(இக்கட்டுரை 9-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றினை ஜெனீவா மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்துள்ள விடயம் தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஹுப் ஹக்கீமுடன் கடும் தொனியில் கதைத்ததாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றினை ஜெனீவா மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்துள்ள விடயம் தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஹுப் ஹக்கீமுடன் கடும் தொனியில் கதைத்ததாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'உங்களால் ஆளும்
கட்சியில் இருக்க முடியும் என்றால் இருங்கள் . இல்லையேல் விலகிச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி
ரஹுப்
ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் இருவருக்கும் இடையில் இது
போன்று முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையும் ,அதனைத் தொடர்ந்து தாங்கள் அரசாங்கத்திலிருந்து எக்காரணம்
கொண்டும் விலகப் போவதில்லை என அமைச்சர் ரஹுப் ஹக்கீம் கூறியுள்ளமையும்
ஞாபகத்திற்கு வருகிறது.
முஸ்லிம் காங்கிரஸால் நவநீதம் பிள்ளைக்கு
சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தை புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் இலங்கைக்க எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை
பேரவையில் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் எதிரொளியாகவே ஜனாதிபதி ரஹுப் ஹக்கீமை
கடிந்து கொண்டமை இடம்பெற்றுள்ளது.;
இந்நிலையில், முஸ்லிம்
காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகிவிடுமா? அல்லது தொடர்ந்தும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக
இருக்குமா?
என்ற
கேள்வி கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், செயலாளர்
ஆகியோரது கருத்து
'நாங்கள் தாமாக
முன்வந்து அரசாங்கத்தை விட்டு விலகமாட்டோம். வேண்டுமானால் எம்மை தாராளமாக விலக்கலாம். என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரஹுப்
ஹக்கீம் தெரிவித்துள்ளார். சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸில் இணைந்து கொள்ளும் வைபவத்தின்
போதே (28-2-2014)
அமைச்சர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரஹுப் ஹக்கீம் இது தொடர்பில் மேல் மாகாணசபைத் தேர்தலில் களுத்துறை
மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து
பாணந்துறை ஹேனமுல்லையில் கடந்த சனிக்கிழமை
(1-3-2014)
நடைபெற்ற
பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போது
மேலும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
'எமது கட்சி
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற காரணத்தினால் ஜனாதிபதியும் நானும் அடிக்கடி
முரண்பட்டுக் கொள்கிறோம். இது புதிய விடயமல்ல. கடந்த வெள்ளிக்கிழமை; நடந்த அமைச்சரவைக்
கூட்டத்தில் என்னுடன் முரண்பட்;;ட ஜனாதிபதி காரசாரமான வார்த்தைகளை கூறினார். சந்திரிக்கா
பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் மறைந்த தலைவர் அஷ்ரப் மட்டுமல்ல
நானும் கூட அவருடன் முரண்பட்டிருக்கின்றோம். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை
விட்டு வெளியேறிவிடும் என்ற அச்சம் சிலரை ஆட்கொண்டிருக்கின்றது. இதனால், முக்கிய
அமைச்சர்கள் சிலர் என்னுடன் கதைத்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு
வெளியேறிவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் மேலோங்கியிருக்கின்றது என்று அமைச்சர்
அங்கு கூறியுள்ளார்.
இதேவேளை, இவ்விடயம்
தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கருத்து
தெரிவித்துள்ளார். 'இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள்
தொடர்பில் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணைகளை கோரி வருவதுடன், போரில்
சிங்களவர்களும் தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனினும், முஸ்லிம்
மக்களும் போரில் பாதிக்கப்பட்டுள்ளதை எவரும் நினைவூட்டுவதில்லை. ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருந்தாலும் எம்முன் பல பிரச்சினைகள் உள்ளன.
போர் நடைபெற்ற போதும் அதன் பின்னரும் முஸ்லிம் மக்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்க
நேர்ந்தது.
பொருளாதார , சமூக மற்றும்
கலாசார ரீதியில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. எமது பிரச்சினைகளை அரசாங்கம் நன்கு
அறிந்துள்ளது. எமது பிரச்சினைகளை எழுத்து மூலமாக அரசாங்கத்திற்கு
தெரியப்படுத்தியிருக்கிறோம். சில அமைச்சர்கள் முஸ்லிம்களை தேசத் துரோகிகள் என
முத்திரை குத்தி வருகின்றனர். இப்படியான பிரச்சினைகள் இருக்கும் போது ஏன்
அரசாங்கத்துடன் இருக்கின்றீர்கள் என்ற சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் ஏன்
அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும்? அரசாங்கத்தில் இருப்பதால் எமது பிரச்சினைகளை சர்வதேசத்திடம்
முன்வைப்பதில் தவறி;ல்லை. எமது பிரச்சினைகளை கண்டும் காணாதவர்கள் போல் எம்மால்
இருக்க முடியாது' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன்
அலி கருத்து தெரிவித்துள்ளார்.
செயலாளர் நாயகம்
ஹசன் அலி ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடர் பற்றி பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவி;க்கையில், ' ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை
விடயத்தில் சர்வதேச விசாரணைகளை நிர்ப்பந்திப்பதும் பாதுகாப்பதும் அரசாங்கத்தின்
செயற்பாட்;டிலேயே
தங்கியுள்ளது எனவும், சர்வதேச
சமூகத்தினரை பகைத்துக் கொண்டு இலங்கையில்
சுதந்திரமான ஆட்சியினை செய்ய முடியாது எனவும், சர்வதேச
கோரிக்கையினை ஏற்று, சர்வதேசத்திடம்
இலங்கை அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி தீர்மானம் ஒன்றினைப்
பெற்றுக் கொள்ள வேண்டு;ம் எனவும், இலங்கையில் சுயாதீன விசாரணைகள் மேற்கொண்டு நல்லிணக்கத்தின்
மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும், சிறுபான்மை
சமூகத்தின் பிரச்சினைகளை தீர்;த்து நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீமுஸ்லிம் காங்கிரஸ்
தலைவருக்கு எதிரான கருத்துக்கள்
இதேவேளை, ஸ்ரீமுஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீமை தேசிய
சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹமட் முஸம்மில் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் நாட்டுக்கு செய்த துரோகத்தால் ஜெனீவாவில் சவூதி அரேபியா மற்றும்
டுபாய் நாடுகளின் ஆதரவை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்
குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (3-3-2014) பெலவத்தை, ஜெயந்திபுர
மாவத்தையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2005. 2010 ஆம்
ஆண்டுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அமைப்பதற்காக எந்தவிதமான பங்களிப்பையும் வழங்காத ஹக்கீம், ஆட்சி
அமைத்ததும் ஓடும் பஸ்ஸில் மிதி பலகையில் தொற்றிக் கொண்டார். இன்று நீதி அமைச்சர்
பதவியைப் பெற்றுக் கொண்டு நாட்டுக்கும்
அரசாங்கத்திற்கும் துரோகமிழைக்கின்றார். அன்று முதல் இன்று வரை அவர்
அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மற்றும்
சர்வதேச சக்திகளுடனேயே செயற்படுகிறார்.
இன்று இதே அறிக்கையை சவூதி மற்றும் டுபாய் நாடுகளுக்கு வழங்கி ஜெனீவாவில் இதுகால
வரை அந்நாடுகள் வழங்கிய ஆதரவை இழக்கும் துரோகத்தை செய்துள்ளார் என முஹமட் முஸம்மில் குற்றச்சாட்டு
தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நீதி அமைச்சர்
ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் ஹக்கீம்
நாட்டுக்கு எதிராக செயற்பட்டுள்ளார் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ ரீ
வர்ணசிங்க தெரிவித்துள்ளார். இது போன்று மேலும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திலிருந்து விலக்கும் எண்ணம்
தற்போதைக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும்
அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்
திங்கட்கிழமை (3)
இடம்பெற்ற
செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். கூட்டணி அரசாங்கம் இருக்கும் போது கூட்டணிக்குள் இவ்வாறான சில சிக்கல்கள்
ஏற்படுவதுண்டு. அது வழமையான விடயமாகும். ஆனால், அவை விரைவில்
தீர்க்கப்பட்டு விடும் விவகாரங்களாகும் எனவும் அமைச்சர் அங்கு மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் முதன்மை கட்சி முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம்களுக்கு
என்று தனியொரு கட்சி அவசியம்
என்ற பிரதான தேவையின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியினால்
எடுக்கப்படும் தீர்;மானங்களும் நடவடிக்கைகளும் முஸ்லிம்களுக்கு சார்பானதாகவும் முஸ்லிம்களின் நலன்
சார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. அக்கட்சி
முஸ்லிம்களின் முதன்மை கட்சியாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் இருந்;த காலத்தில்
அக்கட்சி தேசிய அரசியலில் பேரம் பேசும்
சக்தியாக இருந்தது. அவரின் மறைவின் பின்னர் அந்நிலை படிப்படியாக தேய்வடைந்து செல்வதையே காணக்கூடியதாக உள்ளது.
அக்கட்சியின் தற்போதையத் தலைவருக்கு எதிராக
குற்றச்சாட்டுக்கள்
உள்ளன. கட்சியின் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்த்தர்கள், ஆதரவாளர்கள்
பலர் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்;களை தெரிவித்து வருகின்றனர். சிலர் கட்சியைவிட்டு விலகி வேறு கட்சி ஆரம்பித்துள்ளனர். இன்னும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து
கொண்டனர். இதற்கெல்லாம் முழமையாக தலைவர்
ரஹுப் ஹக்கீம்தான் காரணம் என்று கூறமுடியாவிட்டாலும், கட்சியின்
தேசியத் தலைவர் என்ற ரீதியில் அவருக்கும் அதில் பங்கு உண்டு. பதவி ஆசை , பண ஆசை, அதிகார ஆசை
போன்ற பேராசைகள் முஸ்லிம் அரசியல்
தலைவர்கள் பலரை ஆட்கொண்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. இதன் காரணமாக கட்சியை
விட்டு nவுறு கட்சிகளுக்கு ஓடிப் போனவர்களும் உண்டு.
சுய நல அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பட்டியலில்
இருக்கும்;
முஸ்லிம்
தலைவர்கள் பலர் தற்போது முஸ்லிம் மக்களால் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பல
கட்சிகளிலும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக பேரினவாதிகளால் முஸ்லிம்களுக்கு மத, சமய, கலாசார, ரீதியில்
பல்வேறு வகைகளிலும் அநீதி இழைக்கப்பட்டு
வரும்போது, ஆளும் கட்சியிலும் எதிர்கட்சியிலும் உள்ள முஸ்லிம்
தலைவர்கள் நடந்து கொண்ட முறைகள், அவை தொடர்பில்
எடுத்த நடவடிக்கைகள் பற்றி மக்கள் நன்கு
அறிந்தும் புரிந்தும் வைத்துள்ளனர்.
குறிப்பாக பள்ளிவாசல்கள் பலவற்றின் மீது தாக்குதல்கள்
மேற்கொள்ளப்பட்ட போது எமது தலைமைகள் நடந்து கொண்ட விதத்தை மக்கள் புரிந்து
கொண்டுள்ளனர். இந்த பத்தியை எழுதும் போதும்
கொழும்பை அண்மித்தான தெஹிவளை, கடவத்தை
வீதியிலுள்ள மஸ்ஜிதுல் ஷாபி பள்ளிவாசல் கடந்த 3-3-2014 முதல் மூடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு ஒன்றின்
அடிப்படையிலேயே பள்ளிவாசல் மூடப்பட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த பள்ளிவாசலை
அண்டி வாழும் சிலரால் கங்கொடவில நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு ஒன்றின் அடிப்படையிலே இந்தப் பள்ளிவாசல்
மூடப்பட்டதாக நிர்வாக சபை அறிவித்துள்ளது.
குறித்த மஸ்ஜித் மூடப்படுவதை தடுக்கும் முகமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் , சகல உயர்
மட்டங்களுடனும் பேசியிருந்த நிலையில் இந்த மஸ்ஜித் மூடப்;பட்டுள்ளது.
இதுதவிர, ஹலால்
பிரச்சினை, முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, ஹிஜாப்
பிரச்சினை, மாடறுத்தல்
பிரச்சினை, முஸ்லிம்களுக்கு
சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், காணி தொடர்பான
பிரச்சினைகள் என பிரச்சினைகள் தொடர் கதையாக உள்ளன. மேலும் சில பிரச்சினைகள்
எதிர்காலத்தில் அரங்கேற்றப்பட உள்ளன.
தமது மக்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக
நடவடிக்கை எடுக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மீதுள்ள பாரிய பொறுப்பும்
கடமையுமாகும். அவர்கள் அந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. மக்களால் தெரிவு
செய்யப்படும் தலைவர்கள் தமது கடமையையும் பொறுப்பையும் சரியாக செய்யாவிட்டால்
பின்னர் அதே மக்களால் புறக்கணிக்கப்படும் காலம் வரலாம். நாளை மறுமையில் இறைவன்
முன்னிலையில் அவர்கள் இதற்கு பதில் கூற வேண்டும்.
ஆகவே, ஜெனீவா மனித
உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்துள்ள
அறிக்கை தொடர்பான விடயம் அவர்களது கடமையும் பொறுப்புமாகும். அவர்கள் தமது
இனத்திற்கு எதிராக செயல்பட
பாராளுமன்றத்திற்கு, மாகாண
சபைகளுக்கு,
உள்ள10ராட்சி
சபைகளுக்கு தெரிவு செய்யப்படவில்லை. மாறாக மக்களுக்கு சேவை செய்யவே தெரிவு
செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் அறிக்கை கொடுத்து முஸ்லிம்
காங்கிரஸ் தனது கடமையை செய்துள்ளது.
மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கொடுத்துள்ள அறிக்கை நாட்டை காட்டிக் கொடுக்கும்
அறிக்கையல்ல. அன்று முதல் இன்று வரை முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுடனேயே வாழ்ந்து
வந்துள்ளார்கள். வரலாறு அதற்கு சாட்சி
சொல்லும். இனியும் அவ்வாறே வாழ்வார்கள். அவர்கள் நாட்டைக் காட்டிக்
கொடுக்கமாட்டார்கள்.
ஆயினும், முஸ்லிம்களுக்கு
ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளின் போது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கடைமையை சரிவரசச்;; செய்ததா என்ற
கேள்வி எழுகிறது. அக்கட்சி பேரம்
பேசும் சக்தியாக அல்லாமல் பேச முடியாத
இயலாமை கொண்ட கட்சியாகவே
பார்க்கப்படுகிறது. அதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது அல்ல.
பலமற்ற எதிர்கட்சியின் பக்கம் இருந்து கொண்டு தனது சமூகத்திற்கு எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதைவிட
ஆளும் தரப்பில் இருந்து கொண்டு தமது இனத்திற்காகவும் சமூகத்திற்காகவும் குரல்
கொடுப்பது நல்லதுதான். ஆயினும், தமக்கு வாக்களித்த மக்களின் விருப்பதிற்கு மாற்றமாக செயற்பட அக்கட்சிக்கு உரிமை உள்ளதா? அரசியல்
சாணக்கியம் என்ற பெயரில் சமூகத்தை அரசியல் அநாதைகளாக்குவதா?
இதேவேளை, அந்த அறிக்கையை
ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முழு விருப்பத்துடன்தான் நவநீதம் பிள்ளையிடம் கொடுத்தாரா ? இல்லை கட்சி
முக்கியஸ்த்தர்கள் சிலரின் அழுத்தம் காரணமாக கொடுக்க வேண்டி வந்ததா? ஏன்ற
கேள்வியும் எழுகிறது. இந்த அறிக்கை தயாரிப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன்
அலி அதிக அக்கறை எடுத்துக் கொண்டதாகவே தெரிய வருகிறது. கட்சியில் எழுந்த அழுத்தம்
காரணமாகவே அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டி
வந்ததாக ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் தெரிவித்தாக தெரியவருகிறது. எது எப்படியோ, அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம்
சமர்ப்பித்தாகிவிட்டது.
இந்த அறிக்கையை சமர்ப்பித்தன் மூலமாக ஜனாதிபதியின் வெறுப்பை
சம்பாதித்தாலும், நடைபெறவுள்ள
மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் மக்களிடம் சென்று தமக்கு வாக்களிக்குமாறு கேட்பதற்கு முஸ்லிம் காங்கிரஸிற்கு இது ஒரு
சிறந்த ஆதாரமாக அமையப் போகிறது. பிறகு என்ன? தேர்தல்
முடிந்தவுடன் அரசாங்கத்துடன் இணைந்து
கொள்ள வேண்டடியதுதான். ஆம், முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளி கட்சியல்லவா? பகையாளி
அல்லவே!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்