பெப்பிலியான நகர
வர்த்தக நிலையம் (Fashion Bug) மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி
(28-3-2013) நூற்றுக்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சில
மணித்தியாலங்களாக இந்த தாக்குதல்
இடம்பெற்ற போதும்
பொலிஸாரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன்பின்னர்
இராணுவம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
பொலிஸாரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன்பின்னர்
இராணுவம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
இத்தாக்குதல்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுவினர்
அமைக்கப்பட்டனர்.
விசாரணைகளை
மேற்கொண்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஆறு பெரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள்
நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை மேலதிக
விசாரணைகளை விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பாக “ஹிரு தொலைக்காட்சி” ஒளிபரப்பு
செய்த செய்தி இதுவாகும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்