிப்பிட்டிருந்தமை மிக முக்கியமான விட யமாகும்.
'ஹலால்' இலங்கை முஸ்லிம்களுக்கு
பேரினலாதிகளால் 'ஹராம்' ஆக்கப்பட்டுள்ளது. இனி பெண்கள் அணியும் அபாயா மற்றும் ஹிஜாப் விடயத்திலும்
கையை வைத்து அதையும் இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்று பொது பலசேனாவும் nஹல உரிமையும் கனவு காண்கிறது.
ஆபாசாமாகவும் அவலட்சனமாகவும் ஆண்களின் பாலியல் ஆசைகளை தூண்டும் வகையில்
பெண்கள் ஆடைகளை அணிய வேண்டாம் என்று போதிக்க வேண்டிய மதத்தலைவர்கள் அதற்கு எதிராக
போர்க் கொடி தூக்கியிருப்பது விசித்திரமாக இருக்கிறது.அறுவெறுப்பாக இருக்கிறது.
இது சில பௌத்த குருமாரினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடே என்பதை இங்கு
குறிபிப்பட வேண்டும். ஆயினும், அவர்கள் வைத்துள்ள
தீப்பொறி மெதுமெதுவாக நாடெங்கும் பறறி
எறியலாம் என்பதை மறுக்கமுடியாது. அவ்வாறான சம்பவங்கள் சில பிரதேசங்களில்
நடந்துள்ளன. சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகள் இதனால் அதிகளவில்
பாதிக்கப்படுவார்கள். பெரும்பான்மையினத்தவர்கள் வாழுகின்ற பிரதேசங்களில் வசிக்கும்
முஸ்லிம்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
முஸ்லிம் பெண்கள் உடை அணியும் விடயத்தில் பேரினவாதிகள் தலையிடுவார்களானால் அது
உள்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் எனவும் சர்வதேச ரீதியிலும்
நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர
நாட்டின் சில இடங்களில் அபாயாவுக்கு எதிராக சிங்கள் மொழியில் போஸ்டர்கள்
ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் 'சிங்களக் கடைகளுக்கு மட்டும்
செல்வோம்' என்று கண்டி நகரின் சில
இடங்களில்; 'சிங்களக் குரல்' என்ற அமைப்பின் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளனமையும் குறிப்படத்தக்கது.
இது போன்ற பல வகையான சுவரொட்டிகள் இனிவரும் நாட்களில் நாட்டின் பல பிரதேசங்களிலும்
ஒட்டப்படாவிட்டால்தான் அது ஆச்சரியமான ஒரு விடயமாக இருக்கும்.
இதேவேளை, சிறுபான்மை இன மக்களின் உரிமைகளையும் மதச் சுதந்திரத்தையும்
அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்கவுமே பொதுபல சேனா செயற்படுகின்றது. எனவே எம்மை
இனவாதியாக பார்க்க வேண்டாம். காக்கிச் சட்டை போடாத பொலிஸ்காரராக பாருங்கள். ஷரிஆ
சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை சவுதி அல்ல என்பதை உலமாக்கள் புரிந்துகொள்ள
வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
புத்த பெருமான் குரோதத்தின் மூலம் குரோதத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என
போதித்திருந்தும், சில இயக்கங்கள் (சேனாக்கள்)
வாள், தடி போன்றவற்றைத் தூக்கிக்
கொண்டு போருக்கு ஆயத்தமாகியுள்ளன என தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த
தேரர் குறிப்பிடுகிறார். சகல செயற்பாடுகளுக்கும் மாற்றுச் செயற்பாடுகள்
உள்ளனவென்றும், இவ்வாறான கொடிய
செயற்பாடுகளால் எண்ணவியலாத பெரும் பிரச்சினை தோன்றலாம் எனவும் அவர்
குறிப்பட்டுள்ளார்.
இது போன்ற சில பௌத்த தலைவர்கள் ஹலால் மற்றும் அபாயா விவகாரம் தொடர்பில்
கருத்துக்களை ஆதரவாகவும் எதிர்த்தும் தெரிவி;த்து வருகின்றனர்.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடருமானால் அதுபெரும்
கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயமாகும்.
இஸ்லாமிய மதத்தலைவர்களும, அமைப்புக்களும்; அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இவ்விடயத்தில் துரிதமாக செயற்பட்டு
ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க
வேண்டியதும் நிலைநிறுத்த வேண்டியதும் ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும்.
இக்கட்டுரை இன்றைய (20-3-2013) வீரகேசரி தினசரி பத்திரிகையில் பிரசுரமாகியள்ளது.- நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்