(இக்கட்டுரை 16-3-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை
மக்களுக்கு முக்கிய தேர்தலாக உள்ளது. குறிப்பாக மேல் மாகாண சபை
தேர்தல் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முக்கியமானதொரு தேர்தலாக அமைந்துள்ளது.
இது என்ன மாகாண சபை தேர்தல்தானே. பாராளுமன்ற தேர்தல் அல்லவே என
சிறுபான்மை மக்கள் கருதுவார்களாயின்
அல்லது யார் ஆட்சி அமைத்தால் நமக்கென்ன என்று தேர்தலில் வாக்களிக்காமல்
விடுவார்களாயின், அது சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது
திண்ணம்.
உள்ளு10ராட்சி சபைகள், மாகாண சபைகள், நாடாளுமன்றம் இவை யாவும் மக்களிற்கு சேவை செய்வதற்காக
மக்களால் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து
அனுப்பும் றிறுவனங்களாகும்.
பொது மக்கள் செலுத்தும் பல்வேறு விதமான வரிகள் இந்த நிறுவனங்களை நிருவகிக்க
பயன்படுத்தப்படுகின்றன. பொது மக்கள் தெரிவு செய்து அனுப்பும் மக்கள் பிரதிநிதிகள்
மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் நமது வீட்டு
வாசலுக்கு தேடி வரும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரதேசத்தின்
பக்கமே வருவதில்;லை என்பது வேறுவிடயம்.
அதுபோன்றவர்களுக்கு பாடம் படிப்பிக்கவும்
மக்கள் வாக்குச் சீட்டை பயன்படுத்த வேண்டும்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களின் முதுகில் சவாரி செய்யும் பெரும்பான்மையின தலைவர்களினதும் கட்சிகளினதும்
திட்டங்கள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டே வருகின்றன. நடைபெறவுள்ள மாகாண சபை
தேர்தலும் அதற்கு சிறந்த உதாரணமாகும்.
சிறுபான்மை மக்களின் இருப்பை
உறுதிப்படுத்துவதற்காகவும் உரிமைகளை நிலை நிறுத்துவதற்றகாகவும், உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காகவும், பெரும்பான்மை மக்கள்
பெரும் நன்மைகளைப் பெற்றுக்
கொள்வதற்காகவும் உள்ளு10ராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் தமது
பிரதிநிதித்துவங்களை சிறுபான்மையினர்
கொண்டிருக்க வேண்டும்.
மேல் மாகாணத்தை பொருத்தவரையில் கம்பஹா
மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் ஒரு சில சிறுபான்மை பிரதிநிதித்துவங்களும்
மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவமும்; (ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ்) உள்ளது. நாடாளுமன்றத்தில்
தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள்
கிடையாது. களுத்துறை மாவட்டத்திலும் மாகாண சபையிலும் நாடாளுமன்றத்தில்
சிறுபான்மை பிரதிநிதித்துவம் கிடையாது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த மூன்று அமைப்புக்களிலும் பிரதிநிதித்துவங்கள் உள்ளன.
ஆயினும், கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்துள்ளதை
மறைக்க முடியாது. எதிர்காலத்தில் மேலும்
குறையக் கூடிய அபாயங்களே உள்ளன. இந்நிலையில்,
இந்த தேர்தல் தொடர்பாக
சிறுபான்மை மக்கள் முன்னரைவிட சிந்திக்க
வேண்டியவர்களாக உள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதி;த்துவம் இல்லாமையினால் கல்வி
மற்றும் பல்வேறு வகையான பிரச்சினைகளை அந்;த மாவட்ட மக்கள் எதிர் நோக்கிய போதிலும்,
மாகாண சபையில் அதனை எடுத்துரைத்து தீர்வு காண்பதற்கு
முடியாமல் போயுள்ளது. பெரும்பான்மையின பிரதிநிதிகள் தமது மக்களுக்கு செய்த சேவைகள்
யாவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. அதேவேளை,
இந்த மாவட்டத்தில்
முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தொடர்ந்து
இரண்டாவது தடைவையாகவும் மாகாண சபைக்கு
உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யய்பட்டதன் காரணமாக கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் சில
நன்மைகளை அடைத்ததுடன். ஒரு சில நன்மைகள் தமிழ் மக்களுக்கும் கிடைத்தன. ஆயினும்,
இந்த மாவட்டத்தில் 68 ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களித்திருந்தால் மேலும் இரண்டு முஸ்லிம் உறுப்பினர்களை தெரிவு
செய்திருக்கலாம்.
எனவே, மாகாண சபைக்கு தமது பிரதிநிதிகளை நன்கு சிந்தித்து தெரிவு செய்து அனுப்புவதனூடாக பல்வேறு நன்மைகள்
கிடைக்கும் என்பதை சிறுபான்மை மக்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் பிரதிநிதித்;துவம் குறையக் கூடிய அபாயம்
இந்தத் தேர்தலில்,சிறுபான்மை மக்களின்
வாக்குகள் சிதறுண்டு போகக் கூடிய அபாயம் உள்ளதால் சிறுபான்மை மக்கள் நன்கு
சிந்தித்து வாக்களிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
இரு பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சிறுபான்மை
மக்களின் வாக்குகளை குறிவைத்து
வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. அத்துடன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை
சிதறடிக்கும் திட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளன. இம்முறை அதிக எண்ணிக்கையான
முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
சுயேட்சைக் குழுக்களிலும் முஸ்லிம், தமிழ் வேட்பாளர்கள்
களமிறங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, இம்முறை மேல் மாகாண சபையில் முஸ்லிம்
பிரதிநிதித்;துவம் குறையக் கூடிய அபாயம்
உள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்;துவம் குறையக் கூடிய அபாயம் அதிகமாக உள்ளது.
யாருக்கு வாக்களிப்பது?
யாருக்கு வாக்களிப்பது என்பது சிறுபான்மை மக்கள் நன்கு சிந்திக்க
வேண்டும். வாக்குகளை சூறையாடுவதற்காக தேர்தல் இலஞ்சம் தரும் வேட்பாளர்களுக்கா?, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கா?, ஹெரோயின்,
மதுபானம்,
கஞ்சா போன்ற போதைப்
பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கா?,
சிறுவர் மற்றும்
பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர்களுக்கா?, வாக்குகளைப் பெற்ற பின்னர் மக்களை மறந்து சுய நல அரசியல்
செய்பவர்களுக்கா?,
சிறுபான்மையின
மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படு;ம் போது மௌனமாக இருந்து
விட்டு தேர்தல் காலங்களில் மாத்திரம் குரல் கொடுப்பவர்களுக்கா,
மக்களின் பணத்தில்
சுகபோகமாக வாழ்பவர்களுக்கா? ,
அரசியலுக்கு வந்து
பணம் சம்பாதித்தவர்களுக்கா?,
இனத்தையும் ,
சமயத்தையும் ,
மொழியையும்,
பிரதேசத்தையும் அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துபவர்களுக்கா?, மக்களின் வாழ்வாதார, பொருளாதார பிரச்சினைகளுக்கு
குரல் கொடுக்காதவர்களுக்கா? மக்களின் நலனுக்காக
உழைக்காதவர்களுக்கா?, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை நடை
முறைப்படுத்தாதவர்களுக்கா? தமது பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என்பதை மக்கள் நன்றாக
சிந்தித்துப்; பார்க்க வேண்டும்.
சிறுபான்மை மக்களுக்கு பேரினவாதிகளால் இன்னல் ஏற்படும் போது மௌனம்
காத்தவர்களுக்கா? இனத்தை மறந்து அரசியல் செய்பவர்களுக்கா?,
வெற்றி பெற்ற பின்னர்
கட்சி மாறுவோருக்கா?,
கட்சியை காட்டிக்
கொடுப்பவர்களுக்கா?, தனது இனத்திற்கு துரோகம் இழைப்பவர்களுக்கா? தமது விலை மதிக்க முடியாத வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதை சிறுபான்மை
மக்கள் நன்றாக சிந்தித்துப்; பார்க்க வேண்டும்.
சிறுபான்மை மக்கள் தமது சுய நலனுக்காக
வாக்குகளைப் பயன்படுத்தாமல் தமக்கு சேவை செய்யக் கூடிய கட்சியையும்
வேட்பாளர்களையும் தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும். அதேபோன்று, இன்றைய விகிதாசார தேர்தல் முறைக்கு ஏற்ப கட்சியையும் வேட்பாளர்களையும் தெரிவு
செய்து வாக்களிக்க வேண்டும். வாக்குகள் வீணாக சிதறிப் போய்விடாமல் பயன்படுத்த
வேண்டும். உறவினர்கள், நண்பர்கள்,
அறிந்தவர்கள்,
தெரிந்தவர்கள்
என்பதற்காக அல்லது சுய இலாபத்திற்காக
வாக்களிக்க கூடாது. அவ்வாறு வாக்களித்தால் சிறுபான்மையின பிரதிநிதித்துவம்
குறையலாம். அல்லது இல்லாமற் போகலாம். அவ்வாறு வாக்களிப்பது தமக்கு தாமே செய்து
கொள்ளும் அநியாயமாகும். அநீதியாகும்.
கம்பஹா,,களுத்துறை
மாவட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள்
கம்பஹா மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. நீண்ட காலமாக நிலவிய யுத்தம் காரணமாகவும் வேறு
சில காரணங்களினாலும் அந்தப் பிரச்சினைகள் அல்லது பாதிப்புக்கள் வெளியில் தெரியாமல்
உள்ளன. தமிழ் பிரதிநிதித்துவம் மாகாண சபையிலும்
பாராளுமன்றத்திலும் இல்லாமை காரணமாக அப்பிரச்சினைகளுக்கு தீர்வு
காணப்படவில்லை அல்லது வெளியில் சரியாக
தெரியப்படுத்தப்படவில்லை எனலாம்.
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து
வருகின்றனர். தமிழ் பேசும் இந்துக்களும் தமிழ் பேசும் கத்தோலிக்க மக்களும் இந்த மாவட்டத்தில் சில நகரங்களில்
அதிகமாக வாழ்கின்றனர். அவர்களது பிரச்சி;னைகள் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தெரிவதற்கான வாய்ப்புக்கள்
குறைவாகவே உள்ளன. சில தமிழ் மொழிப் பாடசாலைகள் சிங்கள மொழிப் பாடசாலைகளாக
மாறிவிட்டன. சிங்கள மொழிப்பாடசாலைகள் பலவற்றில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு என்றோ
மூடப்பட்டு விட்டது. தமிழ் பேசும்
கத்தோலிக்க, இந்து பெற்றோர்கள்
தமது பிள்ளைகளை சிங்கள மொழி பாடசாலைகளிலும் ஆங்கில மொழியில் கற்பிக்கும் சர்வதேச
பாடசாலைகளிலும் கற்க வைக்கின்றனர். இந்;த மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் கலாசாரங்களிலும் மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. இங்கு பிறந்து வளர்ந்த தமிழர்கள் பலர் தங்களை தமிழர்களாக காட்டிக்
கொள்ள விரும்பாமல் சிங்களவர்களாக பிறப்பு
அத்தாட்சிப்பத்திரங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
அத்துடன் நீர்கொழும்பு நகரிலும் அண்டிய பிரதேசங்களிலும் உள்ள தமிழ் கிரமாங்கள் பலவற்றின் பெயர்களும்
சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. 'மணற் சேணை' என்ற கிராமத்தின் பெயர்
வெலிஹேன ஆகவும், காமாச்சி ஓடை என்ற பிரதேசம்
காமச்சோடையாகவும் மாறியுள்ளமை சில உதாரணங்களாகும்.
வெலிஹேன மற்றும் தோப்பு போன்ற
பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழி பாடசாலைகள் அல்லது சர்வதேச பாடசாலைகளிலேயே தமது
பிள்ளைகளை கற்பிக்க அதிக ஆர்வம்
காட்டுகின்றனர். இதன் காரணமாக வெலிஹேக
ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்
கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100 இற்கும் குறைவாக மாறிவிட்டது.
அதே போன்;று,
முஸ்லிம் மக்களில்
கணிசமான எண்ணிக்கையினர் தமது பிள்ளைகளை சர்வதேச பாடசாலைகளிலும் சிங்கள
மொழிப்பாடசாலைகளிலும் கல்வி கற்க வைக்கின்றனர். நீர்கொழும்பு நகரில் இருந்த
முஸ்லிம் பாடசாலை ஒன்று மூடப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. இதனை மீண்டும்
திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. முஸ்லிம் பாடசாலைகளைவிட சிங்கள
மொழிப்பாடசாலைகள் பலவற்றில் நல்ல வசதி வாய்ப்புக்கள் உள்ளமையினாலும். சிறப்பாக
கற்றல்- கற்பித்தல் நடைபெறுவதாக
கருதுவதாலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை
சிங்கள மொழிப்பாடசாலைகளில் கல்வி கற்க வைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கல்வி தொடர்பான பிரச்சினைகளே இங்கு
மேலெழுந்தவாரியாக சுட்டிக்காட்டப்பட்டது. இது தவிர உள்ளுராட்சி அமைப்புக்களின்
நிருவாகம் இந்த இரு மாவட்டங்களிலும்; சிங்கள மொழியிலேயே நடைபெறுகிறது. களுத்துறை
மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளுக்கு
போதியளவு ஆசிரியர்கள் இன்மை, போதியளவு பௌதீக வளங்கள் இன்மை என்பன பெரும் குறைபாடாக
உள்ளது. இங்கு வாழும் சிறுபான்மை மக்களின் பொருளாதார நிலை உயர்த்தப்பட வேண்டும்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு,
வத்தளை போன்ற
நகரங்களில் வடக்கு கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்த தமிழ்,
மக்கள் அதிக
எண்ணிக்கையில் வசிக்கின்றனர். முஸ்லிம்
மக்கள் நீர்கொழும்பு நகரில் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். ஆகவே,
கம்பஹா மாவட்டம்
என்பது நாட்டின் பல பிரதேசங்களையும்
சேர்ந்த பல்லினங்களையும் பல மதங்களையும் கொண்ட மக்கள் வாழக்கூடிய மாவட்டமாக
உள்ளது. இந்த மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் தேவைகள் தீர்க்கப்ட வேண்டமாயின்,
பிரச்சினைகளுக்கு
தீர்வுகள் காணப்பட வேண்டுமாயின்
சிறுபான்மை மக்கள் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தி தமக்கு சேவை செய்யக்
கூடிய பிரதிநிதிகளை மாகாண சபைக்கு அனுப்ப வேண்டும்.
கொழும்பு மாவட்ட
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள்
மேல் மாகாணத்தின் கொழும்பு
மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சிசனைகள் தொடர்கதையாகவே உள்ளன. கொழும்பில் வசிப்பதாக
கூறிக் கொண்டாலும் அடிப்படை வசதகிள் அற்ற அல்லது
வசதிகள் குறைந்த நிலையிலேயே முஸ்லிம் ,
தமிழ் மக்கள் பல
ஆயிரக்கானோர் வாழந்து வருகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் பொருளாதார வசதிபடைத்த படித்த மக்கள் ஒரு பகுதியினர் வாழுகின்ற போதிலும், வீட்டு வசதிகள் பாடசாலை
வசதிகள் அற்ற நிலையில்; நடுத்தர குடும்பங்களைச்
சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். சேரிப்புறங்களில் சிறுபான்மை
மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் வாழுகின்றனர். இங்கு வாழும் மக்களுக்கு போதிய தொழில்
வாய்ப்புக்கள் இல்லை. தரமான பாடசாலைகள் இல்லை. சுகாதார வசதிகள் கிடையாது. பலர்
குடிசை வீடுகளிலேயே வசிக்கின்றனர். இன்னும் பலர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
ஒரே வீட்டில் பெற்றோர், பிள்ளைகள்,
பிள்ளைகளின் பிள்ளைகள்
என 10 இற்கும் மேற்பட்டோர்
வாழுகின்ற நிலையும் போதியளவு மலசலகூட
வசதிகள் இல்லாத அவல நிலையும் அங்கு காணப்படுகிறது.
தோட்;டங்களிலும்
சேரிப்புறங்களிலும் வசிக்கும் பல ஆண் பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடை நடுவில்
நிறுத்திவிட்டு தொழிலுக்கு செல்கின்றனர். வயது வந்த பெண் பிள்ளைகள் தொழிலுக்கு
செல்கின்றனர். அல்லது வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக செல்கின்றனர். இங்குள்ள பல குடும்பங்களில் இளவயதினரிடையே
திருமணங்களும் விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளன. குடும்ப பிரச்சனைகள் காரணமாகவும்
விவாகரத்துக்கள் காரணமாகவும் பிள்ளைகள்
பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் பெற்றோரின் கவனிப்பிலிருந்தும்
பாதுகாப்பிலிருந்தும் விடுபடுகின்றனர். இவை பெரும் சமூகப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.
தொழில் இல்லாத இள வயது ஆண்களில் சிலர் சமூக விரோதச் செயல்களில்
ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் உள்ள பாதாள
உலக குழுக்களில் சிறுபான்மை இனத்தவர்கள் பலர் இருந்தமையும்,
சிலர் பாதாள உலக
தலைவர்களாக செயற்பட்டமையும், சிறுபான்மை மக்கள் வசிக்கக் கூடிய இடங்களில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை
தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.
எனவே, தமது பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான வகையில்
வேலைத்திட்டங்களை வகுத்து செயற்படுபவர்களுக்கே
கொழும்பு வாழ் சிறுபான்மை மக்கள் வாக்களிக்க வேண்டும். அது எந்த கட்சி? எந்த அரசியல்வாதி? என்பதை நடுநிலையாக நின்று
நன்கு சிந்தித்து தெரிவு செய்ய வேண்டும்.
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் போது
சிறுபான்மை மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் தமது வாக்குளை அளிக்க வேண்டியவர்களாக
உள்ளனர். ;ராமன் ஆண்டாலும் ராவணன்
ஆண்டாலும் எமக்கொரு கவலையில்லை' என்று நாம் நினைப்போமானால்
கவலைகள் எமக்கு தொடர்கதைகளாக அமையும் என்பது நிச்சயம்.
எமது வாக்கு. எமது பலம். எமது
தெரிவு எமது நலம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்