பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, April 27, 2013

மின்சாரம் அது சம்சாரம்


(இக்கவிதை   (28-4-2013 ) "தமிழ் தந்தி" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது 


'கரன்ட் பில்' ஏறிபோச்சு
'கரன்ட்' பட்ட நிலையாச்சு
இருட்டுக்குள் வாழும் காலமாச்சு
வரண்டு போல நிலம் போல ஆச்சு

மின்னல் போல மின்சாரம் தாக்கியாச்சு
இன்னல் மழை பொழியும் வானமாச்சு
குப்பி விளக்கின் மவுசு கூடிபோச்சு
குப்பை போல வாழ்க்கையானதாச்சு




வேதனத்தை மின்சாரம் தாக்கியாச்சு
வேதனைதான்  இனி மிச்சமாச்சு
மின்சாரம் அது சம்சாரம் போல ஆச்சு
கண்ணை இமை போல கவனிக்க வேண்டியாச்சு


ஏழை வாழ்வு புதை குழியாச்சு
இல்லங்கள் இனி இருட்டறையாச்சு
விலைவாசி மலை யேறியாச்சு
நிலை குழைந்து வாழ்க்கை வீழ்ந்து போச்சு


புத்தாண்டு பரிசு கிடைச்சு போச்சு
மின்சாரக் குயில் கூவியாச்சு
ஆசியாவின் ஆச்சர்யம் இது தானா?
ஆசியாவின் பூச்சியம் நாங்கள் தானா?

-   கலாநெஞ்சன் ஷாஜஹான் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்