பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, March 9, 2013

நீர்கொழும்பு பொலிஸாரின் மகளிர் தின நிகழ்வு


சர்வதேச மகளிர் தினத்தையிட்டு நீர்கொழும்பு பொலிஸார்   நடத்திய மகளிர் தின நிகழ்வு  இன்று சனிக்கிழமை (9-3-2013) நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் நடைபெற்றது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையம், ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையம் ஆகியன


நிமல்லான்ஸா அமைப்பின் இரண்டாம் இலக்க மகளிர் பிரிவு, குடாபாடு 733 பி, கிராம சேவகர் பிரிவின் சிவில் பாதுகாப்புக்   குழு ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் டொன்பொஸ்கோபுர பிரதேச பெண்களிடையே எல்லே போட்டி,சங்கீத தொப்பி மாற்றுதல்,பலூன் நடனம் உட்பட பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சார்ஜன் ஜீனா அஸீமின் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்துல குமார கமகே, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி விதாரண உட்பட பொலிஸ் அதிகாரிகள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போட்டி நிகழ்ச்சிகளில் பொது மக்களுடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கபட்டதுடன், போட்டிகளில் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.


















No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்