பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, April 22, 2014

நீர்கொழும்பை அதிர்ச்சியடையச் செய்துள்ள முகமூடி நபர்களின் தொடர் கொள்ளை - எம்.இஸட்.ஷாஜஹான்

 (இக்கட்டுரை (22-4-2014) இன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

நீர்கொழும்பு நகரம் பல்வேறு விடயங்களுக்கு பிரபல்யம் பெற்றதாகும். மீன் பிடித்துறை. உல்லாசப் பயணத்துறை, வர்த்தகத்துறை என பொருளாதார ரீதியிலும். அழகிய கடற்கரைகள்;,  கடோலான தாவரங்;கள் மற்றும் களப்பு   என இயற்கை வனப்பு ரீதியிலும் நீர்கொழும்பு மாநகரம் பிரபல்யம் பெற்றது.

Monday, April 21, 2014

பேரினவாதிகளுக்கு தூக்குக் கயிறாக அமையும் ஒற்றுமைக் கயிறு - கலாநெஞ்சன்

 (இக்கட்டுரை 20-4-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
  அரசியல்வாதிகள் சண்டித்தனம் செய்வது எமது நாட்டில் புதிதல்ல. மக்கள் பிரதிநிதிகள்; வன்முறைச் சம்பவங்களிலும் சட்டத்தை கையில் எடுத்து தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறும் விடயமாகும். ஊடகங்களும் அவற்றை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும். வன்முறைகளுக்கே பெயர்போன அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். நாடாளுமன்றம் முதல் உள்ளுராட்சி சபை வரை அதுபோன்ற

Wednesday, April 16, 2014

'இலங்கையை மியன்மாராக மாற்ற முயலும் பொது பல சேனா'

-     எம்.இஸட்.ஷாஜஹான்
 (இக்கட்டுரை 17-4-2014 இன்றைய விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
மாகாண சபை தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏந்தியிருக்கிறது. ஆம். பொதுபலசேனா மீண்டும் தனது சண்டித்தனத்தை ஆரம்பித்திருக்கிறது.
1990 இல் மன்னார் மாவட்டத்தில் இருந்து  வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பொதுபல சேனா அமைப்பு வன்மையாக எதிர்த்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள மறிச்சுக்கட்டி கிராமத்துக்கு வந்த பொதுபலசேன அமைப்பினர் அக்கிராம மக்களை நோக்கி தகாத வார்த்தைகள் பேசி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

Sunday, April 13, 2014

எதிர் கட்சிகள் பொது அணியில் திரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? முன்னோடிப் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ள அரசு - கலாநெஞ்சன்


(இக்கட்டுரை 13-4-2014 இன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
  
மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை போன்ற பொதுப் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு முன்னர் பாடசாலைகளில் முன்னோடிப் பரீட்சைகளை நடத்தப்பட்டு மாணவர்களின் அடைவு மட்டம்  இனங்காணப்படும்.
இந்;த முன்னோடிப் பரீட்சைகள் மூலமாக மாணவர்களும் தமது கல்வி நிலையை அறிந்து கொண்டு பரீட்சைக்கு மேலும் சிறப்பான முறையில் தயாராவர்;. அந்;த முன்னோடிப் பரீட்சைகளின் பெறுபேறுகளே மாணவர்கள் தோற்றும் அந்தப் பொதுப் பரீட்சையின் பெறுபேறாகவும் பெரும்பாலும் அமைந்துவிடும்.

Sunday, April 6, 2014

இருபது -20 உலக கிண்ணத் தொடர்: இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் (படங்கள்)

பங்களாதேஷில் நேற்று (6-4-2014) நடைபெற்ற ஐந்தாவது இருபது  - 20 உலக கிண்ணத் தொடர் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இலங்கை சாம்பியனானது.
 கடும் மழை காரணமாக, போட்டி 40 நிமிடம் தாமதமாக ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இலங்கை அணித் தலைவர் மாலிங்க களத்தடுப்பை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

Wednesday, April 2, 2014

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ஒரு அலசல் - எம்.இஸட்.ஷாஜஹான்

 (இக்கட்டுரை (2-4-2014) இன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
   
கடந்த  சனிக்கிழமை (29-3-2014) நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

தேர்தல் முடிவுகள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. அந்த முடிவுகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும்  பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எச்சரிக்கை பலவற்றை விடுப்பதாக அமைந்துள்ளன.
அதேவேளை, மாற்றுத் தீர்வாக  அல்லது தெரிவாக சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையம் மக்கள் கருத ஆரம்பித்துள்ளாரகள் என்பதை முடிவுகள்