மேல் மற்றும் தென் மாகாண சபை
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளுக்கு
நாள் சூடு பிடித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வரை (24-2-2014) தேர்தல் சட்ட மீறல் மற்றும்
தேர்தல் வன்முறைகள் குறித்து 354 முறைப்பாடுகள்
பதிவாகியுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்ட விதிகள் மீறப்பட்டமை குறித்து 338 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் குறித்து 16 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதென
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி>; மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவாக 109 முறைப்பாடுகள்
பதிவாகியுள்ளதாகவும் இதில் 105 சட்ட விரோத
செயற்பாடுகள் மற்றும் 4 வன்முறைச் சம்பவங்கள்
அடங்குவதாகவும், தென் மாகாணத்தில் மாத்தறை
மாவட்டத்தில் அதிகளவாக 44 முறைப்பாடுகள்
பதிவாகியுள்ளதாகவும் கபே அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. இது 25-2-2014 வரையான பதிவாகும்.
முதலாவது தேர்தல் வன்முறை சம்பவம்
ஹம்பாந்தோட்டையில் பதிவு
மார்ச் மாதம் 29 ஆம் திகதி தென் மற்றும் மேல்
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல் தேர்தல் வன்முறைச் சம்பவம்
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதிவாகியது.
இதன்படி தென் மாகாணம்;
தேர்தல்
வன்முறையை ஆரம்ப்பித்து வைத்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் (6-2-2014) ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி வேட்பாளரான டி.வி.உபுலின் ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள்
இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மித்தெனிய பகுதியில்
டி.வி.உபுலின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்ட போது இத்தாக்குதல் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பியசேன ஏக்கநாயக்க மற்றும் கே.ஜகத் குமார ஆகியோர் இது தொடர்பாக கபே இயக்கத்திடம் முறைப்பாடு
செய்துள்ளனர்.
முதல் துப்பாக்கிச் சூடு ஹம்பாந்தோட்டையில் பதிவு
இதேவேளை> முதல் துப்பாக்கிச் சூடு சம்பவமும் தென் மாகாணத்தில் பதிவாகியது. தென்
மாகாண சபை தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில்
போட்டியிடும் வேட்பாளர் உள்ளடங்களாக சேனாரத்னவின் வாகனம் மீது 9-2-2014 அன்று அதிகாலை 3.00 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இது இம்முறை இடம்பெறவுள்ள
தேர்தலுக்காக இடம்பெற்ற முதல் துப்பாக்கி பிரயோகமாகும்.;
பேலியத்த அரங்வல வீதியில் இடம்பெற்ற சேனாரத்னவின் வீட்டிற்கு முன்னாள்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வாகனத்தின்;
மீது தாக்குதல் மேற்கொண்ட
குழுவினர் தப்பிச் சென்றுள்ளதாக கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டு
சத்தம் கேட்டு,; சென்று பார்க்கும்போது
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றதாக பொலிஸ் முறைப்பாட்டில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளரான
சேனாரத்ன தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முன்னர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தென் மாகாண சபை தேர்தல் வன்முறை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்
பெற்றுள்ளது.
தேர்தல் சட்டங்களை செயற்படுத்தாத பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இதேவேளை> தேர்தல் சட்டங்களை
நடைமுறைப்படுத்தாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு
எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
மேற்கொள்ள பொலிஸ் தலைமையகம்
தீர்மானித்துள்ளது
இத்தகைய உத்தியோகத்தர்கள் தொடர்பிலான
முறைப்பாடுகளை பொலிஸ் தேர்தல்கள்
அலுவலகத்தில் முன்வைக்குமாறு பொலிஸ் ஊடகப்
பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கேட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது பொலிஸாரின் கடமை என்பதோடு,; அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு
வழங்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.;.
இதன்படி, சுவரொட்டிகள், பதாகைகளை காட்சிபடுத்தும்
மற்றும் அதற்கான ஆலோசனைகளை வழங்குவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாப
அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முதலில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும்,
இதன்போது உரிய பதில்
கிடைக்காவிட்டால் பொலிஸ் தேர்தல்கள் அலுவலகத்திடம் முறையிடுமாறும் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் தெரிவிக்கின்றார்.
0112 42 11
11 என்ற தொலைபேசி
இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிஸ் தேர்தல்கள் அலுவலகத்தில் முறைப்பாடு
செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய பிரசார சுவரொட்டிகள்>
பதாகைகளை அகற்றுவதற்கு
நடவடிக்கை எடுப்பதோடு, தேர்தல் சட்டங்களை
நடைமுறைப்படுத்தாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான
அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் திகதி
அறிவிக்கப்பட்டதன் பின் வேட்பாளர்களை ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டாம் என கபே
இயக்கம் பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டது.
தேர்தல் திகதி அறிவிப்பின் பின் தொடர்ந்து இவ்வாறு ஊர்வலம் மேற்கொள்வதானது
தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும்.
இதுபோன்ற சட்டவிரோத ஊர்வலங்களால் பல மோதல்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த வருட
மாகாண சபை தேர்தல் காலங்களில் இது போன்ற ஊர்வலங்களே மோதல்கள் இடம்பெறுவதற்கு காரணமாக
அமைந்தன என கபே இயக்கம் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில்
சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் சட்டவிதிகளை மீறும்; வன்முறைகளில் ஈடுபடும் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும்
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு, தேர்தல் சட்ட விதிகளை மீறுதல் மற்றும்
தேர்தல் வன்முறைகள் பெரும் சவாலாக
அமைந்துள்ளன. இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் வேட்பாளர்களும் அவர்களின்
ஆதரவாளர்களான அடியாட்களுமே என்பது பரகசியமாகும். வாக்காளர்களுக்கு இருக்கும்; உரிமைகளும் சுதந்திரமும் இது
போன்ற செயற்பாடுகளினால் கேள்விக்குரியாகின்றன.
தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல்
செய்வதற்கு முன்னதாகவே சில வேட்பாளர்கள்
தாம் போட்டியிடும் மாவட்டம் எங்கும் சுவரொட்டிகளை ஒட்டியதுடன்
பதாகைகளையும் பல இடங்களில் காட்சிக்கு
வைத்தனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் தினத்தில் அத்தகைய வேட்பாளர்கள் தமது
செல்வாக்கையும் ஆள் பலத்தையும் வெளிப்படுத்தும் வகையில் வாகனப் பேரணியை நடத்தினர்.
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர,;
தேர்தல்
பிரசாரத்திற்காக பத்து கோடி ரூபாய் பணத்தை தான் செலவிட இருப்பதாக ஊடகங்களுக்கு
தெரிவித்தார். இந்த செய்தி இணையத்தளங்கள்
பலவற்றில் வெளியானது.
தற்போது தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் வகையில் வீதிகளில் உள்ள மதில்களிலும்> வீட்டு மதில்களிலும்,
உள்வீதிகளிலும்> மின்சார கம்பங்களிலும்
வேட்பாளர்களின் முகங்கள் பல வர்ண நிறங்களில்
போஸ்டர்களாக காட்சியளிக்கின்றன.
சினிமா பட விளம்பரங்களைப் போன்று கட்டவுட்கள் பல இடங்களில்
வைக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தைப் பொருத்த வரையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இதுவரை
நடைபெறாத போதிலும் ஆளும் தரப்பைச் சேர்ந்த பிரபல வேட்பாளர்களின் சுவரொட்டிகளும்
கட்டவுட்களும் சகல இடங்களிலும் காட்சியளிக்கின்றன. சில இடங்களில் மாத்திரம் போஸ்டர்கள்
அகற்றப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும் போது தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்தாத
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளமை ஞாபகத்துக்கு வருகிறது.
இது போன்ற நிலை மேல் மற்றும் தென்
மாகாணங்களில் சகல மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண
சபை தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சில தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன.
ஆனால்,இம்முறை இது வரை கம்பஹாவில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை. அதுபோன்று
உயிர் பலிகளும் இடம்பெறவில்லை. இது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விடயமாகும்.
வேட்பாளர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது?
இதேவேளை.. தமது தேர்தல் பிரசார
வேளைகளுக்காக பல இலட்சம் ரூபா பணத்தை வேட்பாளர்கள் பலர் செலவிடுகின்றனர். அதேபோன்று,
வாக்குகளைப் பெற்றுப்
கொள்வதற்காக பணம், உணவு, மதுபானம்,
கையடக்கத் தொலைபேசி> சுய கை தொழில்
செய்வதற்கான உபரணங்கள் உட்பட பல்வேறு வகைகளில் இலஞ்சமாக
கொடுக்கப்படுகிறது. இதற்கான பணம் வேட்பாளர்களுக்கு எங்;கிருந்து வந்தது? என்பதை வாக்காளர்கள்
சிந்திக்க வேண்டும்.
பணத்தை தமது பிரசார நடவடிக்கைகளுக்காகவும் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும்
தேர்தல் சட்ட விதிகளை மீறி பணத்தை செலவழிக்கும் வேட்பாளர்கள் தமது சொந்தப் பணத்தை
செலவழிப்பதில்லை. அல்லது தாம் நேர்மையான முறையில் உழைத்த பணத்தை இவ்வாறு
செலவிடுவதில்லை. வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்>
வர்த்தகர்கள்> நலன்விரும்பிகள் இதற்கான பணத்தை வழங்குகின்றனர். சில வேட்பாளர்கள்
வர்த்தகர்களிடம் பணத்தை வற்புறுத்திப் பெற்றுக் கொள்வதுமுண்டு. இவ்வாறு
வழங்கப்படும் பணம் ஒரு முதலீடாகும். குறித்த வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்ற
பின்னர் அதற்காக கைமாறு செய்வார். அந்த கைமாறு அநேகமாக சட்டவிரோதமான உதவியாகவும் இருக்;கலாம்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக
நீர்கொழும்பு ஐ.தே.க. வேட்பாளர் கைது
இதேவேளை, தேர்தல் பிரசார வேலைகளுக்காக பணம் தேவைப்படுவதால் இரண்டு கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்ததாகக்
கூறப்படும் சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றது.
ஆம், நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று முகவர்
நிலையத்தில் துப்பாக்கி முனையில்) இரண்டு
கோடிக்கு ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை கொள்ளையி;ட்ட (17-2-2014)
சம்பவம் தொடர்பாக நீர்;கொழும்பு தேர்தல்
தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி
அமைப்பாளரும்> நீர்;கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும்> மேல் மாகாண சபையின் கம்பாஹா
மாவட்ட வேட்பாளருமான ரொயிஸ் விஜித்த பொர்னாந்து
உட்பட மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள
பிரபல நகை கடை மற்றும் வெளிநாட்டு
நாணய மாற்று முகவர் நிலையத்தில் ('ஜுவல் லங்கா) இடம்பெற்ற இத்துணிகர கொள்ளைச் சம்பவம் நாட்டை
அதிரச்சிக்குள்ளாக்கியது. அது மட்டுமன்றி அரசியலிலும்; தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வேட்பாளர்கள் பலர் தேர்தல்
பிரசாரத்திற்காக செலவிடுகிறார்கள்;.
என்ற குற்றச்சாட்டு
பொதுவானதாகும்&,; ஆனால்,; இந்த சம்பவம்
வித்தியாசமானதாகும். தேர்தல் பிரசாரத்திற்காக
தேவையான பணம் நேரடியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆயினும்,;
இந்தக் குற்றச்சாட்டு
இன்னும் நீதிமன்ற விசாரணைகள் இடம் பெற்று நிரூபிக்கப்படவில்லலை. வேட்பாளர் ரொயிஸ்
விஜித்த பொர்னாந்து தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இன்னும் சிலர் கைது செய்யப்பட
வேண்டியுள்ளனர். இக்கட்டுரை எழுதும் தினம்
வரை கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்படவில்லை. கொள்ளைச் சம்பவத்திற்கு
பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று
வருகின்றன.
இந்நிலையில்> நீர்கொழும்பு நகை கடையில்
துப்பாக்கி முனையில் பணம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டிருக்கும் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின் கைது சம்பந்தமாக ஆதாரமற்ற
குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிறுத்த வேண்டும் என்று
ஐக்கி தேசியக் கட்சியின்;
நீர்கொழும்பு தேர்தல்
செயற் குழு செயலாளரும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான பெஞ்சமின் கிஹான்
பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்து
கொச்சிக்கடை> கட்டுநாயக்க வென்னப்புவ ஆகிய
பிரதேசங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும்> ஆனால்> அவை தொடர்பில் சாட்சிகள்
கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாகவும்> ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை
தெரிவிப்பதை அவர் நிறுத்த வேண்டும் என்று
அவர் மேலும் குறிப்பிட்டார்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின் கைது
மற்றும்; அவர் மீது
தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்
தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு
கருத்து தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில்
நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கி தேசியக் கட்சி உறுப்பினர்களான வைத்தியர் ஹென்ரி
ரொஸைரோ> கெலிசன் ஜயகொடி> ரவி ஜீவானந்த> சஜித் மோகன் ஆகியோரும்
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
ஐக்கி தேசியக் கட்சியின்;
நீர்கொழும்பு தேர்தல்
செயற் குழு செயலாளர் பெஞ்சமின் கிஹான் பெர்னாந்து
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவக்கையில்> எமது கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளரின் கைது தொடர்பாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளரின் கருத்துக்கள் எமது கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளன. ரொயிஸ் விஜித்த
பெர்னாந்து தனக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றில் விசாரண செய்யப்பட்டு சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவி;க்கப்பட்டு விடுதலை
செய்யப்பட்டவராவார். அவர் மக்கள் செல்வாக்குமிக்க வேட்பாளராவார். தலைவராவார்.
இதற்கு ஆளும் கட்சி பயந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டதை தேர்தல் வெற்றிக்காக
பயன்படுத்த முயற்சி செய்யப்படுகிறது. அவர் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேக
நபர் மட்டுமேவோர். நீதிமன்றில்;
குற்றவாளியாக
தீர்ப்பளிக்கப்பட்டவரல்ல. நாட்டில் ஆளும் தரப்பினருக்கு ஒரு நீதி. எதிர்
கட்சியினருக்கு இன்னொரு நீதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. ரொயிஸ் பெர்னாந்;து குற்றவாளியென
நீதிமன்றம் நிரூப்பித்தால் எமது கட்சி
அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்காது. எமது அமைப்பாளர் கைது செய்யப்பட்டமை
திட்டமிடப்பட்ட செயலாக கருதுகிறோம்; என்று குறிப்பிட்டார்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின் கைது கட்சி ஆதரவாளர்களையும் அவரது
ஆதரவாளர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியள்ளது. அவரது கைது கம்பஹா மாவட்ட
வாக்களிப்பில் தாக்கத்தை செலுத்தலாம். அது எவ்வாறு என்பதை பொறுத்திருந்து பார்க்க
வேண்டும்.
இது இவ்வாறிருக்க>
வேட்பாளர்கள் தமது
சொத்து விபரங்களை தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று
கூறப்பட்டாலும்; தேர்தல் வெற்றியின் பின்னர்
கோடீஸ்வரர்களான உள்ள10ராட்சி> மாகாண மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்கள் அதிகமாகும். இதை பொது மக்களும் நன்கு அறிவர்.
அமெரிக்காவில் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதோடு>
தேர்தலின் பின்னர்
தேர்தல் வரவு செலவுகள் தொடர்பாக
கணக்கறிக்கையினையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்று
அறியக்கூடியதாகவுள்ளது.
எப்படியோ> மார்ச் 29 ஆம் தகிதி தேர்தல் நடை
பெறவுள்ளது. எதிர்வரும் நாட்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேலும்
சூடுபிடிக்கும் என்பது உண்மை.
எந்தக் கட்சி;க்கு வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க
வேண்டும் என்பதை மக்கள் நன்கு சிந்தித்து
தீர்மானிக்க வேண்டும். நாங்கள் வெற்றி பெறச் செய்யும் கட்சியையோ அல்லது நாங்கள்
தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களையோ பிறகு நொந்துக் கொள்வதில் பயனில்லை அல்லவா?
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்